பிப்ரவரி 20, 2012


“Katyusha” பல்குழல் ரொக்கெட்கள் - பலஸ்தீனர்கள் கரங்களில் - அதிர்வில் இஸ்ரேல்

Abu Maslama 

      மெரிக்காவின் பலம் 
அதன் வான்படை தாக்குதலை 
வைத்தே நிர்ணயிக்கப்ப
டுகிறது. பிரித்தானியாவின் 
பலம் அதன் கப்பற் படையின் 
வலிமையை வைத்தே 
தீர்மானமாகிறது. ஈரானை
 பொருத்த வரையில் அதன்
 பிரதான பலம் அதன் 
ஏவுகணைகள். இஸ்ரேலின் 
டெல் அவிவ் முதற்கொண்டு 
பஹ்ரைனின் அமெரிக்காவின் பிரதான கடற்படைத்தளம் 
வரை இதன் தாக்குதல் எல்லைக்குள்ளேயே உள்ளன.
 இவற்றை நோக்கி சீறிப்பாய எண்ண முடியாத அளவு 
ஏவுகணைகள் தயாராய் இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.
இப்போது பலஸ்தீனின் ரொக்கெட்கள் இஸ்ரேலில் வந்து 
வீழ்ந்தமை இஸ்ரேலை கடுமையான நிர்பந்தங்களிற்கு 
பின் தள்ளியுள்ளது.  பீர் செவா என்பது இஸ்ரேலின் 
எல்லை நகர். அது காஸாவுடன் தொடர்புடைய பகுதியல்ல.
 மேற்குக் கரையின் ஹெப்ரோனை அண்டிய பகுதி. ஆனால் 
தாக்கப்பட்டதோ காஸாவில் இருந்து. இப்போது இந்த 
ரொக்கெட்கள் மேற்குக் கரையில் இருந்து செலுத்தப்பட்டால் 
டெல் அவிவின் நிலை கவலைக்கிடமானதாக மாற நிறையவே 
வாய்ப்புள்ளது.

இஸ்ரேலிய துணை பிரதமர்  Moshe Ya’alon கருத்து
 வெளியிடுகையில் “ மேற்குலகினால் ஈரானை அழிக்க 
மற்றும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்” எனும் 
கருத்தை வெளியிட்டிருந்தார். இதன் மறுநாள் பென்டகன்
 வெளியிட்ட குறிப்பில் “அமெரிக்காவிடம் ஈரானின் ஒட்டு
 மொத்த அனு ஆயுதங்களையும், அதன் அமைவிடங்களையும் 
அழித்தொழிக்கும் பலம் இல்லையென” சுட்டிக்கா
ட்டப்பட்டிருந்தது.

அண்மையில் “ரபெல்” (Rafael—the producer of Iron Dome) 
எனும் பிரபலமான ஆயுத உற்பத்தி நிறுவனம்
 இஸ்ரேலிற்காக இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு
 முறைமையை செய்து கொடுத்திருந்தது. எஃகினால் 
உருவாக்கப்பட்ட கேடய அமைப்பு முறை என 
இஸ்ரேலிய அரசு மார்தட்டியது. 

Sderot - ஸ்டெரோட். காஸாவிற்கு அண்மிய யூத 
சட்டவிரோத குடியிருப்பாளர்களின் நகரம்.
 காஸாவில் இருந்து ஏவப்படும் ஏவுகணைக்கு சுமார் 
வான் பறத்தலின் ஊடாக சுமார் 09 விநாடிகளில் Sderot  
இனை தாக்கலாம். கஸ்ஸாம் ஏவுகணை ஒரு
 நொடிக்கு 200 மீட்டர்கள் வரை சென்று தாக்கும் 
திறனுடையது. காஸாவின் இஸ்ரேலிய எல்லையை
 ஒட்டிய நகரான  Beit Hanunல் இருந்து ஏவப்படும் 
ஏவுகளை ஸ்டெரோடினை இதன் மூலும் பல முறை
 தாக்கலாம்.

ரபெல் நிறுவனத்தில் ஏவுகணை கவச பொறி முறை
 திட்டம் இதன் மூலம் தோல்வி கண்டுள்ளது. ரபெலின்
 முதல் தோல்வி ஆகஸ்ட் 20, 2011ல் ஆகும்.
ஒரு யுனிட் டோம் பாதுகாப்பு முறைமைக்கு செலவாகும்
 தொகை ஒரு இலட்சம் டொலர்களாகும். அதே வேளை 
ஒரு கஸ்ஸாம் ஏவகணையின் விலை வெறும் 100 
டொலர்களாகும். சுமார் 50,000 ஏவுகணைகள் இஸ்ரேலை 
தாக்க தயாராக இருக்கின்றன. இப்போது இதை 
இஸ்ரேலால் தாங்க முடியுமா? இது ஹமாஸிற்கு 
இறைவன் கொடுத் கொடையாகும்.

“Katyusha” பல்குழல் ரொக்கெட்கள் லெபனான் யுத்தத்தின் போது
 முன்பு பாவிக்கப்பட்டவை. இதையொத்த பல்குழல் 
துப்பாக்கிகளை சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகள் சில
 மாற்றங்களுடன் தயாரித்தன. ஒரு நொடியில் பல ரொக்கட்கள்
 இலக்கு நோக்கி பாய்ந்து தாக்கும் வல்லமையுடையன.

ஈழ போரில் புலிகள் முதன் முதல் இதனை கொண்டு வன்னியில் 
தாக்குதல் நாடாத்தினார்கள். அது BM-13 launcher, light BM-8, 
heavy BM-31 என மூன்று வகையானவை. மேற்கு நாடுகள்
 இதனை கிரேடில் என பெயரிட்ட போதும் உண்மையாக இவை
 ரஷ்ய தயாரிப்புக்களாகும். BM-14, BM-21, BM-24, BM-30 என்பன 
ரஷ்யாவாலும், ஈரானாலும், வடகொரியாவாலும் நவீன 
மயப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. கிரேடில் ரொக்கெட்
 லோஞ்சர்கள் ட்ரக் போன்ற வாகனங்களில் பூட்டப்பட்டு சில
 பாகை கோணங்களில் சரிக்க வல்லன.  இலங்கை இராணுவம் 
பாகிஸ்தானிய மற்றும் சீன தயாரிப்பிலமைந்த ஏவுகணை 
செலத்திகளை பல இடங்களிற்கும் அழைத்து சென்று இந்த
 ரொக்கட் தாக்குதலை நடாத்தியது. 

இப்போது இவை எவ்வாறு காஸாவிற்குள் வந்தன? இவை 
மேற்குக் கரை பகுதிக்கும் போயிருக்கலாமே போன்ற வினாக்கள்
 இஸ்ரேலிய அரசிற்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளன.
 யுத்த திட்டமிடல் முதற் கொண்டு ஒழுங்கு படுத்தல் வரை
 செய்து முடிக்கப்பட்ட நிலையில் கயூட்சாக்களின் தாக்குதல் 
என்பது இஸ்ரேலிய இராணுவத்திற்கு பெரிய பிரச்சனை கொடுக்க
 வல்லதாக உள்ளது. தாக்குதல் நாடாத்திய மறு நிமிடம் அதனை 
பிறிதொரு பகுதிக்கு இலகுவாக நகர்த்தி விடலாம். பதில் 
தாக்குதலை இலக்கு நோக்கி நடாத்த முடியாத நிலை 
இஸ்ரேலிற்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக