ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன் ஆட்சி : அமெரிக்க ராணுவ தகவல்
ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நேட்டோ படைகளின் வெளியேற்றத்துக்கு பின் பாகிஸ்தானின் மறைமுக உதவியுடன் ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வரும் என்று ரகசிய அமெரிக்க ராணுவ தகவலை மேற்கோள் காட்டி அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இது குறித்து கேட்கப்பட்ட போது நேட்டோவின் செய்தி தொடர்பாளர் ஜிம்மி கம்மிங்ஸ் அமெரிக்க ராணுவ தகவலை உறுதி செய்தார். ஆனால் அது நேட்டோ படைகள் வெளியேற்றத்தின் பிறகு ஆப்கனில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்த பல்வேறு வாய்ப்புகள் குறித்த அறிக்கையே என்று கூறினார்.
அதை முழுமையான ஆய்வறிக்கை அல்ல என்று ஜிம்மி கூறினாலும் இவ்வறிக்கை அமெரிக்காவின் தோல்வியை காட்டுவதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். ஹமீது கர்சாயின் அரசு மற்றும் அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொள்ள கூடாது என்ற தாலிபானின் வாதத்துக்கு வலு சேர்ப்பதாக இவ்வறிக்கை உள்ளது.
நேட்டோவின் கடைசி படைகள் 2014ம் ஆண்டு வெளியேற முடிவெடுத்துள்ள நிலையில் இவ்வறிக்கை அமெரிக்காவுக்கு மிகவும் பின்னடைவாக கருதப்படுகிறது. இவ்வறிக்கை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் தாம் ஆப்கனின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதில்லை என்று தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக