பிப்ரவரி 29, 2012


இஹ்திஸாப் சுயபரிசோதனை

த˜ஜ்கியா விற்கான முதல் நிலை அமைப்பு இஹ்திஸாப் ஆகும்.

இஹ்திஸாப் என்றால் சுய பரிசோதனை என்று பொருள்

அதாவது தன்னைத் தானே. தன்னுடைய அமல்களைத் தானே - சோதித்துக் கொள்வது ஆகும்!.


வான்மறையில் வல்ல இறைவன் கூறுகிறான்˜
'இறைநம்பிக்கை! கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள். மேலும் நாளைய தினத்திற்காக எதனைத் - தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று ஒவ்வொரு மனிதனும் (எண்ணிப்) பார்க்கட்டும்!' (59˜18)


'நாளைக்காக எவ்வெவ்வற்றை சேகரித்துக் கொண்டுள்ளீர்கள் என்று கணக்கெடுக்கும்படி அல்லாஹ் இவ்வசனத்தில் அறிவுறுத்துகிறான்.
என்று கூறுவார்கள்.

அதாவது - 'நீங்கள் விசாரிக்கப்படும் முன்னால் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள்!'


இஹ்திஸாப் - ஒரு முஃமினுடைய தவிர்க்க இயலாத பண்பாகும்.

இஸ்லாமிய இயக்கம் தங்கள் உறுப்பினர்களிடையே இம்முறையை தீவிரமாகப் பின் பற்றியும் வலியுறுத்தியும் வருகின்றது.

அண்ணாரின் இயக்கந்தொட்டு இன்றுள்ள இயக்கங்கள் வரையிலும் இம்முறை பின்பற்றப்படுவதை நம்மால் காணமுடிகின்றது.


இஹ்திஸாப் இரண்டு வகைப்படும்.


1. தனி நபர் பரிசோதனை



2. கூட்டுப் பரிசோதனை



இவ்விரண்டையும் தனித்தனியாக அறிவோம்.

(1). தனிநபர் சுய பரிசோதனை

மனிதன் தன் அன்றாட வாழ்வில் காலை முதல் இரவு - வரை எத்தனையோ காரியங்களைச் செய்கின்றான்.

இறைவனுக்குப் பிடிக்காத இறைவனின் வெறுப்புக்கு ஆளாக்குகின்ற பலப்பல காரியங்களையும் அவன் செய்து விடுகின்றான்.

எப்படி அவற்றைக் களைவது? அவற்றிலிருந்து விலகி இருப்பது எப்படி?


தின்ந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை - காலை சுபஹ் தொழுகைக்கு முன்போ அல்லது இஷாவுக்குப் பின்பு படுக்கையில் அமர்ந்து தூங்கும் முன்போ - ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.


தூக்கத்தின் முந்தைய நேரம் சிறப்பானதாகும்.

தூங்கும் முன படுக்கையில் உட்கார்ந்த நிலையில் அன்றைக்கு காலையில் தூங்கி விடிந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை நாம் செய்த எல்லா செயல்களையும் மனதில் பட்டியலிட்டு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்!

இன்றைக்கு காலையில் சுபுஹுக்கு சரியான நேரத்தில் எழுந்தோமா? சுபுஹ் தொழுகையை ஜமா அத்தோடு நிறைவேற்றினோமா? என்று ஆரம்பித்து ஒவ்வொன்றாக ஒன்றன்பின் ஒன்றாக பட்டியலிட்டுக் கொண்டே வரவேண்டும்.

நம்முடைய ஒரு நாளின் அனைத்து செயல்களும் நம் கண்முன்னே வந்தபின் அவற்றை முழுமையாக சீர்தூக்கிப் பார்த்தால் அவற்றில் உள்ள நிறைகுறைகள் நமக்குத் தென்படும்.

நம்முடைய சிறுசிறு தவறுகள் குறைகள் நம் பார்வையில் படும்.

நாம் நம்முடைய பெற்றோர்களின் பேச்சை மதியாது இருந்திருப்போம்!

அவர்களை உதாசீனப்படுத்தியிருப்போர்;

மனையாளை தேவையில்லாமல் கடிந்துரைத்திருப்போம்;

தேவையில்லாமல் பக்கத்துவீட்டுக் காரரிடம் சண்டை பிடித்திருப்போம்;

யாரையவாது தேவையில்லாமல் திட்டி இருப்போம்;

கோபப்பட்டிருப்போம்..............

அது போன்றே இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க யாரிடமாவது இஸ்லாமியக்கொள்கை கருத்துகளைத் தெரிவிக்க சந்தர்ப்பம் வாய்த்தும் அதனைத் தவற விட்டிருப்போம்...........

அல்லது யாராவது ஒருவர் நம்மிடம் இஸ்லாம் பற்றி சந்தேகங்கேட்கையில் தெளிவாக விளக்க இயலாது தடுமாறியிருப்போம்................


இப்படியாக இவை அனைத்தும நம்முடைய கவனத்துக்கு வரும் போது ஒரு நாள் வாழ்க்கையின் மேடுபள்ளங்கள் அமல்களில் ஏற்பட்டிருந்த ஏற்ற இறக்கங்கள் யாவும் ஒரே பார்வையில் நேர்க்கோட்டில் வந்து நின்று விடும்.

எதை நாம் சீர்திருத்த வேண்டும்?

நம்மிடம் உள்ள எந்தெந்த தீய பண்புகளைக் குறைக்கவேண்டும்? என்பதையெல்லாம் நாம்அறிந்து கொள்ளலாம்;

நம்மிடம் முன்கோபம் உள்ளது;

நம்மிடம் அலட்சிய மனப்பான்மை உள்ளது;

அமல்களை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதைத் தடுக்கும் அசட்டைப் போக்கு உள்ளது;

பொறுப்பற்ற தன்மை உள்ளது எனப்பல சிறுசிறு குறைகள் தென்படும்.


இன்ஷா அல்லாஹ் இவற்றையெல்லாம் நான் எனது நாளைய வாழ்வில் தவிர்த்துக் கொள்வேன் என்று வைராக்கியம் பூண்டு கொள்கிறோம்

மறுநாளிலேயே இவை அனைத்தையும் நம்மால் களைய இயலாது;

ஆனால் ஆரோக்கியமான முன்னேற்றம் கண்டிப்பாக ஏற்படும்.

இவ்வாறு சில நாட்களில் பெரும்பாலான தவறுகள் நம்மை விட்டு நீங்கிவிடுவதை நாம் அனுபவ பூர்வமாக உணரலாம்.

அமல்கள் நாளுக்கு நாள் பொலிவடைவதையும் நம்மால் பார்க்க இயலும்.

(2) கூட்டு இஹ்திஸாப்

தனிநபர் இஹ்திஸாப் மூலமாக பெரும்பாலான நம்முடைய குற்றங்குறைகளை தப்புத் தவறுகளை களைய முடியும் என்றாலும் அது குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே செயற்படும்.


அவ்வெல்லையைத் தாண்டி அதனால் செயற்பட இயலாது போகும்.

சில பல தவறுகளை சீர்படுத்துவதில் அது உதவிகரமாய் இராது.

உதாரணமாக நாம் சில செயல்களை 'தவறு என்றே கருத மாட்டோம்;

அவை நல்லவை என்று நினைத்தே செய்து வருவோம்.

நாமே அவற்றை நன்று என்று கருதுவதால் நம்முடைய 'தவறுகள் பட்டியலில் அவை இடம் பெறாது.


ஆனால் உண்மையில் அவை தவறான செயல்களாகவே இருக்கும்.

இப்பேற்பட்ட செயல்களைச் சீர்திருத்துவதில் தனிநபர் இஹ்திஸாப் பயனுள்ளதாக இராது.

அவ்வாறே சில தவறான செயல்களுக்கு நாம் சிறு வயதிலிருந்தே அடிமையாக ஆகி இருப்போம்


அதாவது தொடர்ந்து செய்து வருவதன் காரணமாக நம்மீதான அதன் தாக்கம் வீரியமுள்ளதாக மாறிப் போயிருக்கும்.

இவ்வகைத் தவறுகளை களையெடுப்பதிலும் சுய இஹ்திஸாப் பெரும்பங்கினை எதுவும் ஆற்ற இயலாது.


ஆக இத்தகைய தவறுகளை நீக்குவதில் நம்முடைய 'உள்ளிலிருந்து செயற்படும சக்தி' பயனற்றுப் போவதால் 'வெளியிலிருந்து செயல்படும் சக்தி' யொன்றை நாம் நாட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

அதுவே 'கூட்டு இஹ்திஸாப்'


இறைபாதையில் முன்னேறிச் செல்லும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் பலர் ஒன்றுகூடி தங்களுடைய அஃமால்களை சீர்திருத்தி முறைப்படுத்திக் கொள்வதையே நாம் 'கூட்டு இஹ்திஸாப் என்றழைக்கின்றோம்.


கீழ்வரும் இறைவசனம் இதை உறுதிப்படுத்துகிறது.


இறைநம்பிக்கையுள்ள ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வார்கள்.
உற்ற தோழர்களாக இருப்பார்கள்;
உறுதுணையாகத் திகழ்வார்கள்;
நன்மையான செயல்களை (தங்களுக்கிடையிலும் பிறரிடத்திலும்) ஏவிக் கொள்வதிலும் தீமையான செயல்களை விட்டு (தங்களையும் பிறரையும்) காத்துத் தடுத்து நிறுத்துவதிலும் தொழுகையைநிலைநாட்டுவதிலும்இ ஜகாத்தை முறைப்படி கொடுத்து வருவதிலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முழுமையாகக் கட்டுப்பட்டு வாழ்வதிலும் இவர்கள் தங்களுக்கிடையில் உதவியாளர்களாக விளங்கி வருவார்கள்.


தங்களுக்கிடையில் தவறுகளை சுட்டிக்காட்டி தவிர்த்துக்கொள்ளச் செய்வதிலும் முன்னேற்றப் பாதையில் வளர்ச்சிப் படிகளை மென்மேலும் அடைய இன்னும் என்னென்ன அமல்களை செய்ய வேண்டும்?

என்னென்ன அமல்களை அதிகரிக்க வேண்டும்?

என்னென்ன அமல்களை அழகாக்க வேண்டும்? என்பதனையெல்லாம் தங்களுக்கிடையே பரிமாறிக் கொள்கிறார்கள்.

இப்பண்பினைத் தான் கண்ணாடியின் பண்போடு உருவகப்படுத்திக் கூறியுள்ளார்கள் அண்ணல் எம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.


'ஒரு முஃமின் இன்னொரு முஃமினுக்கு கண்ணாடியைப் போன்றவன் ஆவான்!' (புலூகுல் மராம்)


கண்ணாடி நம்மை - தன்முன் நிற்பவரை - அப்படியே பிரதிபலிக்கின்றது.

உங்களுடைய முகத்தில் அழுக்கோஇ அடுப்புக்கரியோ ஒட்டியிருந்தால் அதை அப்படியே வெளிப்படுத்தும்.

உங்கள் முகப்பூச்சு அதிகமாகிப் போனால் அதையும் சுட்டிக்காட்டும்.

கண்ணாடியில் தெரிவது நம்முடைய அச்சு அசலான பிம்பம்!

நாம் கண்ணாடியில் நம்முடைய குறைகளைக் கண்டு நம்மை அழகுபடுத்திக் கொள்கின்றோம்.


அவ்வாறே ஒரு முஃமினை இன்னொரு முஃமினை அப்படியே பிரதிபலிக்கின்றன.

அவனுடைய குறைகளைச் சுட்டிக்காட்டி மேலும் அவனை அழகுபடுத்துவதில் முனைகிறான்.

அவ்வாறே தன்னுடைய குற்றங்குறைகளை அவனிடமிருந்து அறிந்து கொண்டு தன்னையும் அழகாக்கி அழகானவான ஆக்கிக் கொள்கின்றான்.


கூட்டு இஹ்திஸாப் முறையில் இதைத்தான் நாம் கையாள்கிறோம்.

அங்கு அமர்ந்திருந்திருப்போரில் ஒவ்வொருவரும் தானாக முன்வந்து தன்னைப்பற்றிய தன்னுடைய அமல்களைப் பற்றிய சுயவிமர்சனத்தை முன்வைப்பர்.

பிறகு அதன் மீதான ஆய்வும்இ சுட்டிக் காட்டலும்இ சீர்படுத்துதலும் நடைபெறுகின்றது.

கீழ்வரும் விஷயங்களின் கீழ் சுய விமர்சனம் செய்யபடுகின்றது.


(இங்கே முன்னேற்றபப பாதையில் உங்களுடைய நிலைக்குத் தக்கவாறு விமர்சனமும் மாறுபடும.

ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ஜமாஅத் தொழுகையை மட்டுமே குறிப்பிடுவர்.

அடுத்த நிலையில் உள்ளோர் சுனன் நவாஃபில் தொழுகைகளையும் குறிப்பிடுவர்.

அதனையடுத்து உள்ளோர் இரவுத் தொழுகையையும் குறிப்பிடுவர்.

இவ்வாறே ஒவ்வொரு இபாதா-விலும் அவரவர் நிலைக்கேற்றாற்போன்று விமர்சனம் மாறுபடும்)


அதனையடுதது தினசரி தொடர் குர்ஆன் ஓதுவது;

ஹதீஸ் ஆய்வு செய்வது மற்ற இஸ்லாமிய நூற்களை வாசிப்பது என்பன பற்றி கூறுவர்.


2. பெற்றோர்கள் சகோதர சகோதரிகள் மனைவி ஏனைய உறவினர்களோடு தன்னுடைய தொடர்பும்இ போக்குவரத்தும் எந்த அளவு உள்ளது?

அண்டை அயலார்கள்இ நண்பர்களோடு எந்த அளவு தொடர்பும் உறவும் உள்ளது? என்பதைப் பற்றிக் கூறுவர்.


இவ்விதம் ஒருவர் தன்னைப் பற்றிய முழுமையான சுய விமர்சனத்தை வைத்த பின்பு அதனைப் பற்றி யாருக்கும் ஏதேனும் ஐயங்கள் இருந்தாலோ தெளிவு பெற வேண்டிய இருந்தாரோ அதனை விரிவாக்க கேட்டுக் கொள்வர்.

அவருடைய நடத்தைகளில் ஏதேனும் குறைகள்முறைகேடுகள் தென்பட்டு சீர்திருத்த வேண்டி இருந்தால் அவற்றையும் சரிப்படுத்துவர்.


இதுவே கூட்டு இஹ்திஸாப்பின் நடைமுறை!


அண்ணலெம் பெருமானார் சல்லல்லாஹி அலைஹி வசல்லிம் அவர்கள் கூறியுள்ளதாவது
'

ஒரு முஃமின் இன்னொரு முஃமினுக்கு கட்டிடத்தைப் போன்றவன் ஆவான். அதன் ஒரு பகுதி இன்னொரு பகுதிக்கு (முட்டுக்கொடுத்து) வலிமைப்படுத்துகின்றது' -

பிறகு அண்ணலார் தம்முடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.


குறைகளை மறைத்தும்இ குறைத்தும் நிறைகளை வளர்த்தும்இ உயர்த்தியும் ஒருவருக்கொருவர் செயல்பட்டால்தான் உறுதுணையாகஇ வலிமைப்படுத்துபவர்களாகத் திகழ முடியும்.

அதற்கு 'கூட்டு இஹ்திஸாப் முறை சிறப்பான முறையில் பயன்படுகிறது.
நாம் சாலிஹீன்களாக சான்றோர்களாக மாறவேண்டும் என்பதற்காகத் தான் இது போன்ற நடைமுறைகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆகையால் தன்னைப் பற்றித் தானே விமர்சிக்கலாமா?

தன் அமல்களை தானே வெளிப்படுத்தலாமா?

பிறருடைய குறைகளை இது துருவிஆராய்வது போல் அமையாதா?...........

இன்னும் இவை போன்ற கேள்விகள் எழுவதெல்லாம் வாய்ப்பே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக