ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடாதென அமெரிக்கா, பிரிட்டன் இஸ்ரேலுக்குஅழுத்தம்
ஈரானின் அண்மைய செயற்பாடுகளால் இஸ்ரேல் அதன் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியன எச்சரித்துள்ளன. எனினும் அவ்வாறானதாக்குதல்களை முன்னெடுக்கக் கூடாது என மேற்படி நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன.ஈரான் தனது யுத்த கப்பல்களை சூயெஸ்கால்வாயூடாக மத்தியதரை கடலுக்கு கொண்டுசென்றுள்ளது. அந்த யுத்தக் கப்பல்கள் தற்போது
சிரியாவின் டார்டவ்ஸ் துறைமுகத்தில் நங்கூரம்இடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈரான் தனது அணுசக்தி செயற்பாடுகள்குறித்து அண்மையில் அறிவித்தன. இந்த நிலையில் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புஇருப்பதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹக் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகளின்தளபதி மார்டின் டெப்சி ஊகம் வெளியிட்டுள்ளனர்.எனினும் இவ்வாறான தாக்குதல் முழு பிராந்தியத்திலும் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும் என்றுஎச்சரித்துள்ளன. எனவே ஈரான் மீதான சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க மேலும் கால அவகாசம்தேவைப்படுவதால் இஸ்ரேல் அதற்கு வழிவிட வேண்டும் என இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன.
ஈரான் மீதான தாக்குதல் முன் யோசனையற்ற செயல் என மார்டின் டெப்சி கூறியுள்ளதோடு அதுசரியான செயலல்ல என வில்லியம் ஹக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமெரிக்க கூட்டுப்படைகளின் தளபதி மார்டின் டெப்சி சி. என். என்.தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திறன், இஸ்ரேலுக்குஇருக்கிறது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அது ஒரு சில ஆண்டுகளாகக் காத்து நிற்கின்றதுஎன்றார்.
இதில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அதற்கு எதிராக வளைகுடா மற்றும்ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க இலக்குகள் மீது பதில் தாக்குதல்கள் நடத்தப்படும்வாய்ப்பு உள்ளது.
எனவே, இந்த சூழ்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த முற்படுவது முன்யோசனை அற்ற செயல்என மார்டின் டெப்சி தெரிவித்தார்.
இந்நிலையில் இஸ்ரேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் உபாமாவின்பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் டொம் டொனிலொன் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின்நெதன்யாகு மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் எகுட் பராக் ஆகியோரைச் சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும் இந்த சந்திப்பின் போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள்தொடர்பில் செய்தி வெளியாகவில்லை.
இவ்வாறான சந்திப்புகள் ஆசாதாரணமாக நிகழ்வது என கூறியுள்ள சர்வதேச ஊடகங்கள், ஈரான்மீதான தாக்குதல், முயற்சியை கைவிட, வெள்ளை மாளிகை பாதுகாப்பு ஆலோசகர் அழுத்தம்கொடுத்திருக்க வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளன.
இது தொடர்பில் பி. பி. சி. தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்த பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்வில்லியம் ஹக், ஈரான் விவகாரம் தொடர்பில் சர்வதேச அழுத்தத்தை பிரயோகிப்பது மற்றும்ராஜதந்திர முயற்சியில் அணுகுவதே பிரிட்டன் அரசின் செயற்பாடாகும் என தெரிவித்துள்ளார்.
‘‘இந்த சந்தர்ப்பத்தில் இஸ்ரேல், ஈரான் மீது இராணுவ நடவடிக் கையை முன்னெடுப்பது சரியானசெயலில்லை என நான் நினைக்கிறேன். இது தொடர்பில் இஸ்ரேல் சர்வதேசத்தின்செயற்பாடுகளுக்கு வழிவிட வேண்டும். இது தொடர்பில் ஈரான் மீது மேலும் பொருளாதாரத்தடைகளை விதித்து அழுத்தம் கொடுக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது” என்றார்.
ஈரான் மீதான பதற்றம் மேலும் அதிகரித்தது
இந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் இருந்து 156 கி. மீ. தென்மேற்கில் உள்ள கோம் நகரின்போர்டோ பகுதியில் இயங்கிவரும் யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் நவீன ரக கருவிகளைநிறுவும் பணிகள் துவங்கப்பட்டுவிட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கடந்த சனிக்கிழமை பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்எகுத் பராக், ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு மத்திய கிழக்கில் ஆயுதப் போட்டியை உருவாக்கும்என்பதால், அந்நாட்டின் மீது சர்வதேச சமூகம் கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்எனக் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே ஐ. நா. அணு சக்தி கண்காணிப்பகத்தின் தூதுக்குழு நேற்று ஈரானை சென்றடைந்தது.ஐந்து பேர் கொண்ட இந்தக் குழு ஈரானின் அணு சக்தி செயற்பாடுகள் குறித்து அந்நாட்டு அரசுபேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தக் குழு கடந்த மாதம் ஈரானுக்கு சென்றிருந்த போது சில அணு சக்தி நிலையங்களை ஆய்வுசெய்ய அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஈரான் இராணுவம் இரண்டு நாள் போர்ப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. மத்தியஈரானின் யஸ்த் பகுதியில் கடந்த இரு தினங்கள் இந்தப் போர்ப் பயிற்சி இடம்பெற் றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக