பிப்ரவரி 13, 2012

மாலத்தீவு கலவரமும், அமெரிக்க தலையீடும்

சாகரன்
இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் அரசியல் நெருக்கடியும் கலவரமும் தீவிரமடைந்துள்ளநிலையில், அந்தச் சூழலை பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா முயற்சியில் இறங்கியுள்ளது. மிகவும்கேந்திரமான கடல்பகுதிக்குள் அமைந்திருக்கும் மாலத்தீவை தனது தளமாக்க நீண்டகாலமாகமுயற்சித்து வரும் அமெரிக்கா, அந்நாட்டிற்கு தனது வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட்பிளேக்கை அனுப்பியுள்ளது.
தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் தனது வலுவான தளத்தை பிலிபைன்ஸ், பாகிஸ்தான் போன்றஇடங்களில் இழந்த அமெரிக்கா இப் பிராந்தியத்தில் தனது தளத்தை அமைக்க ஒரு நாட்டை தேடிவருகின்றது பல காலமாக. சீன, இந்திய நாடுகளின் அமிர்தமான பொருளாதார வளர்ச்சிஎதிர்காலத்தில் உலகில் பலம் மிக்க நாடாக இவை தம்மை மேலும் உறுதிப்படுத்துவதை அமெரிக்காவிரும்பப் போவதில்லை. இதற்கு பாகிஸ்தானை உபயோகப்படுத்த முயன்று, 'தலிபான்' என்றவிடயத்தால் பாகிஸ்தானுடன் 
விரசலை ஏற்படுத்தியிருக்கின்றது அமெரிக்கா.
ஏற்கனவே 30 வருடங்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் இல் அமெரிக்க பொம்மை மார்க்கோசின்வீழ்ச்சியால் அங்கும் தமது தளங்களை நிலை நிறுத்த முடியாமல் போனது. ஜப்பானிலும் மக்களின்எதிர்ப்பு வலுவடைந்து வரும் நிலையில் இன்றோ நாளையோ என்று தளங்களை அகற்ற வேண்டியநிர்பந்தம் ஜப்பான் அரசால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டு வருகின்றது.
அமெரிக்க சார்பு சரத் பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனும் இலங்கைஜனாதிபதியாக்க அமெரிக்கா எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இந் நிலையில் போர்க் குற்றம்என்று கூறிக்கொண்டு இலங்கைகுள் புக முயன்று வரும் அமெரிக்கா, இலங்கை அரசின் சீன, ரஷ்ய,ஈரான், இந்திய உறவுகளால் சாதிக்க முடியாமல் போய் விட்டது என்பதை அண்மைய அரசியல்நிகழ்வுகள் கட்டியம் காட்டி நிற்கின்றன. எனவே இலங்கை போன்ற இன்னும் ஒரு கேத்திரமுக்கியத்துவம் நிறைந்த மாலை தீவு போன்ற நாடுகளில் தனது கவனத்தை அமெரிக்காதிருப்பியிருக்கின்றது.
லிபியாவில் ருசி கண்ட பூனைகள் தொடர்ந்தும் சிரியா, ஈரான் என்று அகலக் கால் வைக்கவிரும்புகின்றன. ஆனால் இது லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போல் சுலபமான விடயம் அல்ல.லிபியா விடயத்தில் சீனாவையும் ரஷ்யாவையும் ஒன்றைச் சொல்லி வேறு ஒன்றைச் செய்யும்நிலைமையை ஏற்படுத்தி 'ஏமாற்றி' யதை அவர்கள் சிரியா விடயத்தில் எச்சரிக்கையாக நடக்கவும்வீட்டோ உரிமையை பாவித்து நேட்டோ, ஐரோப்பிய கூட்டணிகளின் சதிகளை முறியடிக்க ஏதுவாகஇருந்தன. ஈரானிடம் சும்மா 'வாலாட்ட' முடியாது என்று அமெரிக்காவிற்கு தெரியும்.
இந் நிலையில் தற்போது அமெரிக்காவிற்கு கிடைத்துள்ள 'அரிய' வாய்ப்பு மாலை தீவில்ஏற்படுத்தப்பட்ட வலிந்த ஆட்சி மாற்றம். ஒரு நாளில் ஏற்பட்ட 'கலகம்' மக்களின் அமோக ஆதரவில்வென்ற ஜனாதிபதியை சுயவிருப்பின் பேரில் இராஜினமா செய்தது நம்பும் படியாக இல்லை.எதிர்காலத்தில் 'விக்கிலீக்ஸ்' க்குகள் உண்மையை உடைக்காமலா விடப் போகின்றன. இந்த வலிந்தஆட்சி மாற்றத்தை பாவித்து எப்படியாவது தாம் நினைப்பதை நிறைவேற்றி விட அமெரிக்கா முழுவீச்சில் செயற்படNவு முனைகின்றது. தனக்கு சாதகமான 'பொம்மை அரசை' ஆசீர்வதித்து நிறுவவிரைந்திருக்கின்றனர் மாலை தீவிற்கு அமெரிக்க 'இராஜ தந்திரிகள்' இவர்களுக்கு மாலை தீவு மக்கள்நல்ல பாடம் புகட்டுவார்கள் என்றே நாம் நம்புகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக