யெமனில் அல்-காய்தா - அச்சத்தில் அப்துல்லாஹ்!
Abu Maslama:
அல்-காய்தா. இன்று உலக
ஊடகங்கள் உச்சரிக்க
மறுக்கும் சொல். ஏன் வெறுக்கும்
சொல் என்று கூட சொல்லலாம்.
ஈரான் மீதான அமெரிக்காவின்
தாக்குதல், இஸ்ரேலின் ஈரான்
மீதான தாக்குதல், வோல் ஸ்ட்ரீட்
ஆர்ப்பாட்டம், சிரிய நண்பர்
களிற்கான ஆதரவு, கர்ளாவியின்
சிரிய எதிர்ப்புரைகள் என
சினிமாவில் உலகம் மயங்கி நின்ற போது யெமனிலும், ஆபிரிக்காவிலும்
அல்-காய்தாவின் வேகம் கண்டு மிரண்டு போயுள்ளன இந்த ஊடகங்கள்.
ஆப்கானிற்கு ஒரு வியூகம், அராபிய வளைகுடாவிற்கு இன்னொரு வியூகம்,
ஆபிரிக்காவிற்கு ஒரு வியூகம் தனது செயற்பாடுகளை பிரமாண்டமாக விஸ்த
ரித்துள்ளது அல்-காய்தா. களங்கள் எல்லாவற்றிற்கும் அராபிய முஜாஹிதீன்கள்
தலைமை வழங்கும் நிலை மாறி அந்த பிரதேச மக்களே அவர்கள் போராட்டத்தை
முன்னெடுக்குமளவிற்கு அல்-காய்தா தன்னை மக்கள் இயக்கமாக மாற்றியதில்
வெற்றி கண்டுள்ளது. மக்கள் இயக்கமாக மாறுவதென்றால் அதன் கொள்கைகள்
ஜனரஞ்சகப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். இந்த இரண்டிலுமே வெற்றி
கண்டுள்ளது அல்-காய்தா.
மக்கள் இயக்கமாக தங்கள் அரசியல்
வேலைகளை முன்னெடுத்து வெற்றி கண்டன.
ஹிஸ்புத் தஹ்ரீர் முஸ்லிம்களிடையே தனது
வேலை திட்டத்தை மேற்கொண்ட போதும் அது
இன்னும் ஜனரஞ்சகமாகவில்லை.
“சத்தமில்லாமல் யுத்தம்” எனும் வார்த்தைக்கு
முன்னுதாரணமாக செயற்பட்டுள்ளது
அல்-காய்தா. மாலியில், சோமாலியாவில்,
சூடானில், எதியோப்பியாவில் என அது தன்
எல்லைகளை அகட்டி செல்கிறது.
அல்-காய்தாவின் அராபிய பிரதேச செயற்பாடுகளின் முக்கிய தளம் யெமன்.
யெமன் படையினர் திடீர் தாக்குதல்களை, சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு
பல போராளிகளை படுகொலை செய்துள்ளனர். யெமனின் சண்டை விமானங்கள்
பல ஏவுகணை வீச்சில் ஈடுபட்டுள்ளன. போதாததற்கு அமெரிக்காவின் ட்ரோன்
விமானங்கள் அடிக்கடி யெமன் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடாத்துவது
வாடிக்கையான விடயம். போராளிகள் தங்கள் தளங்களை நகரும் தளங்களாகவே
இதுவரை காலம் தக்க வைத்திருந்தனர்.
இப்போது நிலைமைகள் தலைகீழ் மாற்றங்களிற்கு ஆளாகியுள்ளன. யெமனிய
படையினரை தேடிச்சென்று தாக்குதல் நடாத்தும் அளவிற்கு போராளிகள் ஷிஹாரா,
ஸாடான், அல் ஹீரையா, அம்ரான் போன்ற பகுதிகளில் வெளிப்படையாகவே
நடமாடுகின்றனர். தாக்குதல் நடாத்த வரும் படையினரை திருப்பி தாக்குகின்றனர்.
ஒரு வகையான மரபுவழி தாக்குதல் அணியாக தம்மை தயார்படுத்தியுள்ளனர்.
யெமனின் சில பகுதிகளினுள் யெமனிய இராணுவம் செல்ல முடியாத நிலைமைகள்
ஏற்பட்டுள்ளன. டொயோட்டா பிக்அப் ரக வாகனங்களில் அணிவகுப்புக்கள்
நடாத்தப்படுமளவிற்கு இன்றைய அல்-காய்தா பலமான சக்தியாக மாறி நிற்கிறது
யெமனில். அபியான் மாகாணத்தின் ஸின்ஜிபார் எல்லையிலிருந்து 145 கிலோ
மீட்டர் தொலைவில் இருந்து யெமனிய இராணுவ முகாம் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.
கவச வாகன படையணி மீதே இந்த தாக்குதல்
நடாத்தப்பட்டுள்ளது. முகாமை முற்றாக சுற்றி
வளைத்து தாக்குதலை மேற்கொண்ட
அல்-காய்தா போராளிகள் சுமார் 140
இராணுவத்தினரை கொன்றொழித்து,
படைத்தளத்தின் பல பகுதிகளை கைப்பற்
றியுள்ளனர். 260 இற்கும் மேற்பட்ட காயப்பட்ட
யெமனிய இராணுத்தை கொலை செய்யாமல்
விட்டு சென்றுள்ளனர். காயப்பட்ட ஒரு யெமனிய
லெப்டினன்ட் தனக்கு அல்-காய்தா போராளி ஒரு தண்ணீர்
போத்தலை வீசி விட்டு போனதாகவும்,
இவ்வாறான மனிதாபிமானமிக்க எதிரியை தான் கண்டதில்லை
எனவும் கூறியுள்ளார்.
அல்-காய்தாவின் அராபிய பிராந்திய கட்டளை மையம் மேற்படி தாக்குதலை
ஷஹாதத் தாக்குதல் என வர்ணித்துள்ளது. 16 போராளிகள் ஷஹீதாக்கப்பட்
டதாகவும், 24 போராளிகள் காயமடைந்ததாகவும் அறிவித்ததுடன் லாடர் பிரதேசம்
தங்கள் போராளிகளால் மும்முனைகளில் சுற்றி வளைக்கப்பட்டதாகவும்
பெருமளவு ஆயுத தளவாடங்கள், கவச வாகனங்கள், வெடிபொருட்கள் போன்றன
கைப்பற்றப்பட்டதாகவும் அறிவித்துள்ளது. லாடர் பிரதேசம் முற்றாக இன்று
அல்-காய்தா போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
யெமனிய அரச படைகள் பெருமெடுப்பில் ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை
மேற்கொள்வது தொடர்பான தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது
ஸன்னா உட்பட யெமனின் அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் பரவலாக கெரில்லா
தாக்குதலின் முக்கிய பண்பான “தாக்கி விட்டு ஓடும் - ஹிட் அன்ட் ரன்” உக்தி
மேற்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக