ஏப்ரல் 10, 2012


ரஷ்ய போர் கப்பலின் சிரிய வருகை சொல்லும் செய்திகள்......

Abu Maslama    
ரஷ்யாவின் வெளிவிவகார 
அமைச்சர் Sergey Lavrov 
அமெரிக்க நேட்டோ கூட்டணிக்கு 
சிரியா மீதான தாக்குதல் 
எதுவும் நடக்க கூடாது என 
கடுந்தொனியில் எச்சரிக்கை 
விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் 
சபையின் பிரேரனைகள் 
தோற்கடிக்கப்பட்ட பின்பும் 
குறுக்கு வழிகளில் அமெரிக்க 
மற்றும் மேற்கின் அரசுகள் சிரியா 
மீதான சடுதியான தாக்குதலை மேற்கொள்ள முற்பட்டால் சிரியாவிற்கு ரஷ்யா உதவ 
தயங்காது என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அரபு நாடுகளின் சிரிய விடுதலை 
இராணுவத்திற்கான ஆயுத மற்றும் நிதியுதவி தொடர்பான தீர்மானங்களினதும், 
அமெரிக்காவின் சிரியா மீதான அழுத்தமான எச்சரிக்கையினதும் பின்பே 
சேர்ஜேய் லவ்ரோவ் இவ்வாறு தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த 
கருத்தானது வெறும் அரசியல் வரிகளால் நிரப்பப்பட்ட செய்தியாக நோக்க 
முடியாத ஒன்றாகவே உள்ளது. இதில் மூன்றாம் உலக யுத்தத்திற்கான 
ஆரம்ப பொறி வரையான ஆழமான கருத்துக்கள் உள்ளன என்பதை 
உணர்தல் வேண்டும்.

ரஷ்யாவின் ஏவுகனை எதிர்ப்பு போர் கப்பலான  Missile Destroyer Semllivy 
கருங்கடலில் இருந்து புறப்பட்டு இப்போது சிரியாவின் கடற்படை 
துறைமுகமான   Tartus இனை வந்தடைந்துள்ளது. இது வந்தடைந்தது 
மட்டுமல்லாமல் இந்த கடற்கலத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இதற்கான 
துனை கடற்கலங்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றன. நேரடியாக சிரய 
கடற்தளத்திற்கு வராமல் ஈரானிய கடற்பகுதி வரை சென்றே இவை மீண்டும் 
சிரியா வரை வருகின்றன. இதிலிருந்து சிரயாவும், ஈரானும் ரஷ்யாவின் 
நெருங்கிய இராணுவ தோழமை நாடுகள் என்பதை ரஷ்யா குறிப்பால் 
உணர்த்தியுள்ளது.

அமெரிக்க இஸ்ரேலிய கூட்டு கடற்படை பயிற்சிகளின் பின்னர் ரஷ்யாவால் 
மேற்கொள்ளப்பட்ட கிழக்கு மத்திய தரை கடல் கடற் பயிற்சிகள் சில அமெரிக்க 
சமிக்ஞைகளிற்கான பதில்களாய் அமைந்துள்ளன எனலாம். இஸ்ரேலிய 
துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியுள்ள அமெரிக்க நீர்மூழ்கி கலங்களிற்கு - 
ASW - SUBMARINE WARFARE UNIT பதிலளிக்கும் வகையிலேயே இந்த ரஷ்ய 
ஏவுகனை கப்பல் சிரிய கடற்தளத்தில் தரித்து நிற்கின்றது. இதன் துணை 
கலங்கலாக வருகை தரவுள்ள கலங்களில் டொர்பிடோ போட்கள் 
இணைந்துள்ளமை இஸ்ரேலிற்கு சில வலிதான செய்திகளை சொல்ல 
வல்லனவையாக உள்ளன. Missile Destroyer Semllivy யில் கடலிற்கு அடியில் 
சென்று இலக்கினை தாக்கும் ஏவுகணைகள் அண்மையிலேயே பொருத்தப்பட்டன. 
கூடவே கடலில் இருந்து தரையை நோக்கி பாயும் ஏவுகணைகளும் 
பொருத்தப்பட்டுள்ளன. Dual Action Distroyer ஆக தொழில்படவல்ல நவீன வசதிகள் 
இதில் உண்டு. கடல் சண்டைக்கும், தரை இலக்கை தாக்குவதற்கும் ஏற்ற வசதிகள் 
இதில் உள்ளன. ரஷ்ய கடற்படையின் முக்கிய கலங்களில் ஒன்றை சிரிய 
கடற்தளத்திற்கு அனுப்பியுள்ளமை இராணுவ நோக்கில் ஒரு வலிதான எதிர்வினை 
செயற்பாடாகவே கொள்ள முடியும்.

அஸாதின் அரசியல் ஸ்திரதன்மையை உறுதிப்படுத்தி எதிராளிகளை தோற்கடித்தல், 
சிரியா மீதான இராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்தல், ஈரான் மீதான தாக்குதல் 
நடக்காமல் தடுத்தல், அல்லது தாமதப்படுத்தல் எனும் மூன்று கோணங்களில் 
ரஷ்யாவின் இன்றைய வியூகம் காணப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக