ஏப்ரல் 16, 2012


மீன்கள் கொடுக்கும் 'எலக்ட்ரிக் ஷொக்'!

த்திய தரைக் கடலிலும்வேறு சில கடல் பகுதிகளிலும் வாழும் 'ஸ்கேட்ஸ்என்ற மீன் வகைஉள்ளது. இவற்றை 'டார்பிடோ ரேஸ்என்றும் அழைப்பார்கள். இந்த மீன்களின் பழக்கவழக்கங்களைபண்டைய ரோமானியர்கள் ஓரளவு அறிந்து வைத்திருந்தார்கள். இம்மீன்கள் நீந்தும் போதுஅமைதியாகவும் மெதுவாகவும் நீந்தும். இவற்றின் அருகே வேறு சிறு மீன்களோநண்டுளோபிறகடல்வாழ் உயிரிகளோ வந்துவிட்டால் 'சுரீர்என்று மின்சார அதிர்ச்சி கொடுக்கும். அதில் 
அவைதுடித்து மடியும்பின்னர் அவற்றை இந்த மீன்கள் உணவாக எடுத்துக் கொள்ளும். இந்த மீன்கள்தோற்றுவிக்கும் சக்திமின்சாரம் என்பது அக்கால ரோமானியர்க ளுக்குத் தெரியவில்லை. இவைஏதோ விஷத்தன்மையுள்ள பொருட்களை வெளியிட் டுத்தான் தமது குறையைச் சொல்கின்றன என்றுநம்பினர். தங்கள் மருத்துவச் சிகிச்சைகளுக்காக இம்மீன்களை பெரிய தொட்டிகளில் வைத்துவளர்த்தார்கள்.
'ஸ்கேட்மீன்களைப் போலவே மின்சக்தியை வெளிப்படுத்தும் மற்றொரு மீன் வகை, 'ஈல்'என்பதாகும். ஆனால் இவை நன்னீரில் வாழ்பவை.
இந்த மீன்கள் இரவில் மட்டுமே வெளியே வந்து தம் இரையைத் தேடும். தென் அமெரிக்காவில் உள்ளஅமேசன் நதியின் ஆழமற்ற பகுதிகளில் இம்மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவைவெளிப்படுத்தும் மின்சக்திபெரிய மீன்களைக் கூட செயலற்றுப் போகச் செய்யும் அளவுக்குப்பலமானது. இதனால் அந்தப் பகுதிகளில் வாழும் பூர்வீகக் குடிமக்கள் அந்நதியில் இறங்கி நடக்கவேஅஞ்சுகிறார்கள்.
இந்த மீன்களின் உடலிலிருந்து தோன்றும் மின்சாரத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? சாதாரணமாகநம் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்சாரத்தின் அளவு 220 வோல்டுகள் ஆகும். ஆனால் ஈல்தோற்றுவிக்கும் மின்சாரத்தின் அளவு சுமார் 600 வோல்ட்!
இவ்வளவு மின்சக்தியை அந்த மீன் பெற்றுள்ளது. அது வாழும் நன்னீர் சூழலுக்கு ஏற்றதே ஆகும்.நன்னீர்மின்சாரத்தை கடத்தும் பண்பு கொண்டதில்லை.
கடல்நீரில் வாழும் ஸ்கேட் மீன் தோற்று விப்பது 60 வோல்ட் மின்சாரம் என்றாலும் கடல்நீர்மின்சாரத்தைக் கடத்தும் பண்பு உடையது. ஆகையால் இக்குறைந்த அளவு மின்சாரம் அம்மீனுக்குப்போதுமானது.
மீன்கள் எவ்வாறு அவற்றின் உடலில் இருந்து மின்சாரத்தைத் தோற்றுவிக்கின்றன? அதற்குப்பயன்படுவது அவற்றின் உடலில் உள்ள நரம்பு முனைகளும்தசைகளும்தான். நரம்பு முனைகள்தான்மின்வாய்ந்த தகடுகளாக அமைகின்றன. இந்தத் தகடுகள் தொகுதி தொகுதியாய் அமைந்துள்ளன. ஒருதொகுதியில் உள்ள தகடுகள் தொடர் அடுக்கில் இணைந்துள்ளன. ஆனால் தொகுதிகள் எல்லாம்தங்களுக்குள் பக்க அடுக்கில் அமைந்துள்ளன. சாதாரணமாகமின்சாரத்தைத் தோற்றுவிக்கும்உறுப்புஎலும்புடன் இணைந்து தசையுடன்தான் அமைந்திருக்கும்.
நரம்பால் உண்டாகும் தூண்டுதலின் போது இந்த எலும்புத் தசை சுருங்கும். அப்போது மின் தூண்டல்ஏற்படுகிறது. அந்த மீன் தூண்டல் தசையிலிருந்து நரம்பு முனையை அடையும் போது ஒரு சிறப்புஇரசாயனப் பொருள் அங்கு கரக்கப்படும். அதன் விளைவாகவே தசைகள் சுருங்கும். ஆனால் மின்உற்பத்தி உறுப்பால் தசைகள் சுருங்கிக் கொள்வதில்லை. அதற்குப் பதிலாக அவை மின் தூண்டலைத்தோற்றுவிக்கும் உறுப்புகளாக இயங்குகின்றன.
சாதாரணமாக இப்படித் தோன்றும் ஒவ்வொரு சிறு மின் தூண்டலும் சுமார் 150 மில்லி வோல்ட் திறன்கொண்டதாகும்.
ஈல் மீனின் மின் உற்பத்தி உறுப்பில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம்வரை உள்ள இத்தகடுகள் தொடர் அடுக்கில் இணைந்து செயல்படுவதால் அதன் மொத்தப் பலனாக600 வோல்ட் மின்சாரம் தோற்றுவிக்கப்படுகிறது.
அதேநேரம் டார்பிடோ ரேஸ் மீனில் சுமார் ஆயிரம் தகடுகள்தான் ஒரு தொகுதியில் உள்ளன.இத்தொகுதிகள் 200 தான் உள்ளன. அவையும் பக்க அடுக்கில் இணைந்திருப்பதால் இம்மீன்உண்டாக்கும் மின் திறன்ஈல்மீனைப் போன்று அதிக அளவுடையதாய் இருப்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக