அல்குர்ஆன் பொருளாதார சீர்நிலை குறித்து மிகவும் வலியுறுத்தி விளக்குகிறது. ஸுரா மாஊன் மறுமை நாளை நிராகரித்தலின் ஒரு வகையாக வறுமை ஒழிப்பில் ஈடுபடாமையைக் குறிக்கிறது. ஸுரா ஹாக்காவில் நரகில் தள்ளப்படுகின்றமைக்கு இறை நிராகரிப்பிற்கு அடுத்த காரணமாக இதனைக் குறிக்கிறது. அல்குர்ஆன் 28 இடங்களில் தொழுகையையும் ஸகாத்தையும் இணைத்துக் கூறுகிறது. ஸஹாபாக்கள் ஸகாத்தை தரமாட்டோம் என வாதிட்டவர்களுக்கு எதிராக யுத்தமொன்றையே கொண்டு சென்றார்கள். இந்த வகையில்தான் ஸகாத்தை இஸ்லாமிய வாழ்வைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.
இவ்வாறு வறுமையை ஒழிக்க ஸகாத் சட்டஒழுங்கை இஸ்லாம் ஏற்படுத்தியதோடு பராமரித்தல், வாரிசுரிமை, சமூகக் கூட்டுப் பொறுப்பு போன்ற சட்டங்களையும் இஸ்லாம் இயற்றியுள்ளது. ஆன்மீக உயர்வுக்கு வழிகாண முனைபவர்கள் குறிப்பாக பொருளாதார சூழ்நிலை குறித்துக் கவனம் செலுத்தல் மிகவும் அவசியமானது. இக்கருத்தை ஷெய்க் முஹம்மத் அல் - கஸ்ஸாலி தமக்கே உரிய பாணியில் கீழ் வருமாறு மிகவும் அழகாக விளக்குகிறார்.