மே 22, 2012


யெமனில் நுழையும் சவுதி அரேபிய டாங்கிகள் - சத்தமில்லாமல் ஒரு யுத்தம்


இலக்கு 1) Ansar al-Sharia

இலக்கு 2) Al Qaeda - Arabian Peninsula ( AQAP )

இடம் - அபியான் (யெமன்)


அபியான்”. யெமனில் இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்கான முதன்மை பிரதேசம்.
 அல்-காய்தா தோழர்களால் அழகான ஒரு நிருவாக முறைமையை ஒரிருவாரங்களுல் 
நடைமுறைப்படுத்தி காட்டி, இது போன்றே உலகின் ஏனைய நிலப்பரப்புக்களில் இஸ்லாமிய 
ஆட்சியின் தன்மை இருக்கும் என விளம்பரப்படுத்த அவர்கள் தேர்வு செய்த பூமி அபியான். 
அன்சார் அல் ஷரியாஹ் அமைப்பினரை அழிப்பதற்காக யெமனிய இராணுவம் கடந்த ஒரு
 மாத காலமாக தயார் படுத்தப்பட்டது. பல உளவுத் தகவல்கள் சரிபார்க்கப்பட்டன. இந்த
 சண்டையில் எந்த ஒரு முஜாஹித்தும் மிச்சமிருக்க கூடாது என்பது யெமனிய 
ஆட்சியாளர்களின் ஆசை. அவர்களிற்கு நன்றாக தெரியும். முழு யெமனையும் இலக்காக 
கொண்டே அன்சார் அல் ஷரியா அமைப்பினர் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர் 
என்பது.  ரஷ்யாவின் பழைய T 70 டாங்கிகள் அணிவகுக்க யெமனிய இராணுவம் இப்போது
 முற்றுகையை ஆரம்பித்திருப்பது அபியானில். Ansar al-Sharia அமைப்பினைஅழிப்பதன்
 மூலம் யெமனை மேற்குலகின் ஜனநாயக பாதைக்கு கொண்டுவந்து விடலாம் என்பது 
அதன் நம்பிக்கை. 

அடுத்தது மற்றயை அமைப்பு. அல்-காய்தாவின் அராபிய வளைகுடாவிற்கான கட்டளை 
தலைமை தான் Al Qaeda - Arabian Peninsula ( AQAP ). சவுதி அரேபியாவை, சவ்த் குடும்ப 
ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து மன்னராட்சியை ஒழித்து கிலாபத்தை உருவாக்கும் பெரும் 
கனவுகளை உடைய அமைப்பு. ஆப்பு சவுதிக்கு மட்டுமல்ல. குவைத், கட்டார், பஹ்ரைன் 
என அதன் எல்லைகள் விரிவானவை. ஒரு பெரும் இஸ்லாமிய எமிரேட்டை 
உருவாக்குவதற்காக அராபிய இளைஞர்களின் இராணுவம் இப்போது யெமனின் அபியானில் வந்திறங்கியுள்ளது. 

இவர்களை அழித்தொழிக்க இப்போது அப்துல்லாவின் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. 
சவுதியின் விமானத்தளங்கள் அமைதியாக அமெரிக்க விமானங்களை யெமனில் குண்டுவீச 
அனுமதிக்கின்றன. அமெரிக்க ட்ரோன் விமனாங்கள் யெமனில் பல அப்பாவி மக்களை 
படுகொலை செய்துள்ளன. சவுதி றோயல் விமானப்படையினர், டாங்கிகள், கவச 
வாகனங்கள் என பெருமெடுப்பில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க
 ராடர்களினதும், உளவு செய்மதிகளினதும் வழிகாட்டலிலும், துல்லியமாக
 தாக்கும் ட்ரோன் ஆளிள்லா விமானங்களின் உதவியுடனும் அமெரிக்க 
சவுதியையும் யெமனையும் முன்னிறுத்தி பின்வாசலால் களமிறங்கியுள்ளது. 

லிபியாவில் அன்று பாலைவன சிங்கம் உமர் முக்தாரையும், அவர் முஜாஹித்களையும் 
பூண்டோடு அழிக்க அன்று பெருமெடுப்பில் படை நடாத்திய ஜெனரல் கிராஸியானியின் 
இத்தாலிய படையெடுப்பை நிணைவு கூறத்தக்கதாக இன்றைய யெமனிய படையெடுப்பு
 உள்ளது. மன்னராட்சிக்கு இது அபாய அறிவிப்பு என்பதை உணர்ந்த அப்துல்லாவும் 
அவர் கூட்டாளிகளும் அமெரிக்க துணையுடன் இறையாட்சியை உருவாக்கும் மண்ணை 
சின்னாபின்னம் செய்ய முற்பட்டுள்ளார்கள்.

யெமனிய சண்டை மீடியாக்களால் வேறுவிதத்தில் சொல்லப்படுகிறது. யெமனிய 
இராணுவமும் வான்படையுமே தாக்குதல் தொடுப்பதாக அவை சொல்கின்றன. ஆனால்
 யெமனிய மண்ணில் யெமனிய கொடியுடன் சவுதி அரேபிய டாங்கிகள் உலா வருகின்றன. 
அமெரிக்க ட்ரோன்கள் யெமனிய சின்னம் பொறித்தவாறு ஏவுகணைகளை வீசுகின்றன. 
இது ஐரோப்பாவிற்கும் தெரியும். ஐக்கிய நாடுகள் சபைக்கும் தெரியும். ஆனால் அவை 
கண்னை மூடி பேசாமல் இருக்கின்றன. சிரியாவிற்காகவும், லெபனானிற்காகவும் குரல் 
கொடுக்கும் ஈரான் மௌனமாக இருக்கிறது. காரணம் ஆட்சிய ஷியாக்கள் வசம் இருப்பது. 
அதன் ஆசையும் அல்-கய்தா அழிய வேண்டுமென்பதே. ரஷ்யா கூட பேசாமல் இருக்கிறது. 
அபியானின் வெற்றி என்பது செச்னியாவின் வெற்றியாக மாறிவிடுமோ என்ற பயம் அதற்கு. 
ஒரு முள்ளிவாய்க்காலிற்காக குரல் கொடுத்த உலக ஊடகங்கள் இன்று அபியானின் 
இரண்டரை இலட்சம் மக்கள் பற்றி எதுவும் பேசவில்லை. 

போராளிகளோ திடிரென் பெருமெடுப்பில் எதிர் தாக்குதல் நாத்தி பெரும் பரபரப்பை 
ஏற்படுத்திய பி்ன்பு சேதங்கள் அற்ற நிலையில் பின்வாங்கி வருகின்றனர். சவுதியின் 
டாங்கிகள் தம் பெற்றோலிய புகையை கக்கிய வண்ணம் யெமனின் வீதிகளில் வலம் 
வந்தது தான் மிச்சம். அவர்கள் எதிர்பார்த்த தலைவர்களோ அல்லது தளபதிகளோ எங்கேயும் 
இல்லை. கூடவே கனரக ஆயுதங்களும் இல்லை. பொறுக்கிச் செல்ல வெற்று தோட்டாக்களின் 
கூடுகளும் சில ஆயிரம் சன்னங்களுமே வீதிகளில் கிடக்கின்றன. 

அன்சார் அல் ஷரியா இராணுவ கட்டளை தளபதி தாங்கள் முற்று முழுதான ஒரு கெரில்லா 
போராட்டத்திற்கு மாறியுள்ளதாகவும், யெமனிய வீதிகளில் காபிர்களிற்கு கப்றுகள் 
வெட்டப்படும் எனவும் சூளுரைத்துள்ளார். மக்களிடம் நாம் எமது போராட்டத்தை 
கையளித்து சில மாதங்கள் கழிந்து விட்டன என அவர் சாவகாசமாக சொல்வதிலிருந்தே 
சண்டை எதை நோக்கி செல்லப் போகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். புவாத் அனாஜ்ர் 
எனும் மார்க்க அறிஞர் வெள்ளிக்கிழமை பிரசங்கத்தில் ஒவ்வொரு எமனிய முஸ்லிமிற்கும் 
ஜிஹாத் பர்ள் அய்ன் என குறிப்பிட்டு்ள்ளார். ஒவ்வொரு யெமனியும் அமெரிக்க, 
சவுதி அரேபிய கூலிப்படையினருடன் போராட தயாராக வேண்டும் எனவும் அவர் 
வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அபியானின் லவ்டார் பிரதேசத்தை கூலிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். 
அன்சார் அல் ஷரியாவின் தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் முழு 
யெமனையும் கைப்பற்றும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை என கூறியுள்ளதுடன் 
தங்கள் உண்மையான செயற்பாட்டிற்கு கிடைத்த ஒரு வெகுமதியே சவுதி அரேபிய 
தாக்குதல்கள் என பெருமிதம் வெளியிட்டுள்ளனர். 
முஜாஹிதீன்களுடனான சண்டையை இலகுவாக கணக்கு போட்ட அமெரிக் மற்றும் 
சவுதி இராணுவத்தினர் இப்போது யெமனிய கூலிப்படையினரினதும், தெருச்சண்டிய
ர்களினதும் உதவியை நாடியுள்ளனர். அவர்களை இணைத்து ஒரு மேஷனரி அமைத்து 
அவர்களையும் களமிறக்கியுள்ளனர் இவர்கள். இவர்களிற்கான சம்பளம் என்ற பெயரில் 
சவுதி அரசு பெருமளவு பணத்தை தண்ணீராக.. இல்லை இல்லை பெற்றோலாக 
இறைக்கிறது சவுதி அரேபிய அரசு.  

Abu Sayyaf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக