மே 29, 2012


குஜராத்தில் இனப்படுகொலையின்போது வீரப்போர் புரிந்த 

வீராங்கனைகள்

வீர சுபைதாவும் 
கொடூர ஃபாசிஸ்டுகளும் 

அந்த சகோதரியின் பெயர் சுபைதா மன்ஷூரா . வயது 35 .
குஜராத்திலுள்ள அகமதாபாத் பகுதியில் மண்டிஜவ்கரின் 
என்ற இடத்தில் வாழ்ந்து வந்தாள். இது  பெரும்பான்மையாக 
இந்துக்கள் வாழும் பகுதி .

அன்று காலை (28.2.2002) முதலே முஸ்லிம்களை கொலை 
செய்யும் படலம் சூடு பிடித்திருக்கிறது .
சுமார் நூறு பேர் கொண்ட கொலை வெறி கூட்டம் முஸ்லிம்
களின் முகவரியோடு மோப்பம் பிடித்து வந்து கொண்டிருந்தது .

சுபைதா மன்ஷூராவையும் அவள் குடும்பத்தைச் சார்ந்த ஏழு 
பேரையையும் மரணம் தேடி வந்து கொண்டிருந்தது .
சுபைதாவை நிச்சயமாக அவர்கள் கற்பழித்த பின்னரே கொலை 
செய்வார்கள் . ஏனெனில் முஸ்லிம் பெண்களை அந்த இந்து 
பயங்கரவாதிகள் அவ்வாறுதான் கொலை செய்கின்றார்கள் 
என்ற செய்தி ஏற்கனவே சுபைதாவை வந்தடைந்துவிட்டது .

அதோ சுபைதா மன்ஷூராவின் வீடு நோக்கி அவர்கள் வந்து 
கொண்டிருக்கின்றார்கள் . இல்லை மரணம் அவர்களின் வடிவில் 
வந்து கொண்டிருந்தது . அத்தோடு அவமானமும் வீடுதேடி 
முகவரியோடு வந்துகொண்டிருந்து .

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் மன்ஷூராவின் 
மரணத்தையும்  அவள் மானபங்கம் படுத்தப்படுவதையும் 
பார்க்க குழுமிவிட்டார்கள் .

தானும் தன்னை சார்ந்த ஏழுபேரும் காப்பாற்றப்படுவோம் என்ற 
எண்ணம் அவளுக்கு இல்லை .

மரணம் அவமானம் இவை தன்னை நெருங்கி வரும் 
வேளையிலும் நிலை குலையவில்லை சுபைதா மன்ஷூரா

ஃபாசிஸ்டுகள் குஜராத் இனப்படுகொலையின்போது பயன்படுத்திய 
கொடுமையான ஆயுதம் கேஸ் சிலிண்டர்கள் .

சுபைதாவும் அதே கேஸ் சிலிண்டரை தனது ஆயுதமாக 
பயன்படுத்தினாள்.

ஃபாசிஸ்டுகள் வருடைய வீட்டை நெருங்கியபோது அவள் தன 
வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டரை இழுத்து வந்து வீட்டின் 
முன்னுள்ள சிறு முற்றத்தில் வைத்தாள். கேஸை திறந்து
விட்டாள்.கையில் தீப்பெட்டியை எடுத்துக்கொண்டாள். அந்த 
ஃபாசிஸ்டுகளை நோக்கி இப்படி கூறினாள் " உயிரின் மேல் 
ஆசை இருந்தால் ஓடிவிடுங்கள் இல்லை என்றால் விரைந்து 
வெளிவந்து கொண்டிருக்கும் கேஸைநெருப்பாக எரிய 
செய்துவிடுவேன் ".

நானும் என்னோடு சேர்ந்த ஏழு பெரும் மரணிப்போம் என்பது 
உண்மையே . அதற்கு  நாங்கள் எப்போதோ தயார் ஆகிவிட்டோம் . 
அத்தோடு உங்களையும் கூண்டோடு அனுப்பிவிடுவோம் .

அவ்வளவுதான் அந்த ஃபாசிஸ்டுகள் பின்னங்கால் பிடரியில் 
பட ஓடினார்கள் .ஓடினார்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள் .

பின்னர் சுபைதா அவர்கள் தன் குடும்பத்தவர்கள் ஏழு பேரையும் 
அழைத்துக்கொண்டு சொந்த பந்தங்கள் இருக்கும் இடம் தேடி 
நகர்ந்தார் . அதுபோது அகதிகள் முகாம்களை நோக்கி அனைத்து 
முஸ்லிம்களும் பயணமாகி கொண்டிருந்தார்கள் .

மைமூனாவை தேடி வந்த மரணம் 

அதே அகமதாபாத் . மைமூனா தன வீட்டில் தனது இரண்டு 
குழந்தைகளுடன் இருந்தாள்.துணையாக யாரும் இல்லை 
தனித்தே இருந்தாள் .

சுமார் 20 க்கும் மேற்பட்ட சங்பரிவார் கும்பல் அவளது மானத்தை 
பறிக்கவும் அதன் பின்னர் அவளை கொடூரமாக கொன்றுப்
போடவும் அவளது இல்லம் நோக்கி வந்து கொண்டிருந்தது .

முதல் மாடியில் நின்று அவர்கள் வருவதை பார்த்தாள். 
அஞ்சவில்லை அவள் . ஒரு வினாடியில் தன்னை மரணத்திற்கு 
தயாராக்கிக்கொண்டாள். தன் அன்புக்குழந்தைகளையும் 
அல்லாஹ்வை சந்திக்க தயாராக்கினாள். தாயும் சேயும் 
மரணத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருந்தார்கள் . பாய்ந்து 
வரும் ஃபாசிஸ்டுகளிடம் கையேந்தி  மடிபிச்சை கேட்கவில்லை 
மைமூனா . அவர்கள் தம் இல்லம் நோக்கி நகர்ந்து வருவதை 
இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் .

தபால்காரர் முகவரித்தேடி கடிதம் தர வருவதை போல் அவர்கள் வந்துக்கொண்டிருந்தார்கள் அவளது  முகவரி தேடி .

அவளது இல்லம் நெருங்கியபோது தயாராக வைத்திருந்த 
மிளகாய்போடியை அவர்களை நோக்கி வீசினாள்.

மைமூனாவின் அழகையும் உயிரையும் குறி வைத்து வந்த 
அவர்கள் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை .

எதிர்பாராமல் தங்களை தாகிய மிளகாய்போடியின் எரிச்சலை 
அவர்களால் தாங்க முடியவில்லை . தங்கள் வயிற்றெரிச்சலை 
அசிங்கமான வார்த்தைகளால் வாந்தி எடுத்தார்கள் .

திரும்பி வருவோம் உன்னை அதம்  பண்ணுவோம் என்று 
மிரட்டிவிட்டு ஓடிவிட்டார்கள் அந்த கோழைகள் .

மைமூனா அகதிகள் முகாம் நோக்கி நகர்ந்தாள்.

வீர சகோதரி சவ்தா - ஒரு விசித்திர பெண்

அதே அகமதாபாத் . மணி நகரில் குடி இருக்கிறாள். ஃ பாசிச 
பரிவாரத்தினர் தங்களின் பகட்டான வாளை சுழற்றிக்கொண்டு 
அவளை நெருங்கி வந்தார்கள் . வீட்டின் முன் நின்ற காரை 
தவிடு பொடியாக்கினார்கள். அவள் வீட்டை நெருங்கும் முன் 
எதிர்பட்ட இரு முஸ்லிம்களையும் கண்டம் துண்டமாய் வெட்டி 
போட்டார்கள் .நெருப்பிட்டு  கொழுத்தினார்கள் . சவ்தா அதைக் 
கண்டாள். குலை நடுங்கினாள் . அவர்கள் அடுத்த இலக்காக 
அவளை நோக்கியே வந்துக்கொண்டிருந்தார்கள் .

அவளுடைய கணவன் ஒரு பரபரப்பான வியாபாரி , அவன் 
பம்பாய் சென்றிருந்தான்  . கூட்டமான தொகுப்பு வீடுகளில் 
ஒரு விசாலமான வீட்டில்தான் அவள் வசித்து வந்தாள். 
ஃ பாசிச பரிவார கொலையாளிகள் தன்னை நோக்கி வருவதை 
கண்ட அவள் , அக்கம் பக்கத்து வீட்டாரிடம் " உங்களவர்கள் 
வருகிறார்கள் அவர்களை தடுத்து நிறுத்துங்கள் " எனக் 
கூறினாள். பயனேதும் இல்லை .

ஒரு முடிவுக்கு வந்தாள் .

நாம் மட்டும் மரணிக்க வேண்டாம் . வருபவர்களையும் அந்த
 ஃபாசிஸ்டுகளையும் , இங்கே இறப்புகளை வேடிக்கை 
பார்பவர்களையும் மரண வாழ்க்கைக்கு அழைத்து செல்லலாம் . 
என முடிவு கட்டினாள்.

தன வீட்டில் கேஸ் தீர்ந்துபோனால் பயன்படுத்துவதற்காக 
வாங்கி வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்தாள். முடிந்த 
இடங்களிலெல்லாம் தெளித்தாள்.

வீட்டில் கிடந்த மரத்தில் செய்த பொருட்கள் , பஞ்சு மெத்தைகள் , 
துணிமணிகள் எல்லாவற்றையும் கொண்டு வந்து போட்டு 
அவற்றிலும் அதே மண்ணெண்ணையை ஊற்றினாள்.

எதிரே வரும் ஃபாசிஸ கொலையாளிகள் அவளையும் கொன்று 
எரிக்கத்தானே செய்வார்கள் . முந்திக்கொல்வதாக 
முடிவெடுத்தாள் சவ்தா .எல்லோரும் ஓடோடி வந்தார்கள் . 
என்னவென்று கேட்டார்கள் .என்ன இப்படி செய்கின்றீர்கள் 
எனக்கேட்டார்கள் .

மரணத்தை வரவேற்க ஏற்பாடு செய்கின்றேன் என்றால் 
" என்னோடு எல்லோரும் தயாராகுங்கள் "என்றாள்.

திரண்டவர்கள் ஓடிப்போய் அங்கெ வந்த ஃபாசிஸ்டுகளிடம் 
முறையிட்டார்கள் . அந்த ஃபாசிஸ்டுகள் விடுவதாய் இல்லை .
இறுதியில் அந்த ஃ பாசிஸ பரிவாரங்களிடம் அந்த பெண்கள் 
இப்படி கூறினார்கள் . " நீங்கள் மேலே சென்று கீழே வருவதற்குள்
 நீங்களும் எரிந்து போவீர்கள் ".

அவ்வளவுதான் ஒரே ஓட்டமாக ஓடினார்கள் அந்த ஃபாசிஸ்டுகள். 
தங்கள் உயிரின் மேல் அவ்வளவு பயம் அவர்களுக்கு .

நன்றி : விடியல் வெள்ளி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக