மே 31, 2012


ரத்தம் குடிக்கும் பூச்சிகளால் அமெரிக்காவில் பரவும் புதிய எய்ட்ஸ் நோய்

The 'new AIDS of the Americas': Experts warn of deadly insect-borne disease that can cause victims' hearts to explode
   ரத்தம் குடிக்கும் பூச்சிகளால்
 அமெரிக்காவில் புதிய 
எய்ட்ஸ் நோய் பரவுகிறது.
 உயிர்க்கொல்லி நோயான 
எய்ட்ஸ் உலகை அச்சுறுத்தி
 வருகிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில்
 இருந்து மனித குரங்குகள் மூலம் 
இது பரவியது. தற்போது 
அமெரிக்க நாடுகளில் ரத்தம்
 குடிக்கும் பூச்சிகள் மூலம் 
புதிய வகை உயிர்க்கொல்லி
 நோய் பரவி வருகிறது. இதற்கு
 புதிய வகை எய்ட்ஸ் நோய் என  
ஹுஸ்டனில் உள்ள பேய்லர்
 மருத்துவக் கல்லூரி 
ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.
 இது எய்ட்ஸ் நோயை போன்று 
உள்ளது. இந்த நோயை உடனடியாக கண்டறிய முடியவில்லை. 3 மாதத்துக்கு பிறகே
 கண்டு பிடிக்க முடியும். இது இதயம் மற்றும் குடல் பகுதியை தாக்குகிறது. 

அமெரிக்க கண்ட நாடுகளான பொலிவியா, மெக்சிகோ, கொலம்பியா மற்றும் மத்திய 
அமெரிக்க நாடுகளில் 80 லட்சம் பேர் இந்த கொடிய நோய் தாக்குதலுக்குள்ளாகி 
அவதிப்பட்டு வருகின்றனர். 

அமெரிக்காவில் மட்டும் 3 லட்சம் பேருக்கு இந்த நோய் பரவி உள்ளது. இது மற்ற 
நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்து வந்தவர்களால் பரவுவதாக 
கூறப்படுகிறது. முதலில் தாயை தாக்கும் இந்த நோய் பின்னர் குழந்தைகள் மற்றும் 
குடும்ப உறுப்பினர்களுக்கும் பரவுகிறது. ஆனால் இந்த நோயை குணப்படுத்த 
முடியும். 

அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை 3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட 
வேண்டும். எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை விட மிகவும் விலை குறைவானது. 
ஆப்பிரிக்காவில் இருந்து தான் எய்ட்ஸ் நோய் பரவியது. இந்த நோயும் அங்குள்ள
 ரத்தம் உறிஞ்சும் ஒரு செல் உயிரின பூச்சிகளால் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக