மே 16, 2012


பிரான்ஸ்கிரீஸ் தேர்தல் உணர்த்துவது...

பிரான்சிலும் கிரீஸிலும் நடைபெற்ற தேர் தல்களில் முடிவுகள் அதிர்ச்சியை ஒன்றும்கொண்டுவரவில்லை. உக்கிர மான உலகப் பொருளாதார நெருக்கடி மக் கள் மீது சொல் லொண்ணாதுன்பத்தைத் திணித்துள்ளது. இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக உலக முதலாளித்துவமும்,சர்வதேச நிதிமூலதன மும் கடந்த சில ஆண்டுகளாக எடுத்து வந்த நடவடிக் கைகளுக்கு எதிராகமக்கள் கிளர் ச்சிகள் மிகவும் விரிவடைந்து வந்ததைப் பார்த் தோம்பொருளாதாரநெருக்கடியிலிருந்துமீள்வதற்காக அவை மேற்கொண்ட நட வடிக்கைகள் ஒவ்வொன்றும் புதிய நெருக்கடிகளைஉருவாக்கிமக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேலும் கடு மையான பாதிப்புகளை உருவாக்கின.கடைசியாக அவை மேற்கொண்ட முயற் சிகளில் முக்கியமானது ‘‘சிக்கன நட வடிக்கைகள்’’ என்றபெயரில் மக்களுக்கு அளித்து வந்த நலத்திட்டங்கள் பலவற்றை நீக்கியதாகும்இதனால் மக்களின்வாழ் நிலை மிகவும் மோசமாக சரிந்தது. இவை மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீதுஇயற்கையாகவே கோபமடைய வைத்தது.


ஐரோப்பிய நாடுகளில் பத்து நாடுகள் இன்றையதினம் பொருளாதார மந்தத் தால்அதிகாரபூர்வமாகவே பாதிக்கப் பட்டுள்ளன. இத்தாலிஸ்பெயின்பெல் ஜியம்அயர்லாந்துகிரீஸ்,ஸ்லோவேனி யாநெதர்லாந்துஐரோப்பிய மண்டல நாடுகள் 17இல் இவை ஏழும் வருகின் றன)இங்கிலாந்துடென்மார்க் மற்றும் செக்குடியரசு ஆகிய பத்து நாடுகளும் இவ்வாறுபாதிக்கப்பட்டுள்ளனஇதன் விளைவாக வேலையில்லாத் திண்டாட் டம் குறித்த விவரங்கள்திகிலடைய வைக்கின் றன. கிரீஸிலும் ஸ்பெயினிலும் 15 வயதுக்கும் 25 வயதுக்கும் இடையிலு ள்ளஇளைஞர்களில் 51 விழுக்காட்டினர் வேலையின்றி அவதிப்படுகின்றார்கள். இத்தாலியிலும்போர்ச்சுக்கல்லிலும் இது 36 விழுக்காடாகும். அயர்லாந்தில் 30 விழுக்காடாகவும்பிரான்சில் 20விழுக்காடாகவும் இது இருக்கிறது. மற்ற நாடுகளிலும் கிட்டத்தட்ட இதேபோன்ற நிலைமைகள்தான்.

ஐரோப்பாவில் ஆட்சியிலிருந்து உரு ண்ட தலைகளில் நிகோலஸ் சர்கோசி யின் தலைஒன்பதாவதாகும். (பிரிட்டன்இத்தாலிகிரீஸ்ஸ்பெயின்டென்மார்க்லாட்வியாஅயர் லாந்து,ஸ்விட்சர்லாந்து ஆகியவை மற்றவைகளாகும்.) ஐரோப்பிய மண்டலத்தில் பிரான் கோ-ஜெர்மன் அச்சுநாடுகளில் இன்னும் பாதிதேர் தல்களை இன்னும் சந்திக்கவில்லை. ஆயினும்ஜெர்மன்மாநிலங்களில் ஒன் றான செலஸ்விக்-ஹால்ஸ்டீன் (ளுஉாடநளறபை-ழடிடளவநin) 1950களுக்குப்பின் நடைபெற்ற தேர்தல்களிலேயேசான் சலர் ஏஞ்சலா மெர்கெல்லினுடைய கட்சிமிகவும் குறைவான வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் ஆய்வு செய்ததுபோல,ஏகாதிபத்திய உலகமயம் தலைமை தாங்கும் சர்வதேச நிதி மூலதனம் உலக முதலாளித் துவத்தைமிகவும் ஆழ மான நெருக்கடி வட்டத்திற்குள் தள்ளிக் கொண்டே இருக்கிறது.

கொள்ளை லாபம் ஈட்டவேண்டும்மூல தனத்தை மிகவும் அரக்கத்தனமாக குவித் திட வேண்டும்என்கிற முதலாளி த்துவத்தின் நடவடிக்கைகளினால் உலக மக்களில் பெரும்பாலானவர் களின்வாங்கும் சக்தி கடுமையாக சுருங்கியிருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகமுதலாளித்துவம்,தங்கள் பொருள்கள் எப்படியாவது விலை போக வேண்டும் என்பதற்காக கடன் கொடுப் பதை மிகவும்எளிதாக்கினமுதலாளித் துவம் கொள்ளை லாபம் அடிப்பது தொடர்வதற்கு இந்நடவடிக்கைத் தற்காலிகமாக அனுமதித்ததுஆயினும்உலகப் பொருளாதார நிலை மிகவும் மந்த மாக மாறிக்கொண்டிருந்த நிலையில் இவ்வாறு கடன் வாங்கியோர் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதநிலைக்கு (‘ளரb யீசiஅந’ உசளைளைஇட்டுச்சென்றதுஇத் தகைய மந்த நிலைக்கு மூலகர்த்தாக்களான கார்ப்பரேட் நிறுவனங்களைக் காப் பாற்று அவதற்காக மிக அதிகமான அள வில் நிதிஉதவிகள் (யெடைடிரவ யீயஉமயபநளஅளிக்கப்பட்டன. இவ்வாறு ஆங்காங் குள்ள அரசாங்கங்கள்அபரிமிதமான அளவில் நிதி உதவிகள் செய்ததன் கார ணமாகதங்கள் பற்றாக் குறை யைச் சமாளிக்க முடியாத அளவிற்கு மாறினஇவ் வாறு கார்ப்பரேட் திவால் நிலைமைகள் (ஊடிசயீடிசயவநiளேடிடஎநnஉநைள), ஆங்காங்குள்ள அரசாங்கங்களின் திலால்களாக (ளடிஎநசநபைniளேடிடஎநnஉநைளமாற்றப்பட்டதால்அரசாங்கங்கள் தங்கள் செலவினங் களை வெட்டிக் குறைக்கவேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகினஇதற்கு அவைதாங்கள் சமூக செலவினங்க ளுக்கு அளித்துவந்த தொகைகளைக் கடுமையாக வெட்ட வேண்டிய நிர்ப் பந்தத்தால் மட்டுமே செய்திட முடியும்.இதற்காக அவைகள் தங்கள் நாடுகளின் உழைக்கும் மக்களின் மீதுஅவர்களின் ஊதியங்களைமுடக்குவதன் மூலமும்வேலை நேரங்களை அதிகரிப்பதன் மூல மும்ஓய்வூதியப் பயன்களைப் பாதியாகக் குறைப்பதன் மூலமும்அதிக சுமைகளை ஏற்றினஇவ்வாறான ‘‘சிக் கன நடவடிக்கைகளை’’அவை மேற்கொண்டனஅரசாங்கங்களில் ஆட்சி புரிந்து வந்தவர்களின் தலைகள் தொடர்ந்துஉருள்வதற்குஇவ்வாறு மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை ஏற்றியதற்கு எதிராக மக்கள் தங்கள்கோபத்தீயை உமிழ்வதே காரணமாகும்.

இத்தகைய ‘சிக்கன நடவடிக்கை கள்’ மக்களின் வாங்கும் சக்தியை மே லும் சுருக்குவதற்கு இட்டுச்சென்றுதற் போதைய பொருளாதார மந்தநிலையை மேலும் ஆழமாக்கிமற்றொரு நெருக்கடி க்கும்அடிப்படையாயினஇது அரசாங் கங்களின் வருவாயையும் குறைக்க இட்டுச் சென்றது.ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளுக்கு அவற்றின் திவால் நிலைகளிலிருந்து அவை மீள்வதற்காகஐரோப்பிய மத்தியவங்கி சுமார் 1.3 டிரில் லியன் அமெரிக்க டாலர்கள் (ஒரு டிரில் லியன் என்பது ஒருலட்சம் கோடியாகும்கடன் கொடுத்திருக்கிறதுஇவற்றை இந்நாடுகள் 2014இல் திருப்பிச் செலுத்தஆரம்பித்திட வேண்டும். அப் போது இந்நாடுகளின் நெருக்கடிகள் மேலும் உக்கிரமடையும்.அநேகமாக அப்போது அனைத்து நாடுகளுமே தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாத நிலைக்குத் தள்ளப் பட்டுவிடும்.

முதலாளித்துவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கக்கூடிய நெருக் கடியே இது என்பதில் நமக்குஎவ்வித ஐயமுமில்லை. இதற்கு நிரந்தரத் தீர்வு இந்த முதலாளித்துவ அமைப்பில் நிச்ச யமாகக்கிடையாது. வால்ஸ்டீரீட்டைக் கைப்பற்றுவோம்’ கிளர்ச்சி இயக்கங்கள் முதலாளித்துவ அமைப்புமுறையையே கேள்விக்கு உட்படுத்தி இருக்கின்றன. ‘‘இவைஇந்த அமைப்பினை செயல்படுத்துவதில் ஏற்பட்ட பிழைகள் அல்லமாறாக இந்த அமைப்பே - முதலாளித் துவம் என்கிறஅமைப்பே - பிழையான தாகும்’’ என்று பேனர்ஸ் கூறுகிறார். இன் றைய தேவை என்ன? சோச லிசஅமைப்பின் மூலமாகமுதலாளித்துவ அமைப்பினை புரட்சிகரமான முறையில் மாற்றக்கூடியஒருவலுவான அரசியல் சக்தியேஇன்றைய தேவையாகும்.

ஆயினும்வெளியாகியிருக்கும் தேர் தல்முடிவுகளிலிருந்து,அத்தகையதொரு அரசியல் மாற்றுஉருவாகிவிட்டதாகக் கூறிட முடியாதுபதினேழு ஆண்டுகள் வலதுசாரிகளின் ஆதிக்கத்திலிருந்தபிரான்ஸ் தற்போது ஒரு சோசலிஸ்ட்டை அதிபராகப் பெற்றிருக்கிறது. அவரும் கூடபிரான்ஸ்மக்களுக்கு ஒரு சோச லிச மாற்றை அளிக்கப்போவதில்லை. இதற்கு முன்பு பிரான்சில் ஆட்சியிலிருந்த சோசலிஸ்ட் அதிபரான பிரான் காய்ஸ் மிட்டரண்ட்  தான்இன்றைய ஐரோப்பிய ஒன்றியம்மற்றும் ஈரோ நாணயம் உருவாவதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டவர்களில் முதலாமவராவார் என்பதை நாம் நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டும்.

கிரீஸில்அரசாங்கத்தை அமைக்கக் கூடிய விதத்தில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பட்டபெரும்பான்மை கிடைத்திட வில்லை. தேர்தலுக்குப் பின் அனை த்துக் கட்சிகளுமே பெரும்பான்மையைத் திரட்டக்கூடிய விதத்தில் கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருக்கின்றன. பொருளாதாரநெருக்கடியின் விளைவு களுக்கு எதிராக பிரம்மாண்டமான மக் கள் திரள் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சிமுன்பு பெற்றிருந்ததைவிட ஒரு விழுக் காடு கூடுதலாகப்பெற்றுத் தற்போது 8.5 விழுக்காடு வாக்குப் பங்கீட்டினைப்பெற்றிருக்கிறதுஆயினும் 16.8விழுக்காடு வாக்குப் பங்கீட்டைப் பெற்றுள்ள சிர்சியா  கட்சி கூட் டணி அரசாங்கத்தில்இணைந்துகொள் ளுமாறு கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தபோதிலும்அத னைஏற்க அது மறுத்துவிட்டதுகார ணம்கிரீஸில் உள்ள மற்ற அனைத்துக் கட்சிகளுமேஏதோ ஒருவிதத்தில்நவீன தாராளமய நிகழ்ச்சி நிரலையும் நிதி மூலதனத்தின் நலன்களையும் உயர்த்திப்பிடிப்பதால் மக்கள் போராட்டங் களை மேலும் தீவிரப்படுத்தவே உறுதி பூண்டிருக்கிறோம்என்றும்எனவே அமையவிருக்கும் எந்தவொரு அரசாங் கத்திலும் இணையவோ அல்லது அதனைஆதரிக்கவோ மாட்டோம் என் றும் பிரகடனம் செய்திருக்கிறது.

ஐரோப்பாவில் நடைபெற்ற தேர்தல் களில் வலதுசாரித் தேசியக் கட்சிகளின் வாக்குப் பங்கீடுஅதிகரித்திருப்பதை நாம் மிகவும் கவலையுடன் கவனித்திட வேண்டும். சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின்னர்ஐரோப்பா முழுவதும் கடந்த இருபதாண்டுகளாக மிகவும் வெறித்தன மான முறையில்கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டதை நாம் நினைவில் கொள்ளவேண்டியதுஅவசியம்ஐரோப்பிய ஒன்றியமும்அதன் உறுப்பு நாடுகளும் தனித்தனியாக கம்யூனிசத்தைபாசிசத்துடன் இணைத் துத் தீர்மானங்கள் நிறைவேற்றினஇவ் வாறுஇவைகள் பாசிசத்தின் தோல்விக்குகம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பும்சோவியத் யூனியன் மேற்கொண்ட தீர் மானகரமானபங்களிப்பும் காரணம் என் கிற மகத்தான வரலாற்றை மாற்றி எழுதிட முயற்சிக்கின்றனஹிட்லரின்ரெய்ச்ஸ்டாக் அரண்மனையின் மீது செங்கொடியை ஏற்றியதன் மூலம் பாசிசத்திற்கு எதிரானவெற்றியை உல கத்திற்குப் பிரகடனப்படுத்தியது சோவி யத் யூனியன்தான் என்கிற வரலாற்றைமக்களின் மனதிலிருந்து அகற்றிட அவை முயல்கின்றன.

மற்றொன்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 1930களில் பொரு ளாதார வீழ்ச்சி ஏற்பட்டசமயத்தில்தான் பாசிசம் தலை தூக்கியது. இன்றைய தினம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கம்யூனிசஎதிர்ப்புப் பிரச்சாரத்தினூடேபொருளாதார நெருக்கடியின் காரணமாக வளர்ந்து வரும்வேலையில்லாத் திண் டாட்டமும் சேர்ந்துகொண்டுமக்கள் மத்தியில் பாசிச உணர்வுகளை ஊட்டிவளர்த்திடும்இதற்கு எதிராக மக்களை முன்கூட்டியே எச்சரிக்க வேண்டியது அவசியமாகும்.

எனவேமுதலாளித்துவத்திற்குப் பதிலாக ஒரு வலுவான அரசியல் மாற்றை உருவாக்குவதன் மூலம்மட் டுமேஅரக்கத்தனமான முறையில் பாசிச சக்திகள் தலைதூக்குவதனைத் தடுத்திட முடியும் மற்றும்மக்கள் மீது மேலும் சுமைகள் ஏற்றப்படுவதிலிருந்து மக்களையும் காப்பாற்றிட முடியும்.

மூலதனத்தின் தாக்குதல் மக்களின் வாழ்வாதாரங்களைக் கடுமையாகப் பாதித்திடும் என்பதைஉய்த்துணர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுவான ஈரோ நாணயம் உருவாவதற்கு எதிராகத்தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்த ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் கட்சி கள் வரவிருக்கும்காலங்களில் சோச லிசம் என்கிற அரசியல் மாற்றை வலுப் படுத்தக்கூடிய விதத்தில் நிச்சயமாகமுன்னேறிச் செல்லும்.

தமிழில்ச.வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக