மே 04, 2012


ஈரானை ரஷ்யா ஆதரிப்பது

 எதனால்? - கவலைகள் 

பலவிதம் - அஸர்பைஜான்

 முதல் கஸகிஸ்தான் வரை..


ரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு
 இராணுவத் தாக்குதலை நடத்துவது சாத்தியம் 
 என்ற கருத்தில், கடந்த சில
 மாதங்களாக ரஷ்யா தீவிர இராணுவத்
 தயாரிப்புக்களை மேற்கொண்டுள்ளது. 
சமீபத்திய தகவல்களின்படி, ரஷ்ய மேலிட
 இராணுவக்குழு ஈரானுக்கு எதிராக ஒரு போர் இந்தக் கோடைகாலத்தில்
 வரக்கூடும் என எதிர்பார்க்கிறது. இதனால் மத்திய கிழக்கு மட்டும் 
இல்லாமல் காகசஸ் பகுதியிலும் பாரிய தாக்கங்கள் ஏற்படும்.
காகசஸில் உள்ள ரஷ்யத் துருப்புக்கள் தொழில்நுட்பரீதியாக 
மேம்படுத்தப்பட்டுள்ளது. காஸ்பியன் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு 
ஏவுகணைப் பிரிவு தயார்நிலையில் உள்ளது. காஸ்பியன் பகுதியில்
 உள்ள ஏவுகணைத்தளம் கொண்ட போர்க்கப்பல்கள் இப்பொழுது
 டாஜெஸ்தான் கடலோரத்திற்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன. தெற்கு
 காகசஸில் உள்ள ஒரே ரஷ்ய இராணுவத் தளம் ஆர்மீனியாவில் உள்ளது.
 இதுவும் இராணுவ தலையீட்டிற்காகத் தயார் நிலையில் உள்ளது. கடந்த 
இலையுதிர்காலத்தில் சிரியாவில் மோதல் விரிவடைந்ததை அடுத்து, ரஷ்யா 
அதன் விமானந்தாங்கி கப்பலான Kuznetsov வை சிரியத் துறைமுகமான
 Tartous க்கு அனுப்பி வைத்தது. ஒரு போர் ஏற்பட்டால் தெஹ்ரானுக்கு 
ரஷ்யா குறைந்தப்பட்சம் இராணுவ-தொழில்நுட்ப மட்டத்திலேனும் 
ஆதரவைக்கொடுக்கும் என்று வல்லுனர்கள் நம்புகின்றனர்.

ஏப்ரல் மாதம் வந்த விமர்சனம் ஒன்றின்படி, புவி-அரசியல் அறிவியல் 
உயர்கல்விக்கூடத்தின் தலைவரான ஜேனரல் லியோனிட் இவஷோவ்,
ஈரானுக்கு எதிரான போர் என்பது ரஷ்யாவிற்கு எதிரான போர் ஆகும்” 
என்று எழுதியுள்ளார். மேலும் அவர் சீனா, இந்தியாவுடன் 
அரசியல்-இராஜதந்திர கூட்டிற்கும்” அழைப்பு விடுத்துள்ளார். மத்திய கிழக்கு
 முழுவதும் எடுக்கப்படும் செயற்பாடுகள் பிராந்தியத்தியத்தை உறுதிகுலைக்கச்
 செய்யும் வகையில் இருப்பதுடன், சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவிற்கு
 எதிராகவும் உள்ளன. ஈரானுக்கு எதிரான போர் நம் எல்லைகளில் வந்து
 முடியும். இது வடக்கு காகசஸ் நிலைமையை ஸ்திரமற்றதாக்கி, காஸ்பியன்
 பிராந்தியத்தில் நம் நிலைமையை வலுவிழக்கச் செய்யும்” என்று இவஷோவ்
 எழுதியுள்ளார்.
மாஸ்கோவிற்கு முக்கியக் கவலை ஈரானுக்கு எதிராக ஒரு போர் மூண்டால் 
தெற்கு காகசஸில் அதன் விளைவுகள் பற்றியது ஆகும். அப்பிராந்தியத்தில் 
கிரெம்ளினுக்கு ஒரு நட்பு ஆர்மீனியாதான். அது ஈரானுடன் நெருக்கமான
 பொருளாதாரப் பிணைப்புக்களைக் கொண்டுள்ளதுபோது, அண்டை நாடுகளான
 ஜோர்ஜியா மற்றும் அசர்பைஜான் ஆகியவை அமெரிக்கா, இஸ்ரேலுடன்
 இராணுவப், பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளன.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் அசர்பைஜன் ஒரு
 இராணுவக் கூட்டில் பங்கு கொள்ளலாம் என்று எல்லாவற்றிற்கும் மேலாக
 கிரெம்ளின் அச்சம் கொண்டுள்ளது. ஈரான், ரஷ்யா, ஆர்மீனியா மற்றும் 
காஸ்பியக் கடலை ஒட்டி அசர்பைஜான் உள்ளது. 1990களின் நடுப்பகுதியில்
 இருந்து தெற்கு காகசஸில் அமெரிக்காவிற்கு ஒரு முக்கிய இராணுவப், 
பொருளாதார நட்பு நாடாக விளங்கி, பல அமெரிக்க இராணுவத் தளங்களுக்கும்
 இடமளித்துள்ளது.
அசர்பைஜானுக்கும் ஈரானுக்கும் இடையே உறவுகள் ஏற்கனவே பதட்டம் 
 நிறைந்தவையாக உள்ளன. தெஹ்ரான் பலமுறையும் பயங்கரவாதத்
 தாக்குதல்களையும் நாசம் விளைவிக்கும் செயல்களைச் செய்வதாகவும் 
பாகு (Baku- அசர்பைஜான் தலைநகர்மீது குற்றம் சாட்டியுள்ளது. இவை 
அநேகமாக இஸ்ரேலிய, அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்களின் 
ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது என்றும் கூறியுள்ளது. சமீபத்திய 
ஆண்டுகளில் அசர்பைஜான் அதன் இராணுவச் செலவினங்களை 
இருமடங்காக்கியுள்ளதுடன், பெப்ருவரி மாதம் இஸ்ரேலுடன் 1.6 பில்லியன்
 டாலர் மதிப்புடைடைய ஆயுத உடன்பாட்டையும் முடித்துள்ளது. இதில் 
ஆளற்ற ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பு முறைகள் அடங்கியுள்ளன.
ஒபாமா நிர்வாகத்திலுள்ள மூத்த ஆதாரங்கள் சிலவற்றை மேற்கோளிட்டு 
மார்க் பெர்ரி அமெரிக்க இதழான Foreign Policy  இடம் மார்ச் கடைசியில் பாகு 
இஸ்ரேலுக்கு வடக்கு ஈரானை ஒட்டிய தன் எல்லையில் சில விமானத் 
தளங்களைப் பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளது எனத் தெரிவித்தார். 
இவை தெஹ்ரான் மீதான வான் தாக்குதலின்போது பயன்படுத்தப்பட முடியும்.
 ஒரு மூத்த அரசாங்க அதிகாரி, இஸ்ரேலியர்கள் ஒரு விமான நிலையத்தை
 வாங்கியுள்ளனர், இந்த விமான நிலையம்தான் அசர்பைஜான்என்று கூறியதாக
 இதழ் மேற்கோளிட்டுள்ளது. இராணுவ மூலோபாயம் இயற்றுபவர்கள் 
இப்பொழுது ஒரு போர்க் காட்சியைக் கணக்கில் கொள்ள வேண்டும். இதில் 
பாரசீக வளைகுடா மட்டும் அடங்கியிருக்கவில்லை, காகசஸும் உள்ளது” 
என்று பெர்ரி எச்சரித்துள்ளார்.

இந்தத் தகவலை பாகு அரசாங்கம் உடனடியாக மறுத்துள்ளது. ஆனால் 
அசர்பைஜானின் செய்தித்தாள் Neue Zeit உடைய ஆசிரியர் ஷகிர் கப்லிகோக்லி 
ஈரானுக்கு எதிரான போரில் அசர்பைஜானும் இழுக்கப்படக்கூடும் என்று 
எச்சரித்துள்ளார்.
ஈரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதலின் ஆரம்பக்கட்டத்தில் அசர்பைஜான் 
இல்லாவிடினும்கூட, இப்போர் மற்ற நிலப்பகுதி மோதல்களான ஆர்மீனியா,
 அசர்பைஜான் ஆகியவை நகோர்னோ-கராபாக் பகுதிகள் பற்றிய இராணுவ 
மோதல்களுக்கும் இட்டுச்செல்லும் ஆபத்து உள்ளது. இப்பிராந்தியம் 1994 
உள்நாட்டுப் போர் முடிவில் இருந்து சுதந்திரமாக இருக்கிறது. ஆனால் பாகு 
அரசாங்கம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியக் குழு ஆகியவை இது அசர்பைஜானின்
 ஒரு பகுதியாகத்தான் கருதப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன. 
ஆர்மீனியாவிற்கும் அசர்பைஜானுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக
 பலமுறை எல்லை மோதல்கள் வந்துள்ளன. இம்மோதல்கள் ரஷ்யா, 
அமெரிக்கா மற்றும் ஈரானை அதில் ஈடுபடுத்தும் போராக விரிவாகலாம் 
என விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
ரஷ்யாவின் Komsomolskaya Pravda விற்குக் கொடுத்துள்ள பேட்டியில் இராணுவப்
 பிரிவு வல்லுனர் மிகாய்ல் பாரபானோவ் சோவியத்திற்குப் பிந்தைய 
பிராந்தியத்தில் மோதல்கள் நடந்தால் அது ரஷ்யாவின் இராணுவத் தலையீட்டிற்கு 
வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். அமெரிக்கா அல்லது நேட்டோ சக்தி ஏதேனும்
 பிராந்தியத்தில் தலையிடுவது என்பது அதனுடன் அணுவாயுதங்கள்
 பயன்படுத்தும் தவிர்க்க முடியாத ஆபத்தை கொண்டுவரும். அமெரிக்காவிற்கு
 அடுத்தாற்போல் உலகில் இரண்டாம் அதிக அணுவாயுதக் கிடங்கை ரஷ்யா
 கொண்டுள்ளது.
புவி மூலோபாய முக்கியத்துவத்தினால், யூரேசியா பொருளாதார, அரசியல்
 போட்டிகள் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் உடைவைத்தொடர்ந்து 
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான இராணுவ மோதல்களுக்கான 
மையத்தானமாகிவிட்டது. அசர்பைஜான், ஜோர்ஜியா மற்றும் ஆர்மீனியா ஆகியவை
 ஒருபக்கத்தில் எரிசக்தி செழிப்பு உடைய மத்திய ஆசியா, காஸ்பியன் கடலுக்கும் 
மறுபக்கம்  ஐரோப்பா, கருங்கடல் என்பவற்றிற்கு இடையே பாலம் போல் உள்ளன.
இப்பிராந்தியத்தில் செல்வாக்கை அடைவதற்கு அமெரிக்க பொருளாதாரக் 
கூட்டுக்கள் மூலம் 1990களில் இருந்து முயன்றுவருகிறது. 1998ல் அப்பொழுது 
எண்ணெய்த்துறைப் பெருநிறுவனம் ஹாலிபர்ட்டனின் தலைமை நிர்வாகியாக
 இருந்தவரும் பின்னர் அமெரிக்கத் துணை ஜனாதிபதியான ரிச்சர்ட் ஷென்னி
,காஸ்பியன் போல் ஒரு பிராந்தியம் திடீரென மிகப்பெரிய மூலோபாய 
முக்கியத்துவத்தை பெற்ற ஒரு காலத்தை என்னால் நினைவுகூறமுடியாதுள்ளது” 
என்று அறிவித்தார்.
The Grand Chessboard  என்னும் தன் நூலில் அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டருக்கு
 முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த Zbigniew Brzezinskyபின்வருமாறு 
எழுதினார்: யூரேசியாவை மேலாதிக்கம் கொள்ளும் சக்தி உலகின் மிக
 முன்னேற்றமான, பொருளாதாரரீதியாக உற்பத்தித் திறன் நிறைந்த பகுதிகளில் 
மூன்றில் இரண்டு பங்கின் மீது கட்டுப்பாட்டைக் கொள்ளும். யூரேசியாவில் 
உலகில் அறியப்பட்டுள்ள எரிசக்தி இருப்புக்களில் முக்கால் பகுதி உள்ளது.
இப்பிராந்தியத்தின் மத்திய முக்கியத்துவம் ரஷ்யாவை ஒதுக்கிவிட்டு ஆசியாவில் 
இருந்து ஐரோப்பாவிற்கு எரிசக்தி விநியோகம் செல்லும் போக்குவரத்துப் பகுதியாக 
அதன் பங்கு இருப்பதுதான். சில மாற்று குழாய்த்திட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பதின் 
மூலம் வாஷிங்டன் ஐரோப்பாவுடன் ரஷ்யா கொண்டிருக்கும் பிணைப்புக்களை
 வலுவிழக்கச் செய்ய முயல்கிறது. ஐரோப்பா மிக அதிக அளவு ரஷ்யாவைத்தான்
 எண்ணெய்க்கும் எரிவாயுவிற்கும் நம்பியுள்ளது.
இதுவரை ஜோர்ஜியாதான் எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகங்களுக்கு 
முக்கிய போக்குவரத்து நாடாக இருந்தது. அதேபோல் பிராந்தியத்தின் 
மோதல்களின் மையத்தானத்திலும் இருந்தது. 2003ல் வாஷிங்டனின் 
தூண்டுதலில் நடத்தப்பட்ட ஜோர்ஜியாவில் நடைபெற்ற ரோசாப் புரட்சிமிகைல்
 சாகாஷ்வில்லியை ஜனாதிபதியாக இருத்தியதுடன், அதன்மூலம் அமெரிக்காவின்
 பொருளாதார, மூலோபாய நலன்கள் அப்பிராந்தியத்தில் பாதுகாக்கப்படலாம்
 எனக் கருதப்பட்டது. இது மாஸ்கோவுடன் புவிமூலோபாய மேலாதிக்கத்தையொட்டிய
 அழுத்தங்கள் தீவிரமாவதற்கு வழிவகுத்தது. 2008 கோடையில் ஜோர்ஜியாவிற்கும்
 ரஷ்யாவிற்கும் இடையே நடந்த போர் இரு நாடுகளுக்கும் இடையே போட்டியை 
அதிகமாக்கி ஒரு ரஷ்ய அமெரிக்க போராக விரிவடையும் திறன் கொண்ட 
அபாயத்தை அடைந்தது. ரஷ்யாவிற்கும் ஜோர்ஜியாவிற்கும் இடையே உள்ள
 உறவுகள் அப்பொழுது முதல் பதட்டம் நிறைந்தவையாகத்தான் உள்ளன.
காகசஸ் மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்கச் செல்வாக்கு சமீப ஆண்டுகளில்
 கணிசமாகக் குறைந்துவிட்டது. ரஷ்யாவைத் தவிர, சீனா இப்பகுதியில் ஒரு 
முக்கிச் சக்தியாக வெளிப்பட்டு, கணிசமான பொருளாதார, இராணுவ உறவுகளை 
காஜஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளுடன் கொண்டுள்ளது. ரஷ்யாவும்
 சீனாவும் போட்டி நாடுகள்தான் என்றாலும், அமெரிக்காவுடன் போட்டி என 
வரும்போது அவை ஒரு மூலோபாய உடன்பாட்டைக் கொண்டுள்ளன.
 அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஈரானுக்கு எதிரான போர் என்பது எரிசக்தி 
செழிப்பு மிகுந்த மத்திய ஆசியா, மத்திய கிழக்கு ஆகியவற்றைக் 
கட்டுப்படுத்துவதற்கு சீனா மற்றும் ரஷ்யாவுடன் அதிகரித்த மோதல் என்னும் 
ஒரு மேலதிக கட்டதைத்தைத்தான் பிரதிபலிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக