மே 24, 2012


ஈரானுடனான மோதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா


PETER SYMONDS     அடுத்த வாரம் பாக்தாத்தில் ஈரானுக்கும் 
P5+1 எனப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, 
சீனா மற்றும் ஜேர்மனி ஆகியவற்றிற்கு இடையே நடக்கும்
 பேச்சுக்கள் ஈரானிய அணுசக்தி திட்டங்கள் பற்றிய ஓர் 
ஆபத்தான மோதலின் திருப்புமுனையாக இருக்கும். பெரும் விட்டுக்கொடுப்புக்களை செய்யுமாறு அமெரிக்கா 
தெஹ்ரானுக்குத் தீவிர அழுத்தங்களைக் கொடுப்பதுடன், 
அதே நேரத்தில் அமெரிக்க முடக்கிவிடும் பொருளாதாரத் 
தடைகளைச் சுமத்த தயாரிப்புக்களை நடத்துவதுடன், போர் அச்சுறுத்தலையும் உருவாக்குகிறது.
கடந்த வாரம் வியன்னாவில் பேசுகையில் அமெரிக்க 
அணுச்சக்தி பேச்சுவார்த்தை நடத்தும் ரொபேர்ட் வூட் ஈரான் 
உடனடியான நடைமுறைச் செயற்பாடுகளை எடுத்து, அதன்
 சர்வதேச கடமைகளைச் செயல்படுத்த வேண்டும்” என்று 
கோரினார். IAEA எனப்படும் சர்வதேச அணுச்சக்தி அமைப்பிற்கு
 அனைத்து உரிய இடங்களையும், ஆவணங்களையும்
 பார்வையிடவும் மற்றும் அதன் அணுச்சக்தித்திட்டம்
 பற்றிய பிரச்சினைகளைத் தீர்க்கும் தகுதியுடைவர்களுடன்
 தொடர்புகொள்ள அனுமதிக்காததற்கும்” குறைகூறியுள்ளார்.

அணுவாயுதங்களை தயாரிக்கும் நோக்கம் தனக்குக் கிடையாது 
என்று ஈரான் பல முறை அறிவித்துள்ளது. நாடன்ஸ் மற்றும்
 போர்டோ அடர்த்தியாக்கும் ஆலைகள் உட்பட அதன் 
அணுச்சக்தி நிலையங்கள், கிடங்குகள் ஆகியவை சர்வதேச 
அணுச்சக்தி அமைப்பின் ஆய்விற்கு உட்பட்டுள்ளதுடன், NPT  
எனப்படும் அணுவாயுதப் பரவா உடன்படிக்கைத் தேவையின் 
படி அவை கண்காணிப்பில் உள்ளன என்று அது கூறியுள்ளது.
 ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அணுவாயுதப்
 பரவா உடன்படிக்கையால் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரான் 
யுரேனிய அடர்த்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும் 
எனவும் ஈரான் நாட்டை விட்டு 20% அடர்த்தியாக்கப்பட்டுள்ள யுரேனியத்தையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் 
என்றும் வலியுறுத்துகின்றன.

பாக்தாத் பேச்சுக்களில் இருந்து எந்த உறுதியான உடன்பாடு 
வெளிப்படும் வாய்ப்பும் மிகவும் குறைவானதுதான். அணுவாயுதப்
 பரவா உடன்படிக்கையால் அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச 
அணுச்சக்தி அமைப்பு நபர்களையும் நிலையங்களையும் 
காண்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்னும் 
அமெரிக்கக் கோரிக்கைகள், அப்பரந்த நாட்டின் எப்பகுதியிலும் 
அணுசக்தி ஆயுதத் தயாரிப்பிற்கான திட்டங்கள் ஏதும் 
இல்லாதபோதும் ஒரு இல்லாத ஒன்றை ஈரான் நிரூபிக்க 
வேண்டும் என்னும் வழிவகையை முடிவிலாமல் வற்புறுத்துவது 
ஆகும். இந்த வாரம் ஈரானிய அதிகாரிகளை சந்திக்கவுள்ள
சர்வதேச அணுச்சக்தி அமைப்பு ஈரானின் Parchinவளாகத்தை 
பார்வையிட வேண்டும் எனக் கோரியுள்ளது. இதுவோ ஒரு 
இராணுவத் தளமாகும். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன் 
அணுவாயுத தயாரிப்பிற்கு தேவையான உயர் வெடிப்புச் சோதனை 
இங்கு நடந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல் பல முறை 
கூறியுள்ளபடி, சர்வதேச அணுச்சக்தி அமைப்பிற்கான சான்றுகள்” வெளிநாட்டு உளவுத்துறை ஆதாரங்களில் இருந்து அநேகமாக 
அமெரிக்கா அல்லது இஸ்ரேலிடம் இருந்து, வந்துள்ள எனக் 
கூறுகிறது.
ஈரானுக்கு எதிராக ஒரு ஆத்திரமூட்டப்படாத இராணுவ 
நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தி வரும் இஸ்ரேல், 
பேச்சுக்களில் அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் ஈரானின் அடர்த்தியாக்கும் திட்டங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி 
தேவை எனக் கோருகிறது. அசோசியேட்டட் பிரஸ் கருத்துப்படி, இஸ்ரேலியப் பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தென்யாகு ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைத் தலைவர் கத்தரின் ஆஷ்டனிடம் கடந்த 
வாரம் ஈரான் அடர்த்தியை முடிப்பதற்கு ஒரு காலக்கெடுவை 
நிர்ணயிக்க வேண்டும் என்றும், அதன் போர்டோ ஆலையை 
அகற்றிவிட வேண்டும் என்றும் அப்பொழுதுதான் இஸ்ரேல் 
பேச்சின் முடிவுகளை ஒப்புக் கொள்ளும் என்று கூறியுள்ளார். இக்கோரிக்கைகளை ஏற்கனவே தெஹ்ரான் நிராகரித்துவிட்டது.

எதிர்க்கட்சியாக இருந்த கடிமா கட்சியை அரசாங்கத்திற்குள் கொண்டுவந்துள்ள புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூட்டணியின் நிலைப்பாட்டை உறுதிசெய்து கொள்ள ஆஷ்டன் இஸ்ரேலுக்கு 
வந்திருந்தார். முன்னாள் உட்பாதுகாப்புத் துறைத் தலைவரான 
கடிமாவின் தலைவர் ஷாவுல் மோபஸ், ஈரான் மீதான 
தாக்குதல்கள் என்னும் நெத்தென்யாகுவின் அச்சுறுத்தல்கள் பற்றிக் குறைகூறியுள்ளார். ஆனால் அவர் மந்திரிசபையில் உறுப்பினராக சேர்ந்துள்ளது, ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலின் வாய்ப்பை அதிகரித்துள்ளதே ஒழியக் குறைத்துவிடவில்லை. இது மத்திய அரசாங்கத்திற்குப் பாராளுமன்றத்தில் மிகப்பெரிய பெரும்
பான்மையை கொடுத்துள்ளது. மோபஸ் மந்திரிசபையில் இருப்பது 
ஈரான் மீதான போருக்கு உள்நாட்டில் பரந்த அளவில் இருக்கும் 
எதிர்ப்பை மழுங்கச் செய்ய பயன்படுத்தப்படும்.
கடந்த வியாழன் அன்று இஸ்ரேலின் சானல் 10 நியூஸ், ஈரான் 
மீதான இஸ்ரேலிய வான் தாக்குதல்களுக்கு பாதை தெளிவாகி
விட்டது என்ற நிலைப்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகள் 
நீண்டநேரப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தனர் என்று தகவல் 
கொடுத்துள்ளது. தாக்குதலுக்கு இடையூறாக இருக்கும் எனக் 
கருதப்பட்ட ஒரு முன்கூட்டிய தேர்தலைத் தவிர்க்கும் வகையில் நெத்தென்யாகு மோபசுடன் கூட்டணி ஒன்றை ஏற்படுத்திக் 
கொண்டுவிட்டார். ஒரு கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில், 
இருவரும் ஈரான் உட்படப் பல பிரச்சினைகளில் ஒரே 
மாதிரியான கருத்துக்களைக் கொண்டுள்ளதாக அறிவித்தனர்.
அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள 
வேறுபாடுகள் தந்திரோபாயத்தை பற்றியதுதான். பேச்சுக்கள், 
பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றை நெத்தென்யாகு உதறித் 
தள்ளுகிறார். ஒபாமா நிர்வாகம் தாக்குதலுக்கு முன் தெஹ்ரானில் 
உள்ள ஆட்சியைக் பலவீனப்படுத்தி குழிபறிக்க முயல்கிறது. 
தன் எண்ணெய் ஏற்றுமதிகளைக் கிட்டத்தட்ட முற்றுகையிட்டு
விடும் அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரத் தடைகள் சுமத்தப்
படுவதை தடுக்க ஈரான் பெருமுயற்சி செய்கின்றது. அத்தகைய
 தடைகளே ஒரு பொருளாதாரப் போர் நடவடிக்கைதான். இவை
 ஜூன் மாத இறுதியில் நடைமுறைக்கு வரும்.
கடந்த பதினைந்து நாட்களில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் 
ஹில்லாரி கிளின்டன், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகள்மீதும்
 ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அவை 
நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அமெரிக்கப் 
பொருளாதாரத் தடைகள் ஜனாதிபதி ஒபாமா விலக்களித்தால் 
ஒழிய ஒருதலைப்பட்சமாக ஈரானின் மத்திய வங்கியுடன் 
தொடர்புடைய வெளிநாட்டு வங்கிகள், பெருநிறுவனங்கள் மீது அபராதங்களை விதிக்கும். குறிப்பிட்ட வகையில் அபராதங்களை 
சுமத்துவது என்பது ஈரானுடனான மோதலை அமெரிக்கா அதன்
 போட்டி நாடுகளின் குறிப்பாக சீனாவில் நிலைப்பாட்டை 
குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு பயன்படுத்துகிறது என்பதைத்தான் தெளிவாக்குகிறது.
ஒபாமா நிர்வாகத்தின் தயாரிப்புக்கள் பொருளாதாரத் 
தடைகளுடன் நின்றுவிடவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில்
 இருந்தே, அமெரிக்க கடற்படை பாரசீக வளைகுடாவிலும் 
அதற்கு அருகிலும் நிறுத்தி வைத்துள்ள அதன் விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் குழுவை இரண்டாக அதிகரித்துள்ளது. இம்மாதம் முன்னதாக, பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் பென்டகன் 
அதன் மிக நவீன, நயமான போர்விமானங்களை—F22 Raptor—
ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் உள்ள அல்-தாப்ரா விமானத் 
தளத்திற்கு அனுப்பியுள்ளது என்று உறுதிபடுத்தினர். இத்தகைய போர்க்கட்டமைப்பு அமெரிக்க இராணுவத்திற்கு ஈரானின் இராணுவ, அணுச்சக்தி நிலையங்கள் மீது பாரிய விமானத் தாக்குதல்களை
 நடத்தும் திறனை அளித்துள்ளது.
வளைகுடாவில் அதன் நட்பு நாடுகளில் உள்ள சர்வாதிகார, 
முடியாட்சிகளின் இராணுவத் திறனை வலுப்படுத்துவதிலும் 
வாஷிங்டன் ஈடுபட்டுள்ளது. சமீபத்திய நடவடிக்கை ஒன்றின்படி, 
ஒபாமா நிர்வாகம் வெள்ளியன்று பஹ்ரைனுக்கு இராணுவத்
 தளவாடங்கள் விற்பனையைத் தான் மீண்டும் தொடங்கும் 
என்று அறிவித்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் கருத்துப்படி 
கொடுக்கப்பட இருக்கும் தளவாடங்களில் போர்க்கப்பல்கள், 
வானில் இருந்து வான்வழி, தரையில் இருந்து வான்வழித் 
தாக்கும் ஏவுகணை முறை மற்றும்F16 போர் விமானங்களுக்கு
 இயந்திர மேம்பாட்டு முறை ஆகியவை அடங்கும். அமெரிக்க கடற்படையின் ஐந்தாம் பிரிவு பஹ்ரைனில்தான் நிலைப்பாடு கொண்டுள்ளது.
தெஹ்ரானுடன் பெருகிவரும் அமெரிக்க மோதல், முக்கியமாக 
ஈரானின் அணுச்சக்தி திட்டங்கள் குறித்த அல்ல. மாறாக ஒரு
 புதிய ஆக்கிரோஷப் போருக்கான தயாரிப்பு ஆகும். இதற்குக் 
காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்றுத் தன்மை 
மிகுந்த வீழ்ச்சியும், அதற்குப் பதிலாக தன் இராணுவ 
மேன்மையைப் பயன்படுத்தி எரிசக்தி செழிப்பு உடைய மத்திய 
கிழக்கு, மத்திய ஆசியா ஆகியவற்றில் தடையற்ற ஆதிக்கத்தை உறுதிபடுத்திக் கொள்ள அது கொண்டுள்ள உறுதிப்பாடுதான். 
ஏற்கனவே ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது 
படையெடுத்தபின், அமெரிக்கா பொறுப்பற்ற முறையில் 
மற்றொரு போரைத் தொடக்கும் அச்சுறுத்தலைக் காட்டியுள்ளது. 
இது பிராந்தியம் முழுவதையும் சூழும் என்பதுடன் இன்னும் பரந்த மோதல்களையும் தூண்டிவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக