மே 16, 2012



புனிதப் பயணத்துக்கான தமிழக 

அரசின் மானியம் சரியா?





தமிழகத்திலிருந்து இந்துக்கள் சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகியத் திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு பயணச் செலவில் ஒரு பகுதி மானியமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தாங்கள் அளித்திருந்த
வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலேயே தமிழக அரசு இந்த மானிய உதவியை வழங்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்த அரசு மானியம், மானசரோவர் புனித யாத்திரைக்குச் செல்ல இந்திய வெளியுறவுத் துறையால் தேர்வு செய்யப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 250 இந்துக்களுக்கும், முக்திநாத் யாத்திரை மேற்கொள்ளும் 250 இந்துக்களுக்கும் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மானசரோவர் ஏரி
மானசரோவர் புனிதப் பயணத்துக்கு ஒரு நபருக்கு ஆகும் மொத்த செல்வான ஒரு லட்சம் ரூபாயில் 40,000 ரூபாயும், முக்திநாத் புனிதப் பயணத்துக்கு ஒரு நபருக்கு ஆகும் செலவான 25,000 ரூபாயில், 10,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜெரூசலத்துக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் தமிழகத்தைச் சேர்ந்த 500 கிறிஸ்துவர்களுக்கும் இது போன்ற மானியம் அளிக்கப்பட்டு வருகிறது என்பதையும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஹஜ் பயணம்
மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு பயணக்கட்டண சலுகை வழங்கப்படுவது படிப்படியாக குறைக்கப்பட்டு பத்தாண்டுகளில் நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள நிலையில், தமிழக அரசின் இன்றைய அறிவிப்பு சரியானது அல்ல என்று இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், இந்திய அரசின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞருமான சி எஸ் வைத்தியநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
BBC-தமிழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக