செப்டம்பர் 26, 2012


12 ஏஜென்டுகளை அவசரமாக வெளியேற்றிய சி.ஐ.ஏ! உளவு வட்டாரத்தில் அதிர்ச்சி!!


லிபிய நகரம் பென்காசியில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டு, அமெரிக்க தூதர் 
உட்பட 4 பேர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்த இரண்டு மணி நேரத்திலேயே, பென்காசி நகரில் இருந்த சி.ஐ.ஏ. ஏஜென்டுகள் 12 பேரை, அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது சி.ஐ.ஏ. தலைமை செயலகம்.
இந்த விஷயம் தற்போதுதான் லீக்காகி, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அல்காயிதாவை உருவாக்கியதும் அமெரிக்க தூதரை கொன்றதும் அமெரிக்கா தான் - இங்கிலாந்து எம்.பி அதிரடி !

லண்டன் - அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றும் லிபியாவில் சமீபத்தில் இறந்த அமெரிக்க தூதரை கொன்றது அமெரிக்கா தான் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தெரிவித்துள்ளார். யூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும் அவர்களுக்கு ஆயுத நிதி உதவிகளை தந்ததோடு அவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்று தாங்களே பிரபலபப்டுத்தியதாக ஜார்ஜ் கூறினார்.
ஸ்காட்லாந்தின் வில்லியம் துறைமுகத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறிய ஜார்ஜின் கருத்து குறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. லிபியாவில் தற்போது புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் மீது திருப்தி இல்லாததால் ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா அனுப்பி வைத்த ஆட்களே அமெரிக்க தூதரை கொன்றனர் என்றும் ஜார்ஜ்
அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார்.
அமெரிக்கா தேவைப்படும் போது தனக்கு பிடிக்காத ஆட்சியை கவிழ்க்க தீவிரவாதிகளை அனுப்பும் என்று கூறிய ஜார்ஜ் இரட்டை கோபுர தாக்குதல் தீவிரவாதிகள் அமெரிக்காவால் பயிற்சி அளிக்கபப்ட்டவர்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறு விமானத்தை இயக்குதல் மற்றும் இரட்டை கோபுரத்துக்குள் நுழையும் பயிற்சி உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்டதாக கூறினார்.

அமெரிக்க இராணுவத்தின் கஞ்சா பண்ணைகள். மாபியா வர்த்தகம் - ஆக்கிரமிப்பு இராணுவத்தின் நிழல் வியாபாரம் (புகைப்படங்கள் இணைப்பு)

இரவில் வந்து இறங்கும் அந்த இராணுவ விமானத்தில் இருந்து சில பார்சல்கள் மெல்ல விமான தளத்திற்குள் எடுத்து செல்லப்படாமல் சவலட் கார்களில் வரும் மாபியாக்களின் டிக்கியில் ஏற்றப்படுகின்றன. ஹவானா சுடுட்டு பிடிக்கும் கேர்ணலும், நவீன அல்காபோன்ஸ்களும் அதனை அமைதியாக பார்த்தபடி நிற்கின்றனர். இது நடப்பது ஏதோ ஒரு அமெரிக்க விமான தளத்தில். வந்திறங்கும் அந்த கார்கோ விமானம் ஆப்கானில்

எகிப்திய ஜெனரல்களின் எச்சரிக்கை - “சினாய் எமது மண். எல்லை மீறினால் கரங்களை துண்டிப்போம்”


 
Corporal Netanel Yahalomi. கடந்த வெள்ளிக்கிழமை ஆயுததாரிகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய எல்லையோர காவல் வீரன். அவனின் கொலைக்கு பதிலடியாகவும், இதுபோன்ற கொலைகள், அச்சுறுத்தல்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் எகிப்தின் சினாய் பிரதேசத்தில் மட்டுப்படுத்திய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேலிய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலிய இராணுவத்தின் அதியுயர் கட்டளை தளபதி கடந்த ஞாயிற்று கிழமை சினாய் பகுதிக்க விஜயம் செய்து யூத வீரர்கள் மத்தியில் உரை நிகழ்த்தியிருந்தார்.

இஸ்ரேல் எம்மீது தாக்கினால்.... - Mohammad “Ali Jafari”, commander of Iran’s Revolutionary Guard

Mohammad Ali Jafari, September 16, 2012.

ரானை தாக்கினால் இஸ்ரேலிற்கு என்ன ஆகும்? என்ற இராணுவ களநிலையை ஊடகங்களின் தொடரான செயற்பாட்டின் ஊடாக மாற்றி இன்று உலக மக்களின் மனதை இன்னொரு சிந்தனைக்கு இட்டு சென்றுள்ளது ஸியோனிஸ சக்திகள். இன்றைய ஊடகங்கள் “இஸ்ரேல் ஈரானை தாக்க தயாராகிறது”, “எந்த நிமிடத்திலும் இஸ்ரேலிய விமானங்கள் ஈரானை தாக்கலாம்” போன்ற செய்திகளை தொடராக வெளியிடுவதன் மூலம்

செப்டம்பர் 19, 2012


சவூதி இளரவரசர், உமர் சுலைமானை சி.ஐ.ஏ கொலைச் செய்ததா? – சந்தேகத்தை கிளப்புகிறார் ஃபரீத் ஸக்கரியா !

நியூயார்க்:சவூதி இளவரசர்
 நாயிஃப் பின் அப்துல் 
அஸீஸ் மற்றும் முன்னாள்
 எகிப்திய சர்வாதிகாரி ஹுஸ்னி
 முபாரக்கின் அரசில் உளவுத்துறை
 தலைவராக பணியாற்றிய உமர்
 சுலைமான் ஆகியோரின்
 மரணத்தின் பின்னணியில் சி.ஐ.ஏ
 இருப்பதாக பிரபல இந்திய வம்சாவழியைச் சார்ந்த அமெரிக்க பத்திரிகையாளர்

யூ டியூப் இணையதளத்திற்கு வங்கதேசம் தடை. பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவு !

வங்கதேசத்தில் யூ டியூப் இணையதளத்துக்கு
 தடை விதிக்கப்பட்டுள்ளது. 
முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய
 "இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்'
 திரைப்படம் அந்த இணையதளத்தில்
 இடம் பெற்றுள்ளதே இதற்குக் 
காரணம். அத்திரைப்படத்துக்கு எதிராக 
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் 
அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து
 போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 இந்நிலையில் இது தொடர்பாக வங்கதேச
 பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை 
வெளியிட்டார். அதில், "தங்கள் மதத்துக்கு எதிரான இதுபோன்ற 
அவமதிப்பை எந்த முஸ்லிமும் பொறுத்துக் கொள்ள
 மாட்டார். அத்திரைப்படத்தை எடுத்தவர்களுக்கு அமெரிக்கா
 கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். 
வங்கதேசத்தில் அப்படத்துக்கு தடை விதிக்கப்படுகிறது'
 என்று தெரிவித்தார்

செப்டம்பர் 18, 2012


மர்வா ஸபா கவாக்ஸி :
 ஹிஜாபுக்காக தன்னை அர்பணித்த இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண் !

மர்வா ஸபா கவாக்ஸி: இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண்களில் ஒருவர் ஆபிரிக்காவின் மொரோக்கோ முதல் ஆசியாவின் இந்தோனேசியா வரை பரந்து விரவிக் கிடக்கும் இஸ்லாமிய உலகில் பல கோடிப் பெண்கள் ஹிஜாபை துறந்திருக்கின்றபோது, ஹிஜாபுக்காக தனது குடியுரிமையையும் பாராளுமன்ற அங்கத்துவ உரிமையையும் உதறித் தள்ளிமைதான் மர்வா செய்த மாபெரும் புரட்சி. 1999 இல் துருக்கிய பாராளுமன்றத்தில்
பாராளுமன்ற உறுப்பினருக்கான சத்தியப் பிரமாணத்தை எடுப்பதற்கு நுழைந்தபோது அங்கிருந்த கொடுங்கோன்மை மிக்க மதச்சார்பற்ற சக்திகள் கூக்குரலிட்டனர். அவரை ஒரு இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரி என்று வர்ணித்ததோடு பாராளுமன்றத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறும் காட்டுக் கூச்சல் போட்டனர்.
கலாச்சார உரிமைகள் குறித்து பேசும் ஐரோப்பாவில் உடுப்பதற்கான உரிமை மறுக்கப்பட்ட நிலையில், தனது குடியுரிமையையும் இழந்து அமெரிக்காவில் குடியேறியவர் கவாக்ஸி. இஸ்லாமிய அறிவுத் துறையிலும் சமூகப் பணிகளிலும் தஃவாவிலும் அரசியல் செயற்பாட்டிலும் ஓர் உயிர்த் துடிப்புள்ள ஆளுமையாக விளங்குகின்றவர். இந்நூற்றாண்டு கண்ட புரட்சிகரமான பெண்களில் ஒருவர்.

அழிவின் விளிம்பில் சியோனிஸ்டுகள் – அஹ்மத் நஜாத் !

டெஹ்ரான்:நாகரீகமற்ற 
சியோனிஸ்டுகளின் காலம்
 முடிந்துவிட்டது. அவர்கள் 
அழிவின் விளிம்பில் உள்ளனர்
 என்று ஈரான் அதிபர் அஹ்மத்
 நஜாத் கூறியுள்ளார். 
பல்வேறு மத நம்பிக்கையாளர்களுக்கு
 மத்தியில் பிரிவினையின் விதையை தூவும் சியோனிஸ்டுகளின் பிடியில்
 இருந்து உலகம் சுதந்திரம் அடையும் என்பதில் தனக்கு நல்ல நம்பிக்கை 
இருப்பதாக நஜாத் தெரிவித்தார்.
இஸ்ரேல் அரசின் நிலைமை ஆபத்தில் இருப்பது அமெரிக்க அரசுக்கு 
புரிந்துவிட்டது. இது யூத அரசு புதிய சூழ்ச்சிகளை மேற்கொள்ள 
தூண்டுகிறது. இஸ்லாத்திற்கு எதிராக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட
 திரைப்படம் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை
 ஏற்படுத்தியுள்ள சூழலில் அஹ்மத் நஜாதின் அறிக்கை வெளியாகியுள்ளது 
குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 17, 2012


ஈரானை இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்கலாம்?: அமெரிக்க, பிரித்தானிய படைகளும் வளைகுடா நோக்கிப் படையெடுப்பு!

ஈரானின் அணு உலைகளை இலக்குவைத்து இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை வளைகுடாவில் தோன்றியுள்ளதுடன் அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் வளைகுடாப் பகுதியை நோக்கிப் படையெடுத்துள்ளன.இருபத்தைந்து நாடுகளின் போர்க்கப்பல்கள், விமானந் தாங்கிக் கப்பல்கள், நீர்மூழ்கிகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணைப்  (Strait of Hormuz) பகுதியில் இதுவரை இல்லாத அளவில் அவை  மிகப்பெரிய போர் ஒத்திகையை அங்கு நடத்தவுள்ளன. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணையின் ஊடாக தினசரி 18 மில்லியன் மசகெண்ணெய் பெரல்களைக் கப்பல்கள் கொண்டுசெல்கின்றன. இந்த வழியைத் தடைசெய்யப்போவதாக  ஈரான் பல மாதங்களாக எச்சரித்து வருகின்றது. இதன்மூலம் உலக நாடுகள் பலவற்றினை ஸ்தம்பிக்க வைக்கமுடியுமென ஈரான் கருதுகின்றது. இந்நீரிணையூடான வழியை மூடுமானால் ஈரான் மீது தாக்குதல் நடத்த உலகநாடுகள் பல தயாராகவுள்ளன. ஈரானிடம் அதிநவீன தொழில்நுட்பங்கள் இல்லாதபோதிலும் சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்கள், அதிவேக தாக்குதல் படகுகள் போன்றவற்றின் மூலம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய கப்பல்களை அது தாக்கலாம் என நம்பப்படுகின்றது. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுமானால் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சாது என அந்நாட்டின் புரட்சிகரப் படையின் கட்டளைத் தளபதி  ஜெனரல் மொஹமட் அல் ஜபாரி எச்சரித்துள்ளார்.

மனித பரிணாமம் = மல்டிபிள் பர்சனாலிடி டிஸ்ஆர்டர்?


========================================

Please Note:
மனித பரிணாம துறை என்பது மிகப்பெரியது. முடிந்தவரை இந்த பதிவை
 எளிதாக்கி, சுவாரசியமான நடையில் தரவே முயற்சித்துள்ளேன். இன்றைய 
காலத்திற்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு அவசியமான 

இக்கட்டுரையை சற்றே பொறுமையுடன் முழுமையாக படியுங்கள்.

========================================
1867-ஆம் ஆண்டு, கல்வர் என்ற இயற்கையாளர், மனித பரிணாமம் குறித்த 
விளக்கப்படம் ஒன்றை வரைந்தார். ப்லாடிபஸ் என்ற உயிரினமாக டைனாசர்கள் 
மாறுவதை போன்றும், கங்காருவில் இருந்து மனிதன் பரிணாமம் அடைந்ததாகவும் விளக்கியது அந்த படம்.

நல்லவேளையாக 1871-ஆம் ஆண்டு, மனித பரிணாமம் குறித்த தன்னுடைய பிரபல புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். இல்லையென்றால் மனித பரிணாமத்தை விளக்குகின்றேன் என்ற பெயரில் கற்பனைக்கு எட்டாத கற்பனை படங்களை வரைந்து தள்ளியிருப்பார்கள் பரிணாமவியலாளர்கள்.

குரங்கு போன்ற ஒன்றிலிருந்து(?) மனிதன் வந்ததாக கூறப்படும் கோட்பாட்டை டார்வின் பிரபலப்படுத்த, மனித பரிணாமம் குறித்த ஒருமித்த கருத்து பரிணாமவியலாளர்களிடயே உருவாகியது.

முஸ்லிம் உலகை ஆத்திரப்படுத்தி அதனை சாக்காக வைத்து தனது இராணுவத்தை உள்நுழைக்கும் ஸியோனிஸ சதி - யெமன் ஒரு சாம்பிள் !!

முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நிந்தனை செய்யப்பட்டு அமெரிக்காவில் வெளியான 
திரைப்படம் பற்றி நாம் அறிந்துள்ளோம். 
அதன் பின்னரான உலகலாவிய முஸ்லிம் 
உம்மாவின் எழுச்சி பற்றி நாம் பல 
வீடியோக்களையும், போட்டோக்களையும் பார்த்துள்ளோம். மெய்சிலிர்த்துள்ளோம். 
உலகளாவிய முஸ்லிம் உம்மாவின் எழுச்சி 
பற்றி இஹ்வானிய பாணியில் 
புளுகாங்கிதம் அடைந்துள்ளோம்.

செப்டம்பர் 14, 2012


நபியை அவமதிக்கும் திரைப்படத்தின் மறுபக்கம் - லிபிய ஏவுகணை தளங்கள் சொல்லும் அரசியல்


லிபியாவில் எரிகிறது அமெரிக்க தூதரகம். லெபனானில் அதன் சுவர்கள் தகர்க்கப்படுகின்றன. யெமனில் ஆர்.பி.ஜி. குண்டு அதனுள் விழுந்து வெடிக்கிறது. இவையெல்லாம் சாம்பிள் செய்திகள். நபி பெருமானார் பற்றிய மிக கேவலமான காழ்ப்புணற்ச்சிகளுடனும் புனைவுகளுடனும் ஒரு ஆங்கில திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனை படமாக எடுத்தவன் steve klien எனப்படும் Sam Impasil. இதனை வெளியிட்டவன் Terry Jones. இந்த டெர்ரி ஜோன்ஸ் கிறிஸ்தவ பாதிரி. குர்ஆனை எரிப்பேன் என்று முழங்கியவன். ஆங்கிலத்திலும் பின்னர் அரபியிலும் வந்தது. இது நடந்தது ஜுலை மாதத்தில். படமாக வெளியாவதற்கு முன்னர் 14 நிமிட ட்ரெய்லர் முன்காட்சிகள் காண்பிக்கப்பட்டன. ஆனால் அவை செப்டெம்பர் 11ம் திகதி உலக அளவில் மீடியாக்களில் பேசு பொருளாக்கப்பட்டது. 
இதன் பின்னால் உள்ள அரசியல் பற்றி நாம் அநேகமாக கவனிக்க தவறி விடுகிறோம். 

செப்டம்பர் 11, 2012


ஈரானுக்கு எதிராக புதிய “சிவப்புக்கோடுகளை” ஒபாமா பரிசீலிக்கிறார்

By Peter Symonds 
இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை திசைதிருப்பும் பாவனையில், ஈரானுக்கு எதிரான போர் ஏற்படும் சாத்தியப்படக்கூடிய பல ஆக்கிரோஷமான நடவடிக்கைகளை ஒபாமா நிர்வாகம் பரிசீலிக்கிறது. ஞாயிறு நியூ யோர்க் டைம்ஸ் பெயரிடப்படாத அமெரிக்க ஆதாரங்களின் அடிப்படையில் கொடுத்துள்ள தகவல்படி வெள்ளை மாளிகை போருக்குச் சற்றே குறைந்த தன்மையில் பல வகை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது; இது ஈரானின் அணுச் சக்தி நிலையங்களை இஸ்ரேலிய தாக்குதல்கள் நடத்துவதை தள்ளிவைக்கும் முயற்சி, தெஹ்ரானை மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்காக மேசைக்கு வரும் கட்டாயத்திற்கு உட்படுத்துதல் ஆகும்.
ஏற்ககனவே, கடற்படைப் பயிற்சிகள், புதிய ஏவுகணை முறைகள்

செப்டம்பர் 10, 2012



கள்வர்களின் காலம் அறிவியல் தொழில்நுட்பத்தின் மோசடிகளும் ரகசியங்களும்


ராஜ் சிவா 



“குட் மார்னிங் சார்! கீதா. காலிங் ஃப்ரம்... பாங்க்.
சார் ஃப்ரியா இருந்தா ஒரு 2 நிமிசம் பேசிக்கலாமா?
எங்க பாங்க்ல ஒரு புது பர்சனல் லோன் ஆஃபர் பண்ணி இருக்கோம்.
நீங்க எங்க ஒர்க் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா சார்.
உங்க சம்பளம் எவ்ளோன்னு சொல்ல முடியுமா சார்?”
நீங்கள் மொபைல் ஃபோன் வாங்கிய நாளிலிருந்து இந்த வகையிலோ அல்லது இது போன்ற வேறு ஒரு வகையிலோ, ஐஸ்கிரீம் தடவிய கீதாக்களின், பிரியாக்களின் குரல்களை வாரத்துக்கு ஒருமுறையாவது கேட்கத் தவறியிருக்க மாட்டீர்கள். நிதி மந்திரியாக நீங்கள் இருந்தாலும், இந்தக் குரல்கள் உங்களைத் துரத்துவதிலிருந்து உங்களால் தப்பவே முடியாது. இந்தக் குரல்களின் பின்புலத்தில் இருக்கும் மெல்லிய மர்மத்தையும், சதியையும் நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்பதே உண்மை. சாதாரணமாகப் பார்க்கும் போது, ஒரு வங்கி தனது வாடிக்கையாளனுக்குக் கடன் கொடுத்து, அதனால் வரும் வட்டியைப் பெற்றுக் கொள்வதற்காக இப்படித் துரத்துகிறது என்றுதான் தோன்றும். ஆனால் இங்கு அதைவிட மிகப் பெரிய விசயம் ஒன்று மறைந்திருக்கிறது என்பதை யாரும் அறிந்து கொள்வதில்லை.

செப்டம்பர் 06, 2012


சர்ச்சைக்குரிய பின்லேடன் கொலைபற்றியபுத்தகம்

பிரபலமாக தர்பொழுது இதைப்பற்றித்தான் அமெரிக்க இராணுவத்தலைமைச்செயலகம் கூட கத்திக்கொண்டிருக்கின்றது.ஒசாமா வின்லேடனை சீல்படையினர்  நாட்டிற்குள் ஊடுருவிக்கொன்றார்கள்.அந்த மிஸினில் கூடவே இருந்த ஒரு சீல் வீரர்தான் இதைவெளியிட்டுள்ளார்.கொலை பற்றி விபரமாக எழுதப்பட்டுள்ளதால் எதிரிகளுக்கு  இந்தமிஸினுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விபரம் தெரிந்துவிடலாம்.இதனால் அவர்களுக்கு ஆபத்த ஏற்பட்டுள்ளது. என்று அமெரிக்க இராணுவ தலைமைச்செயலகம் அறிவித்துள்ளது.