அல்காயிதாவை உருவாக்கியதும் அமெரிக்க தூதரை கொன்றதும் அமெரிக்கா தான் - இங்கிலாந்து எம்.பி அதிரடி !
லண்டன் - அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றும் லிபியாவில் சமீபத்தில் இறந்த அமெரிக்க தூதரை கொன்றது அமெரிக்கா தான் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தெரிவித்துள்ளார். யூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும் அவர்களுக்கு ஆயுத நிதி உதவிகளை தந்ததோடு அவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்று தாங்களே பிரபலபப்டுத்தியதாக ஜார்ஜ் கூறினார்.
ஸ்காட்லாந்தின் வில்லியம் துறைமுகத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறிய ஜார்ஜின் கருத்து குறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. லிபியாவில் தற்போது புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் மீது திருப்தி இல்லாததால் ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா அனுப்பி வைத்த ஆட்களே அமெரிக்க தூதரை கொன்றனர் என்றும் ஜார்ஜ்
அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார்.
அமெரிக்கா தேவைப்படும் போது தனக்கு பிடிக்காத ஆட்சியை கவிழ்க்க தீவிரவாதிகளை அனுப்பும் என்று கூறிய ஜார்ஜ் இரட்டை கோபுர தாக்குதல் தீவிரவாதிகள் அமெரிக்காவால் பயிற்சி அளிக்கபப்ட்டவர்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறு விமானத்தை இயக்குதல் மற்றும் இரட்டை கோபுரத்துக்குள் நுழையும் பயிற்சி உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்டதாக கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக