செப்டம்பர் 26, 2012


12 ஏஜென்டுகளை அவசரமாக வெளியேற்றிய சி.ஐ.ஏ! உளவு வட்டாரத்தில் அதிர்ச்சி!!


லிபிய நகரம் பென்காசியில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டு, அமெரிக்க தூதர் 
உட்பட 4 பேர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்த இரண்டு மணி நேரத்திலேயே, பென்காசி நகரில் இருந்த சி.ஐ.ஏ. ஏஜென்டுகள் 12 பேரை, அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது சி.ஐ.ஏ. தலைமை செயலகம்.
இந்த விஷயம் தற்போதுதான் லீக்காகி, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையில் பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரிகள் இருவர், “வெளிநாட்டு அசைன்மென்டுகளுக்கு அனுப்பப்படும் சி.ஐ.ஏ. ஏஜென்டுகள் எந்தளவுக்கு ரிஸ்க் எடுத்து வேலை செய்ய வேண்டும் என்று உள்ள கைட்லைனை, இந்த உத்தரவு குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசியுள்ளது.
இனி சிக்கல் ஏற்படும் இடத்தில் இருந்து ஓடத் தயாராகி விடுவார்கள் சி.ஐ.ஏ. ஏஜென்டுகள்” என்று காட்டமாக குறிப்பிட்டதாக, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் சிக்காகோ ட்ரிபியூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் முக்கிய விவகாரம் என்னவென்றால், பென்காசி நகரில் சி.ஐ.ஏ. வைத்திருந்த 12 ஏஜென்டுகளில் யாரும், அமெரிக்க தூதரகத்தில் இருக்கவில்லை.
இவர்கள் அனைவரும், அன்டர்-கவர் ஏஜென்டுகளாகவே (Undercover Agents) பென்காசியில் இருந்திருக்கிறார்கள். அதாவது, சி.ஐ.ஏ. ஏஜென்ட் என்று யாரும் அறியாமல் மறைமுகமாக சி.ஐ.ஏ.வுக்கு உளவு பார்த்த ஆட்கள் இவர்கள்.
இவர்கள் யார்? யாருக்காக பணி புரிகிறார்கள் என்பது தெரியாத நிலையில், இவர்களுக்கு எந்த ஆபத்தும் வந்திருக்காது. அப்படியிருந்தும், இவர்களை பென்காசி நகரில் இருந்து சி.ஐ.ஏ. வெளியேற்றியது, உளவு வட்டாரங்களில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக