செப்டம்பர் 19, 2012


சவூதி இளரவரசர், உமர் சுலைமானை சி.ஐ.ஏ கொலைச் செய்ததா? – சந்தேகத்தை கிளப்புகிறார் ஃபரீத் ஸக்கரியா !

நியூயார்க்:சவூதி இளவரசர்
 நாயிஃப் பின் அப்துல் 
அஸீஸ் மற்றும் முன்னாள்
 எகிப்திய சர்வாதிகாரி ஹுஸ்னி
 முபாரக்கின் அரசில் உளவுத்துறை
 தலைவராக பணியாற்றிய உமர்
 சுலைமான் ஆகியோரின்
 மரணத்தின் பின்னணியில் சி.ஐ.ஏ
 இருப்பதாக பிரபல இந்திய வம்சாவழியைச் சார்ந்த அமெரிக்க பத்திரிகையாளர்
 ஃபரீத் ஸக்கரியா கூறியுள்ளார். இத்தகவலை ப்ரஸ் டி.வி வெளியிட்டுள்ளது. 
ஃபரீத் ஸக்கரியா அல் ஹகீகா என்ற அரபு தொலைக்காட்சி சானலுக்கு 
அளித்த பேட்டியில் இத்தகவலை வெளியிட்டுள்ளதாக ப்ரஸ் டி.வி கூறுகிறது. 
அல் ஹகீகா சானலில் ஃபரீத் ஸக்கரியா கூறுகையில்,  “உமர் சுலைமான் 
மரணிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு என்னை தொலைபேசியில் 
தொடர்பு கொண்டார். அப்பொழுது அவர் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது 
என்றும், சி.ஐ.ஏ (அமெரிக்க உளவுத்துறை) லேசர் கதிர்களின் மூலம் 
தன்னை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சுலைமான் 
கூறுகையில், சவூதி பட்டத்து இளவரசரையும் (நாயிஃப் பின் அப்துல் அஸீஸ்)
 இதைப்போலவே அமெரிக்க உளவுத்துறை லேசர் கதிர்வீச்சால் கொலைச் 
செய்தது என்று தெரிவித்தார்.”
79 வயதான சவூதி இளவரசர் நாயிஃப் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் 
அந்நாட்டின் உள்துறை அமைச்சராக நீண்டகாலம் பணியாற்றியவர். மருத்துவ 
சிகிட்சைக்காக அல்ஜீரியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணித்த நாயிஃப், 
அமெரிக்காவிற்கு இந்த ஆண்டு சிகிட்சைக்காக சென்றார். கடந்த
 ஜூன் 16-ஆம் தேதி அமெரிக்காவில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது.
உமர் சுலைமான், எகிப்து முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் 
ஆட்சி காலத்தில் உளவுத்துறை தலைவராக பணியாற்றியவர். மக்கள் 
புரட்சி எகிப்தில் உருவானபொழுது முபாரக், சுலைமானை எகிப்தின் துணை 
அதிபராக நியமித்தார். இவர் அண்மையில் அமெரிக்காவிற்கு மருத்துவ 
பரிசோதனைக்காக சென்ற வேளையில் மரணமடைந்தார் என்பது 
குறிப்பிடத் தக்கது.
ஃபரீத் ஸக்கரியாவின் இக்கூற்று பல கேள்விகளை எழுப்புகிறது.
இந்த அறிக்கையை வெளியிடுவதால் ஏற்படும் விளைவுகளை 
புரிந்துகொண்டுதான் ஃபரீத் ஸக்கரியா இத்தகவலை அரபு 
தொலைக்காட்சி சானலில் வெளியிட்டாரா?
உமர் சுலைமான் ஏன் ஃபரீத் ஸக்கரியாவை அழைத்து இத்தகவலை 
கூறவேண்டும்? ஃபரீத் ஸக்கரியாவுக்கும் உமர் சுலைமானுக்கும் என்ன உறவு?
சி.ஐ.ஏ மற்றும் இஸ்ரேலுக்கு பல தசாப்தங்கள் நேசத்திற்குரியவராக திகழ்ந்த 
உமர் சுலைமானை ஏன் சி.ஐ.ஏ கொலைச் செய்யவேண்டும்?
சி.என்.என்னில் பணியாற்றும் ஃபரீத் ஸக்கரியா, இந்த குற்றச்சாட்டை 
தற்பொழுது கூற என்ன காரணம்? (ஏற்கனவே இவர் வேறொரு 
எழுத்தாளரின் ஆக்கத்தை காப்பியடித்தார் என அண்மையில் சஸ்பெண்ட் 
செய்யப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டார்.)
ஃபரீத் ஸக்கரியா ஏன் இத்தகவலை ஒரு அரபிக் சானலில் வெளியிட 
வேண்டும்? சி.என்.என் போன்ற ஆங்கில சானல்களில் வெளியிட்டிருக்கலாமே?
எது எப்படியோ, ஃபரீத் ஸக்கரியா கூறியதற்கு அமெரிக்க தரப்பில் இருந்து 
பதில் வராது என்பது நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக