யூ டியூப் இணையதளத்திற்கு வங்கதேசம் தடை. பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவு !
தடை விதிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய
"இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்'
திரைப்படம் அந்த இணையதளத்தில்
இடம் பெற்றுள்ளதே இதற்குக்
காரணம். அத்திரைப்படத்துக்கு எதிராக
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள்
அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து
போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக வங்கதேச
பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை
வெளியிட்டார். அதில், "தங்கள் மதத்துக்கு எதிரான இதுபோன்ற
அவமதிப்பை எந்த முஸ்லிமும் பொறுத்துக் கொள்ள
மாட்டார். அத்திரைப்படத்தை எடுத்தவர்களுக்கு அமெரிக்கா
கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
வங்கதேசத்தில் அப்படத்துக்கு தடை விதிக்கப்படுகிறது'
என்று தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக