செப்டம்பர் 21, 2011


“முஹம்மத் - ஒரு தனித்துவ மிக்க இராணுவ அறிவு ஆளுமை”


“இராணுவ வரலாறு” என்பது இராணுவ வரலாற்று ஆய்வுகளுக்கான
 சஞ்சிகை. இச்சஞ்சிகையின் வாசகர்கள் பிரதானமாக அமெரிக்கப் 
படைப்பிரிவினர்களாவர். 22,000 பிரதிகள் விற்பனையாகும்
 இச்சஞ்சிகையில் அமெரிக்காவைச் சேர்ந்த இராணுவ 
வரலாற்றாய்வாளர்களே எழுதுவர். அப்பத்திரிகையில் அண்மையில்
  வெளிவந்த ஆய்வுத் தலைப்பு
   “முஹம்மத் - ஒரு தனித்துவ மிக்க
     இராணுவ அறிவு ஆளுமை”



Description: mhq-2007Summer-1.jpgஇந்த ஆய்வை ரிட்ஷட் கப்ரீல் என்ற வரலாற்றாசிரியர் 
எழுதியுள்ளார். கப்ரீல் அமெரிக்க மத்திய உளவு
 ஸ்தாபனத்தில் பணி புரிந்தார். அவர் நான்கு நூல்களின் 
ஆசிரியர். இப்போது கனடாவில் அரச இராணுவக்
 கல்லூரியில் “வரலாறும் அரசியலும்” என்ற துறையில்
 விரிவுரையாளராக உள்ளார். அந்த ஆய்வில் சில
 பகுதிகள் மட்டும் கீழே தரப்படுகிறது.

“இறை தூதர் (ஸல்) அவர்களின் தனித்துவமான இராணுவ
 நோக்கும் சாணக்கியமும் இல்லாதிருந்தால் இஸ்லாம்
 நிலைத்திருப்பதோ, எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி
 கொண்டிருப்பதோ, பரவியிருப்பதோ சாத்தியமற்றுப் போயிருக்கும்.”

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இராணுவத் தளபதி என்றவகையில்
 வெற்றிகரமானவராக இருந்திராவிட்டால் அவர்களது மரணத்தின்
 பின்னர் பாரசீக, ரோம் என்ற இரு பெரும் சாம்ராஜ்யங்களை
 வெற்றி கொண்டிருப்பது சாத்தியமில்லை.”
“இறை தூதர் (ஸல்)  ஒரு முதல் தரமான இராணுவத் தளபதி. 
அவர்கள் ஒரு தசாப்த காலத்திற்குள் யுத்தங்களுக்குத் தலைமை 
தாங்கினார்கள். 18 படையெடுப்புக்கள் நடாத்தினார்கள். வரையறுத்த
 38 இராணுவ நடவடிக்ககைகளுக்குத் திட்டம் வரைந்தார்கள்.
'இறைத் தூதர் அவர்கள் வெறும் சாணக்கியம் மிக்க இராணுவத் 
தளபதியாக மட்டுமன்றி, இராணுவக் கொள்கை வகுப்பாளராகவும், 
புரட்சிப் போராளியாகவும், நீண்டகால திட்டவரைவு(Strategy)
 சிந்தனையாளராகவும் இருந்தார்கள்.
இறைத் தூதர் (ஸல்) உருவாக்கிய உளவுப் பிரிவை விவரிக்கும் 
ஆய்வு அது அக்காலப் பிரிவில் காணப்பட்ட ரோம, பாரசீக
 சாம்ராஜ்யங்களின் உளவுப் பிரிவையும் விட மேம்பட்டுக் 
காணப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

அறபிகளுக்கு மத்தியில் பிரதான நகர்களுக்கு வெளியே சிறு சிறு 
பாலைவனச் சோலைகளை அண்டி வாழ்ந்தோரும், நகர்களில் 
வாழ்ந்தோரும் காணப்பட்டனர். முதற் பிரிவினர் சாதாரண
 போராளிகளைக் கொண்டிருந்தனர். அடுத்த பிரிவினர் திறமைமிக்க
 போராளிகளைக் கொண்டிருந்தனர். இறைத்தூதர் அவர்கள் முதற் 
பிரிவினரை சிறந்த காலாற் படையினராகவும் இரண்டாம் பிரிவினரை
 தலைசிறந்த குதிரைப் படையினராகவும் அமைப்பதில் வெற்றி 
கண்டார்கள்.

இஸ்லாத்திற்கு முன்னர் அரபிகள் தம் நேரடி குறுகிய நலன்களில் 
கவனம் செலுத்துபவர்களாகவே காணப்பட்டனர். எனவே மிகச் சிறு
 படையெடுப்புகளே காணப்பட்டன. பொருட்களை சூறையாடிச் 
செல்லும் சிறு தாக்குதல் நடவடிக்கைகளே காணப்பட்டன. இறைத் 
தூதர் அவர்களே முதலில் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டுப்பாடான
 இராணுவமாக அமைத்தார்கள்.

கோத்திரம் என்ற குறுகிய எல்லையினுள் அந்த நலன்களுக்காகப் 
போராடி வந்த அரபிகளை 'உம்மா என்ற கொள்கைவாத விரிந்த
 எல்லையுள் போராடும்இராணுவமாக இறைத்தூதர் மாற்றினார்கள்.
 இந்த வகையில் அரபிகளின் போர் முறையில் ஒரு புரட்சிகரமான 
மாற்றத்தை இறைதூதர் அவர்கள் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டார்கள்.

“இறைத்தூதர் அவர்கள் எட்டு இராணுவ சீர்திருத்தக் கொள்கைகளை 
முன்வைத்தார்கள். அவை அரபிகளின் இராணுவப் படையணியின் 
அமைப்பிலும் கொள்கையிலும் பாரிய மாற்றங்களை உருவாக்குவதில்
 பாரிய செல்வாக்கு செலுத்தின.

The Warrior Prophet
 by Richard Gabriel 




Description: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj092yyjCrsZGYzkDn1t89fk1EVrj_zZbSNzrfo8V1G4-IS9fNTtnyLGGiRTVWUFNmqpxf05ngX-sL5xLaJBofAYt36FsPipJw6yX4-LfU0M2OS2yFlM4T9bn6RS6J2CpQnGlQ2B28HXffu/s200/mhq-2007Summer-1.jpg


The Quarterly Journal of Military History (MHQ)
Summer 2007 ed.
http://midnightsprint.blogspot.com/2007/07/warrior-prophet-by-richard-gabriel.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக