பலஸ்தீன பயிர் நிலங்களை தீ மூட்டும் யூத பயங்கரவாதிகள்!
பலஸ்தீன சுதந்திர தேசத்தின் உதயம் தொடர்பான விடயம் பலஸ்தீனர்களிற்கு சாதகாமாக ஐக்கிய நாடுகள் சபைியின் கூட்டத் தொடரில் மாறி வரும் நிலையில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் ஐ.நா.பொதுச் சபையில் உரை நிகழ்த்த நியூயோர்க் சென்றுள்ளார்.
இந்த நிகழ்வை தாங்கிக்கொள்ள முடியாத யூத சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் பலஸ்தீனத்தின் மேற்குக்கரை பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தின் வழித்துணையுடன் உட்புகுந்து அங்குள்ள விவசாய நிலங்கள், பயிரினங்கள், பழம் தரும் மரங்கள் போன்றவற்றை தீயிட்டு கொளுத்தி நாசம் பண்ணியுள்ளார்கள்.
Kiryat Arba Settelement (Hebron) பிரதேச யூதர்களே மேற்படி அநியாயங்களை இழைத்துள்ளனர். சுதந்திர பலஸ்தீனமும் அதன் எல்லைகளும் எனும் விவகாரத்தில் உலக நாடுகள் பலவற்றின் கருத்து 1967ல் உள்ள எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட பலஸ்தீனம் என்பதேயாகும். இந்த நிலையை ஜீரணிக்க முடியாத யூத பயங்கரவாதிகள் தங்கள் கோபத்தையும் காழ்ப்புணற்ச்சியையும் தீர்க்கும் விதமாக இவ்வாறான கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1967ல் இஸ்ரேல் சட்டவிரோதமாக கைப்பற்றிய மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருஸலேம் பகுதிகள் மீண்டும் பலஸ்தீனரிடம் சென்றுவிடுமோ எனும் அச்சத்தில் ஸியோனிஸ குடியேற்றக்காரர்கள் யிட்ஷார் பிரதேசத்தில் (வடக்கு மேற்குக் கரை பகுதி) உள்ள மலைக் குன்றுகளின் மீது ஏறி நின்று கூட்டம் கூட்டமாக பலஸ்தீனயரின் குடியிருப்புக்களை நோக்கி கற்கால வழக்கத்தை ஒத்த வகையில் வசைபாடி வருகிறார்கள்.
பலஸ்தீன் சுதந்திர தேச கோரிக்கையின் அரசியல் தாக்கம் அப்பாவி பலஸ்தீன் மக்கள் மீது அராஜகமான பலப்பிரயோகமாக மேற்கொள்ளப்படுவது கவலைக்குரியதே. Abu Sayyaf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக