தென் சூடான் அரசை ஆதரித்த
தமிழர் அமைப்புகளின்
பலஸ்த்தீனம் குறித்த கள்ள மௌனம் ஏன்?
பாலஸ்தீனம் ஒரு முழுமையான அரசொன்றுக்கான அந்தஸ்தை
பெறுவதற்காக ஐ.நா வின் பாதுகாப்பு சபையில் விண்ணப்பிக்க
இருக்கும் நிலையில் அதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு சபையில்
தனது வீட்டோ அதிகாரத்தை பிரயோகிக்கவுள்ளதாக அமெரிக்கா
இவ்வாறு தனது பிராந்திய ஆதிக்க நலனை மட்டுமே கவனத்தில்
கொண்ட அமெரிக்கா தான் தற்போது இலங்கையில் தமிழர்களிற்கு
ஒரு தீர்வை முன்வைக்கப் போகின்றதாம். என்ன வேடிக்கை.
அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் ஒரு போதும் தமிழர்களின் நலனில்
இருந்து கதைக்க வில்லை மாறாக தமது பிராந்திய வல்லாதிக்க
நலனில் இருந்துதான் கதைக்கின்றனர்.
தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு இனவாத யுத்தத்தை நடத்திய
போது அதை பார்த்து ரசித்த படியிருந்த இந்த மேற்கத்தேய நாடுகள்
தற்போது திடீர் என தமிழர்கள் மீது பாச மழை பொழிகின்றனராம்.
இது எதற்காக என்பது எம்மால் உணரக் கூடிய நிலையில் தற்போது
உள்ளோம். சீனாவின் பிராந்திய விரிவாதிக்கத்தை தடுத்து நிறுத்தும்
போக்கில் மேற்கொள்ப்பட்டுவரும் சதி நடவடிக்கைகளில் ஒன்று தான்
தமிழர் மீது திடீர் பாசம.
இவ்வாறு தமது நலனை மட்டும் அக்கறையாகக் கொண்டு இயங்கும்
இந்த மேற்கத்தேய நாடுகளைத் தான் தமிழர்களின் அமைப்புகள்
அல்லது புலிகளின் இன்றைய அமைப்புகள் நம்பி நிற்கின்றன.
இதன் ஒரு வடிவம் தான் நாடுகடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர்
பேரவை, பிரித்தானியத் தமிழர் போரவை, கணடியத் தமிழர் பேரவை
என அனைத்தும் இந்த மேற்கத்தேய நாடுகளிடம் தான் தஞ்சம்
புகுந்துள்ளன.
நாடுகடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத்
தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை இந்த அமைப்புகள்
தற்போது பாலஸ்தீன மக்களின் உண்மையான நியாயமான
கோரிக்கையை அங்கீகரித்து அவர்களின் போராட்டத்திற்கு
உதவுவதாக இல்லை. காரணம் அவ்வாறு செய்தால் தமக்கும்
இந்த வல்லரசு நாடுகளிற்கும் இடையில் உள்ள உறவிற்கு பங்கம்
வந்துவிடும் என்ற எண்ணம் தான்.
சீனாவின் பிராந்திய விரிவாதிக்கம் வலுவாகுமிடத்து தமிழர்களைப்
பயன்படுத்தி மேற்கத்தேய நாடுகள் இலங்கைக்குள் காலடி எடுத்து
வைக்கும். ஆனால் அப்போது தமிழர்களின் சுதந்திரம் என்பது
தற்போது உள்ள வடிவில் தான் இருக்கும் என்பது திண்ணம்.
உண்மையான மக்கள் நலன் விரும்பிகள் பாலஸ்தீன மக்களின்
போராட்டத்தை ஆதரிப்பதுடன், மேற்கத்தேய உதவியின் மூலம்
அவர்களின் நலனின் அடிப்படயிலான தீர்வை எதிர்த்து நிற்பதுடன்
உண்மையான சுயநிர்ணயத்திற்கான தீர்வைக் கோரி போராடவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக