செப்டம்பர் 24, 2011

 

ஐரோப்பிய இஸ்லாமிய விரோதம்.

கடந்த ஜூலை மாதம் நோர்வேயில் தீவிர வலதுசாரித் தீவிரவாதி அன்ட்றேஸ் ப்றேவிக் மேற்கொண்ட கொடூரக் கொலைகளின் பின் ஐரோப்பாவில் இஸ்லாமிய எதிர்ப்பு மீண்டும் சூடுபடத் துவங்கியுள்ளது.இந்த கொடூரத் தாக்குதலையும் மற்ற நிகழ்வுகளையும் நடுநிலையோடு ஆராய்ந்த ஆய்வாளர்கள் சிலர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விரோதக் கண் கொண்டு பார்க்க வேண்டாம் என்று ஐரோப்பிய அரசியல்வாதிகளைக்  கேட்டுக்கொண்டுள்ளனர்.இது 1930
ஐரோப்பிய யூத எதிர்ப்புக்கு சமன் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மன் கூட்டாட்சி அரசின் (Federal) முன்னாள் ஒருங்கிணைப்பு அமைச்சராக இருந்த ஆர்மின் லச்செட் IPS (Inter Press Service) செய்திச் சேவைக்கு "இரானிலிருந்து ஐரோப்பாவுக்கு குடியேறிய நிறைய முஸ்லிம் வைத்தியர்களும் பொறியியலாளர்களும் இங்கு மிகவும் சமாதானமாகவும் சமத்துவத்துடனும் வாழ்கின்றனர்.ஒரு முஸ்லிம் தனது மார்க்க கடமைகளை பின்பற்றுவதை தனது குழந்தைகளை இஸ்லாமிய அடிப்படையில் வளர்ப்பதை குற்றம் சாட்டதீர் அதை மத அடிப்படைவாதம் என்று கருத்துச் சொல்லாதீர் "என்று கருத்துத் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற தாக்குதலில் குறைந்தபட்சம் 76 பேர் இறந்ததுடன் நோர்வேயின் அரசாங்க அலுவலகங்கள் பல கார்குண்டுத்தாக்குதலினால் பலத்த சேதத்துக்கு உள்ளாகின.இந்த தாக்குதல்களை மேற்கொண்ட வலதுசாரி தீவிரவாதி அன்ட்றேஸ் ப்றேவிக் தனது கொள்கைப்பிரகடனத்தில்.கிருஸ்துவ ஐரோப்பாவை இஸ்லாத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று அறைகூவல் விட்டிருந்தான்.மேலும் தன இந்த செயற்பாடு நோர்வே அரசையும் மக்களையும் மாற்றும் எனவும் தெரிவித்திருந்தான். நோர்வேயில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் ஐரோப்பாவில் பரவும் இஸ்லாமிய எதிர்பின் நேரடி விளைவாகவே பார்க்கப்பட்டது.இந்த எதிர்ப்பை ஐரோப்பா முழுவதும் ஐரோப்பிய பழமைவாத கட்சிகளும் அரசாங்கங்களும் வழிநடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
  
பல ஐரோப்பிய தலைவர்கள் பன்முகக்காலாச்சாரத்தை (Multiculturalism) விமர்சனம் செய்வதனூடாக ஐரோப்பாவில் இஸ்லாமிய எதிர்ப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.இது முஸ்லிம் குடிபெயர்ந்தவர்கள் மீது தீவிர வலதுசாரிக் கட்சிகள் தமது தீவிர எதிர்ப்பைக் காட்டவும் வழி அமைத்துக் கொடுத்தது. 
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் பிரிடிஷ் பிரதம மந்திரி டேவிட் கமருன் பன்முககலாச்சாரவாதம் தோல்வியடைந்து விட்டது என்று தெரிவித்தார்.மேலும் ஐரோப்பிய சமூகங்களில் முஸ்லிம் இளைஞர்களின் தீவிரமான போக்கை ஒடுக்க அனைத்தி ஐரோப்பிய நாடுகளும் ஒன்றுபடவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.(State Multiculturalism Is Failed - BBC).டேவிட் கமருன்னின் இந்தக் கூற்று பிரிடிஷ் தீவிர வலதுசாரிக் கட்சியின் (British National Party)  தலைவர் நிக் க்ரிபிநினால் உடனடியாக ஆமோதிக்கப்பட்டது.ஜெர்மன் அதிபர் அன்ஜெலா மெர்கல் கூட இந்த மாதிரியான கருத்தையே கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாசிசம் 

 தனது நாடு இரு கடுந்தாக்குதல்களுக்கு உள்ளான பின் உள்ளூர் பழைமைவாத கட்சி தலைவர் ஒருவர் 1931 ஆண்டு யூத எதிர்ப்பு பாசிசத்தையும் இஸ்லாமிய எதிர்ப்பு சொல்லாடல்களையும் தொடர்புபடுத்தி பேசியுள்ளார்.

அமெரிக்கா தாக்குதலுக்கு உள்ளான காலப்பகுதியில் ஆரம்பத்தில் பழைமைவாதக் கட்சிகளும் வலதுசாரிக் கட்சிகளும் இஸ்லாமிய விரோத செயற்பாட்டை தமது தேர்தலை இலக்காகக்கொண்டு வெகு சாமர்த்தியமாக பயன்படுத்தின.அதில் வெற்றியும் பெற்றன.
ஆஸ்திரியாவில் கடந்த வருடம் இடம்பெற்ற தேர்தலில் வலதுசாரி கட்சியான சுதந்திரக் கட்சி 27% வாக்குப்பதிவைப் பெற்றது.இதற்கு முக்கிய காரணம் அது முன்னெடுத்த தீவிர இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரமாகும்.மேலும் அக்கட்சி இணையத்தில் முஸ்லிம் பள்ளிவாசல்களின் மினராத்துகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் விடியோ கேம்களைக் கூட இலவசமாக செயற்படுத்தியது.
அதிகரித்துச் செல்லும் வேலையின்மை,பொதுச் சேவைகள் மீதான செலவுகள் குறைப்பு போன்றவற்றால் தமது மக்கள் பிரபலத்தை இழந்த பிரான்ஸ் அதிபர் நிகலோஸ் சர்கோசி கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற "மதச்சார்பற்ற பிரான்சில் இஸ்லாம்" என்ற விவாதம் மூலமும் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா தடை மூலமும் இழந்த தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள பாடுபட்டுவருகிறார்.
நெதர்லாந்தில் பிரபல இஸ்லாமிய எதிப்பு பிரச்சாரகரான கிரீட் வில்டர்ஸ் தமக்கு புதிய அரசொன்றை அமைக்க ஆதரவு  தருமாறு மக்களைக் கேட்டுள்ளான்,அப்படி ஆதரவு தந்தால் நெதர்லாந்தில் இஸ்லாமிய ஆடைகளை தடைசெய்வதாகவும் முஸ்லிம்கள் குடியேறுவதை தடை செய்ய கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளான்.
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய மிக முக்கிய விடயம் என்னவென்றால் 2010 ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 250 தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன,ஆனால் இவற்றில் இஸ்லாமிய பின்புலத்தைக் கொண்ட தாக்குதல்கள் வெறும் 3 மாத்திரமே.
இது மொழிமாற்றம் செய்யப்பட கட்டுரையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக