துருக்கி பேப்பர் புலியா?
அனைத்து அரபு லீக் நாடுகளும் துருக்கியுடம் இணைந்து காசா முற்றுகைக்கு எதிராக குரல் கொடுத்தால்,நிச்சயம் அது அமெரிக்காவுக்கும் அதன் செல்லப்பிள்ளை இஸ்ரேலுக்கும் ஒரு பெரும் சவாலாகவே இருக்கும்.
காசா மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற மாவிமர்மாரா கப்பலுக்கு தாக்குதல் நடத்தி,அதில் பயணித்த ஒன்பது துருக்கியர்களை ஈவிரக்கம் இன்றி சுட்டுக்கொன்று விட்டு அதற்கு மன்னிப்பையாவது கேட்காத உலக மகா பயங்கரவாதி இஸ்ரேலின் மீது துருக்கிக்கு உள்ள கோபம் நியாயமானது தான்.எகிப்து-இஸ்ரேல் எல்லையில் சினாய் பகுதியில் இஸ்ரேலிய கண்காணிப்புப் படையினரால் ஐந்து எகிப்திய படையினர் கொல்லப்பட அதற்கு இஸ்ரேல் அவசர அவசரமாக மன்னிப்புக்குக் கேட்டது(வாய்மொழியில்).இஸ்ரேலின் இந்த நடவடிக்கை துருக்கிக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.மேலும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை அவர்களை உருவாக்கிய ஐக்கியநாடுகள் சபையும் அங்கீகரிக்க துருக்கி அதன் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களுக்கு நடைமுறைகளுக்கு உட்பட்டே இடம்பெற்றதாகவும் அது இஸ்ரேலின் உரிமை என்றும் கூறப்பட்டுள்ளது,அப்படியெனில் காசா மக்களின் சுதந்திரத்தைப் பறித்து அவர்களை சட்டரீதியற்ற ஆக்கிரமிப்பின்கீழ்
வைத்திருக்கும் கொலைகார இஸ்ரேலின் மீது ஏன் இந்த சர்வதேச நடைமுறைகள் பிரயோகிக்கப்படுவதில்லை.!
மேலும் அந்த அறிக்கையில் இஸ்ரேலிய கொமாண்டுக்கள் தம் சுய பாதுகாப்புக்கு தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.வெறும் கத்திகளையும் இரும்புப்பொல்லுகளையும் தாங்கி நின்ற கப்பலில் பயணித்தவர்கள் எப்படி அதிநவீன ஆயுதங்களைக் கொண்ட இஸ்ரேலிய கமாண்டோப் படைக்கு அச்சுரத்தலானார்கள் என்பது ஐக்கிய நாடுகள் சபைக்கே வெளிச்சம்.இது ஒரு சிறுத்தையை ஒரு பூனைக்குட்டி சீண்டிய கதையாகவே உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்த ஒரு தலைப்பட்சமான அறிக்கை பற்றி கருத்து வெளியிட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முஹமத் வெளியிட்டுள்ள அறிக்கையில்"ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அறிக்கை ஒரு தலைப்பட்சமான இந்த அறிக்கை மிகவும் நகைப்புக்குரியது.நான் இந்த அறிக்கையால் ஆச்சரியப்படவில்லை,ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையும் இஸ்ரேலும் அமெரிக்காவின் தயாரிப்புகளாகும் என்பதால்."
காசா மீதான முற்றுகை சட்டரீதியனதோ அல்லது சட்டரீதியற்றதோ என்பதை விட அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 1.5 மில்லியன் மக்களின் வாழ்க்கையே முக்கியம்.துருக்கி தம் நிலைப்பாட்டில் தொடர்ந்து நிலைந்திருந்தால் (இன்ஷா அல்லாஹ்) நிச்சயம் ஒரு மாற்றம் நிகழும்.துருக்கி இவ்வாரத்துக்குள் இவ்விடயம் தொடர்பாக சர்வதேச நீதிக்கான நீதிமன்றில் ஒரு வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாக துருக்கி வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் டவுளுகுலு தெரிவித்தார்.
இந்த விடயத்தின் விளைவாக முதலில் துருக்கி தன் நாட்டுக்கான இஸ்ரேலிய தூதரை வெளியேற்றியதுடன் இஸ்ரேலுக்கான தன் தூதரையும் திருப்பி அழைத்துக்கொண்டது.இரண்டாவதாக துருக்கி இஸ்ரேலுடனான அனைத்து விதமான இராணுவ ஒப்பந்தகளை ரத்துச்செய்தது மேலும் வியாபரஒப்பந்தங்களை ரத்துச் செய்யவும் பரிசீலித்து வருகிறது,இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது இஸ்ரேல் தான்.மூன்றாவதாக இனி கிழக்கு மத்தியதரைக் கடல் அப்பாவி சிவிலியன்களுக்கு தாக்குதல் நடத்த பயிற்ச்சி பெரும் இஸ்ரேலிய படைகளுக்கு வழங்கப்படமாட்டது என துருக்கியின் மேல்மட்ட இராணுவ தளபதிகளின் நிலைப்பாடாக உள்ளது.மேலும் காசாவுக்கு போகும் உதவிக்கப்பலகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் தயார் எனவும் அவர்கள் தெரிவித்துல்லானர்.இதற்கிடையில் துருக்கி பிரதம மந்திரி தயிப் எர்டோகன் காசாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.
சில இஸ்ரேலிய பத்திரிகைகளும் ஆய்வாளர்களும் துருக்கியின் இச்செயலை,துருக்கி அரபுலகிலும் முஸ்லிம் உலகிலும் பிரசித்தி பெற இச்செயலை பயன்படுத்தி வருவதாக பிரச்சாரம் செய்து வருகிறது.உண்மை தெளிவானது துருக்கி தம் நாட்டு மக்களின் உயிர்களுக்கு மதிப்பளிக்கிறது அதுபோல உலகின் மிகப்பெரிய திறந்த சிறைச்சாலையில் அடைபட்டு துன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கும் தம் சகோதர காசா மக்களின் மீது உண்மையான அக்கறையும் கொண்டுள்ளது.இது அரபுலகம் எழுந்து தன் சொந்த புத்தியில் சிந்திக்க வேண்டிய தருணம்.அனைத்து அரபு லீக் நாடுகளும் துருக்கியுடம் இணைந்து காசா முற்றுகைக்கு எதிராக குரல் கொடுத்தால்,நிச்சயம் அது அமெரிக்காவுக்கும் அதன் செல்லப்பிள்ளை இஸ்ரேலுக்கும் ஒரு பெரும் சவாலாகவே இருக்கும்.
சில இஸ்ரேலிய பத்திரிகைகளும் ஆய்வாளர்களும் துருக்கியின் இச்செயலை,துருக்கி அரபுலகிலும் முஸ்லிம் உலகிலும் பிரசித்தி பெற இச்செயலை பயன்படுத்தி வருவதாக பிரச்சாரம் செய்து வருகிறது.உண்மை தெளிவானது துருக்கி தம் நாட்டு மக்களின் உயிர்களுக்கு மதிப்பளிக்கிறது அதுபோல உலகின் மிகப்பெரிய திறந்த சிறைச்சாலையில் அடைபட்டு துன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கும் தம் சகோதர காசா மக்களின் மீது உண்மையான அக்கறையும் கொண்டுள்ளது.இது அரபுலகம் எழுந்து தன் சொந்த புத்தியில் சிந்திக்க வேண்டிய தருணம்.அனைத்து அரபு லீக் நாடுகளும் துருக்கியுடம் இணைந்து காசா முற்றுகைக்கு எதிராக குரல் கொடுத்தால்,நிச்சயம் அது அமெரிக்காவுக்கும் அதன் செல்லப்பிள்ளை இஸ்ரேலுக்கும் ஒரு பெரும் சவாலாகவே இருக்கும்.
துருக்கியின் இச்செயலை வரவேற்று இதனூடாக இன்ஷா அல்லாஹ் அரபுலகில் ஒரு மாற்றம் உண்டாக பிரார்த்திப்போம்.
Very Special Thanks To - Middle East Affairs.
தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்கள் நண்பன்
எம்.ஹிமாஸ் நிலார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக