ஜனவரி 08, 2012

ஹிஸ்புல்லாவின் அழிவில் வாழும் இஸ்ரேல்

Abu Sayyaf

வளைகுடாவில் போர் மேகங்கள் மெல்ல கருக்கொள்ள தொடங்கி விட்டன. பேச்சு பேச்சாக இருக்கும் அதே பொழுதுகளில் இராணுவ பிரசன்னத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நோக்கி அமெரிக்கா முனைப்புடன் செயற்படுத்தி வருகிறது.  ஈரானை ஒரு போதும் அமைரிக்கா தாக்காது என்றும் ஈரான் ஒரு போதும் இஸ்ரேலை தாக்காது என்றும், இவையிரண்டுமே ஏகாதிபத்திய சக்திகள்தான் என்றும் சில அரசியல் ஆய்வாளர்கள் வாதங்களை முன்வைத்த போதும் அதையும் தாண்டிய நிலையில் இரு நாடுகளும் பரஸ்பர இராணுவ ஒத்திகைகளை நிகழ்த்தி முடித்துள்ளன.

ஈரான் மீதான தாக்கதலிற்கு அமெரிக்காவிற்கு ஆதரவளிப்தன் மூலம் ஸியோனிஸ ஆதரவு நாடு சவுதி அரேபியா எனும் வலுவான பிரச்சாரம் சவுதி மக்கள் போராட்டமாக வெடிக்காமல் இருக்க வேண்டும் என்பது ரியாத்தின் மன்னர்களின் பிரார்த்தனை. கூடவே வலுவான ஏவுகணைகள் சவுதி மண்ணில் வந்து விழுவதையும் அது விரும்பவில்லை. ஆதலினால் அமெரிக்க சண்டை விமானங்கள் தஹ்ரானில் தரிக்க அது இடமளிக்க தயங்கலாம்.

மரி மரோவா கப்பல் தாக்குதலினால் இஸ்ரேலுடனான உறவுகளை துண்டித்துள்ள துருக்கி கடந்த காலங்களில் நேட்டோவிற்கு தனது தளத்தினை தாக்குதலிற்கு வழங்கியது போல் இம்முறை வழங்காது என்பதிலும் வலுவான கருத்துக்கள் உண்டு.

சவுதி அரேபியா, துருக்கி போன்றவற்றின் விமானதளங்கள், வான்பரப்பு எல்லைகள் போன்றவை இல்லாத நிலையில் ஈராக்குடனான போர் போலன்றி செலவுகுறைந்த ஒரு குறுகிய யுத்தம் என்பதை வடிவமைப்பதில் பென்டகன் பலமுறை திணறியிருக்கிறது. யூதர்களின் குறிப்பாய் ஸியோனிஸ சக்திகளின் நெருக்கடிக்குள் இன்று அமெரிக்க தேசம் சிக்கியிருக்கிறது. யூத லொபிகள் வாஷிங்டனிலும் நியூயோர்க்கிலும் அதிகார நடை போடுகின்றன.

இப்போது பிரச்சனை அமெரிக்க அதிபர் தேர்தலிற்கு முன்னரான யுத்தமா? அல்லது பின்னரான யுத்தமா? என்பதே.  உலகை அமெரிக்கா கைஜேக் செய்துள்ளமை நாம் அறிந்த விடயம். ஐக்கிய நாடுகள் சபையை அமெரிக்கா ஹைஜாக் செய்துள்ளமையும் நாமறிந்த விடயம். ஆனால் அமெரிக்காவை ஸியோனிஸம் ஹைஜாக் செய்துள்ளஸமை நாம் அறியாத விடயம்.

ஸியோனிஸத்தின் தேவைக்கான யுத்தம் என்பது மத்திய கிழக்கில் ஒரு தலை கீழ் மாற்றத்தை உருவாக்கவல்லது. ஈரானுடனான போர் முனையின் ஆரம்ப வாசம் ஆப்கான் எல்லைகளிலா அல்லது ஈராக்கின் எல்லைகளிலா என்பதனையும் விட இந்த ஆரம்பவாயல் காஸா.

இஸ்ரேலிற்கான சேதம் குறைந்த யுத்தம் என்பது ஹிஸ்புல்லாவின் அழிவில் தங்கியுள்ளமை தவிர்க்க முடியாதது. காஸாவிலோ லெபனானிலோ மீண்டும் நடாத்தப்படும் ஆக்கிரமிப்பு என்பதன் ஊடான யுத்தத்தில் ஹிஸ்புல்லாவின் போரிடும் வலு முறியடிக்கப்பட்ட நிலையிலேயே ஈரானிய எண்ணெய்க்கான ஆக்கிரமிப்பு போரை செய்ய முடியும்.

ஈரானின் ஏவுகணைகளைவிடவும் வலுவான போரிடும் ஆயுதம் ஹிஸ்புல்லாஹ். அதன் வளற்ச்சி என்பது நன்கு திட்டமிடப்பட்டு மரபு இராணுவமாகவும் அதே வேளை கெரில்லா தாக்குதல் அணியாகவும் போரிடும் இரு திறன்களையுடைய உலகின் ஒரே அமைப்பாக ஈரானால் பல ஆண்டுகளிற்கு முன்பே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈரானிய இராணுவத்தை நவீனமயப்படுத்தியதற்கு எவ்விதத்திலும் குறையில்லாத நிலையில் தான் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆயத்துல்லாக்களின் நேரடி வழிகாட்டலில், கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்ட இயக்கமிது.

இந்த யுத்தம் நிகழுமானால் சில புதிய அரபு இராணுவ முகமூடிகளை நாம் காணவிருக்கின்றோம். ஐக்கிய அரபு இராஜ்ஜியங்கள், கட்டார், குவைத் என அதன் நிறங்கள் ஸியோனிஸத்திற்கு துணை நிற்க தயார்படுத்தப்பட்டுள்ளன....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக