ஜனவரி 02, 2012

சிந்தப்போகும் லிபிய இரத்தம்...! - 2012 பழங்குடி சண்டையின் ஆண்டா?

 Abu Sayyaf

( ருடம் - 2012. மொத்த போராளிகள் எண்ணிக்கை 45000. போராளி குழுக்களின் எண்ணிக்கை 59. இதில் இஸ்லாமிய பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டவை 11. சோஷலிஸ அடிப்படையிலமைந்தவை 13. பழங்குடி இனக்குழுக்களிற்கு சொந்தமானவை 19. கடாபி ஆதரவு குழுவினர் 08. ஆக மிகுதி 06. இந்த 06 குழுக்கள் மட்டும் மேற்குலகின் அதாவது நேட்டோவின் கட்டுப்பாட்டில்.

இதுதான் இன்றைய லிபியா. 2012ம் வருடம் லிபியாவின் உள்நாட்டு போரிற்கான ஆமுல் ஹர்ப் (யுத்த ஆண்டு). அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. இப்போது
பல பழங்குடி தலைவர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. சிலரை வாஷிங்டன் அழைத்து நேரடியாக பேசியுள்ளது. பலரை பாரிஸில் வைத்து பேசியுள்ளது.

ஈராக்பாணியிலமைந்த துரோக அரசியலை இன்று மீண்டும் ஜனநாயக சாயம் பூசி சுழற்ச்சி முறை அரசியல் தலைமைத்துவம் எனும் மகுடத்தில் அரங்கேற்ற முற்பட்டுள்ளது அமெரிக்கா. இதற்கான களம் திரிப்போலி. லிபிய தலைநகர். எப்படி பக்தாத்தையும், காபூலையும் தற்கொலை தேசங்களின் தலை நகராக மாற்றியதோ அதே யுக்தியையே இங்கும் கையாள்கிறது அமெரிக்கா.

இனியென்ன. திரிப்போலியில் குண்டுகள் வெடிக்கும். இத்தாலியின் ஏதோவொரு தளத்தில் மூளை சலவை செய்யப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட மனித கொலையாளிகள் வெடிகுண்டு சுமந்த மேனியராக அமெரிக்க ரிமோட் கொன்ரோலில் வெடித்து சிதறுவர். அவர்கள் குடும்பங்களிற்கு ஏதோ ஒரு என்.ஜீ.ஓ. டொலர்களை அல்லது யூரோக்களை வெகுமானமாக வாரி வழங்கும்.

உள்நாட்டு சண்டையில் புரட்சிவாதிகள், கம்யூனிஸ்ட்கள், இஸ்லாமிஸ்ட்கள், தேச பக்தர்கள் என இனங்காணப்ட்ட எல்லோரும் படுகொலை செய்யப்ட்டு கலப்படமில்லாத அமெரிக்க மேற்கத்தைய அடிவருடிகள் மட்டும் மிஞ்சியிருக்கும் லிபிய தேசத்தின் கட்டுமான பணிகள் இவை.

இது தான் லிபியா. இப்படி இருந்தால் தான் இந்த தேசத்தின் எண்ணெயை இலகுவாக கொள்ளையடிக்கலாம். இந்த தேசத்தின் தங்கங்களையும் சர்வதேச சொத்துக்களையும் ஏற்கனவே சூறையாடி முடிந்தாயிற்று. லிபிய தேசத்தின் தேசிய சொத்துக்கள் யாவும் கடாபியினதும் அவரது மகன்மாரினதும் சொத்துக்கள் என ஊடக பொய்யை பரவலாக கூறி நேட்டோவின் யுத்தத்திற்கான செலவின கணக்கில் அமெரிக்கா எழுதியது வேறு விடயம்.

லிபிய இராணுவ பலமென்பது இன்னும் முற்றாக சிதைக்கப்படாத ஒன்று. அது சிதைக்கப்படல் வேண்டும். லெப் ரைட் மாட்சிங் செய்ய தெரியாத ஒரு இராணுவமே லிபியாவிற்கு தேவை. அப்போது தான் இஸ்ரேலிற்கு பாதுகாப்பு. இதுவரைக்கும் அமெரிக்காவின் கணக்குகள் தப்பாக போகவில்லை.

இப்போது லிபியாவில் இரண்டு அல் கைடாக்கள். ஒன்று அல் காயிதா என முஸ்லிம்களால் உணரப்படும் போராளிக்குழுக்களின் கட்டமைப்பு. இரண்டாமது அமெரிக்க சீ.ஐ.ஏ.யினால் வடிவமைத்து வழி நடாத்தப்படும் போலி அல் கைடா. அண்மையில் திரிப்போலியின் நகர கட்டடங்களில் கறுப்பு பின்புலத்தில் வெள்ளை அரபு எழுத்துக்கள் பொறித்த கொடிகள் பரவலாக கட்டப்பட்டன. இதை கட்டியது அமெரிக்க ஏவலமைப்பான அல் கைடா. ஆனால்  மீடியாக்களில் சொன்னதெல்லாம் அல் காயிதாவினர் திரிப்போலியினை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர் என. இந்த அமெரிக்க பித்தலாட்டம் மூலமாக ஏனைய சுதந்திர போராளி குழுக்கள் இப்போது தேசத்தை பங்கு போட முனைந்துள்ளன.

லிபிய சண்டையிலேயே கேவலமான விடயம் என்னவென்றால். இரு தரப்பும் அமெரிக்க ஸியோனிஸ ஊடக தகவல்களை மையமாக வைத்தே தமது முடிவுகளையும் அடைவுகளையும் மேற்கொண்டமையாகும். இஸ்லாத்தின் எதிரிகள் இவர்களை தெளிவாக ஏமாற்றியுள்ளார்கள். அவர்கள் இந்த விடயங்களில் மிக தெளிவாகவே உள்ளனர். 10 வருடங்களிற்கு முன்பே அரபு நாடுகளை “மத்திய கிழக்கின் வசந்தம்” எனும் பெயரில் பலவீனப்படுத்த திட்டமிட்டவர்கள் அதை நடைமுறைப்படுத்தும் நாட்கள் இவை.

“பச்சை சதுக்கம்” இப்போது “தியாகிகள் சதுக்கம்” என பெயர் மாற்றம் செய்யப்படும் அளவிற்கு லிபிய தேசிய சிந்தனைகள் களையப்படுகின்றன. இவற்றை லிபிய மக்கள் செய்தார்களா. இல்லவே இல்லை. சுதந்திர போராளிகள் என தம்மை நிலை நிறுத்திக்கொண்ட போராளிகள் செய்தார்கள். இந்த போராளிகளிற்கு கூட தெரியாது தம் தலைவர்கள் யாருடன் உறவாடுகிறார்கள். யார் தம் தலைவர்களிற்கு உத்தரவிடுகிறார்கள் என்பது.

உண்மையை சொல்லப்போனால் கடாபியை அகற்றியமையும், லிபிய ஆக்கிரமிப்பையும் அதன் பின்னரான உள்நாட்டு குழப்பங்களையும் உருவாக்கியதில் அமெரிக்காவிற்கோ, அல்லது மேற்குலக நாடுகளிற்கோ செய்த பங்கைவிடவும் அதிகம் களமிறங்கியது ஸியோனிஸ்ட்கள். எதற்காக?

உத்தியோகபற்றற்ற வகையில் 45000 இற்கும் மேற்பட்ட கடாபி ஆதரவு படையின் சிறையிடப்பட்டுள்ளனர். இவர்களின் 13000 இற்கும் மேலானவர்கள் கொடுமையான சித்திரவதைகளிற்கு உள்ளாக்கபட்டுள்ளனர்.18000 இற்கும் அதிகமானவர்கள் சுட்டுத்தள்ளப்பட்டுள்ளனர். இந்த கணக்கு விபரங்கள் வெளிவருவதில்லை. வெளிவரவும் மாட்டாது.

இரண்டாம் உலகப்போரில் அடோல்ப் ஹிட்லரிற்கும் வின்ஸ்டன் சேர்ச்சிலிற்கும் சமகாலத்தில் நிதியுதவியளித்தவர்கள் ஸியோனிஸ்ட்கள். ஸியோனிஸ சிந்தனையை புறம் தள்ளிய கிழக்கைரோப்பிய யூதர்களை கொன்றொழிப்பதன் ஊடாக உலக அனுதாபத்தை பெற்று பலஸ்தீனை இல்லாதொழித்தனர். இஸ்ரேல் எனும் ஸியோனிஸ தேசம் உருவாக இதுவே ஏதுவான காரணமாயிற்று. பின்னர் ஹிட்லரை அழிக்க ரஷ்யாவிற்கும் நிதியுதவியளித்தனர் இந்த ஸியோனிஸ்ட்கள். இவர்கள் தான் இப்போது லிபியாவில் தலையிடுகின்றனர்.

லெபனான் போரின் பின் 12 வருடங்கள் அந்த தேசம் சீரழிந்தது. பெய்ரூட் என்றும் ஈஸ்ட் பெய்ரூட் என்றும் அந்த நாடு நாசமாக்கப்பட்டது. அந்த சண்டையின் புளுதியில் பல பலஸ்தீன கிராமங்கள் அழி்த்தொழிக்கப்பட்டனர். அகதி முகாம்களில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன.  கரையான் புற்றுக்கள் போல யூத ஆக்கிரமிப்பாளர்களின் குடியேற்றம் உருவாக்கப்பட்டது. உலகம் அதை கவனித்ததை விடவும் லெபனான் போர் செய்திகளையே உற்று நோக்கியது. உற்று நோக்க வைக்கப்பட்டது என்பதே உண்மை. இப்போது அந்த திரைக்கதை திரிப்போலியில் அரங்கேறுகிறது.

இஸ்லாமிய அரசின் உருவாக்கம் தவிர்ந்த ஏனைய எந்த இஸங்களிற்கும் லிபியாவில் இடம் கொடுத்தல் கூடாது. இவ்வளவு தியாகங்களை செய்து இவ்வளவு இரத்தங்களை சிந்தி ஒரு தாகூத்தை அகற்றி இன்னொரு தாகூத்தை லிபிய மக்கள் உருவாக்க இடமளிக்க மாட்டார்கள் என்று நம்புவோம். அன்றைய 1400 வருடங்களிற்கு முந்தை இஸ்லாமிய ஆட்சியின் வாடை லிபியாவிலும் வீசட்டும். இன்ஷாஅல்லாஹ்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக