ஜனவரி 11, 2012

அடுத்த ஆட்சிக் கலைப்புக்கு அமெரிக்கா தயார்!


வாஷிங்டன், அமெரிக்கா: டுத்த ஆட்சிக் கலைப்புக்கு அமெரிக்கா தயாராகி விட்டது என்று கூறப்பபடுகின்றது. சமீப காலங்களில் அடுத்தடுத்து சில நாடுகளில் ஆட்சிக் கலைப்புகள் இடம்பெற்று, கடைசியில் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் லிபிய முன்னாள் ஜனாதிபதி கடாபி. இப்போது, அந்த வரிசையில் அடுத்த ஜனாதிபதியை அமெரிக்கா கொண்டுவரப் போகின்றது என்று தெரியவருகின்றது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அடுத்து வெளியே துரத்தப்பட உள்ளவர்  சிரியா நாட்டு ஜனாதிபதி,  பஷார் அல்-அஸாட்.
அல்-அஸாட்டை பதவியில் இருந்து அகற்றுவதற்கான சில வேலைத்திட்டங்களை அமெரிக்கா, துருக்கி நாட்டுடன் இணைந்து செய்து வருவதாகக் கூறப்படுகின்றது. சிரியாவில் அல்-அஸாட் பதவியில் இருந்து அகற்றப்பட்டால், அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடிய சிரியா நாட்டுத் தலைவர் யார் இருக்கிறார் என்ற ரகசிய ஆய்வு ஒன்றை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது என்றும் கூறப்படுகின்றது.

அமெரிக்க வெளியுறவு கொள்கை திட்டமிடல் கமிட்டி, ஈராக்கில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு காரணம், சதாமுக்குப் பின்னர் அவர் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு சரியான நபர் ஒருவரை முன்கூட்டியே அமெரிக்கா அடையாளம் காணாததுதான் என்று ஏற்கனவே கூறியிருந்தது.
அந்த அடிப்படையிலேயே சிரியாவில், அடுத்த தலைமைக்கு சரியான நபர் யார் என்ற ஆய்வுகளை அமெரிக்கா மேற்கொள்வதாகத் தெரிகிறது. இதற்கான பரிந்துரைகளை செய்யுமாறு துருக்கியை அமெரிக்கா கோரியுள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு (ஈராக்கில்) கொடுக்கப்பட்ட சில இடைஞ்சல்களைச் சமாளிக்க, துருக்கி தனது நாட்டில் அமெரிக்க ராணுவத் தளங்களை அமைக்க அனுமதி கொடுத்திருந்தது. அந்த வகையில், இரு நாடுகளும் சமீப காலமாக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன.
தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல் உண்மையான இருக்கும் பட்சத்தில், சிரியா நாட்டுக்குள் ஆட்சிக்கு எதிரான புரட்சி நடவடிக்கைகள் விரைவில் முழு வேகத்துடன் நடைபெறத் தொடங்கும். அதற்கு அடுத்தபடியாக நேட்டோ படைகளின் ஆதரவு, புரட்சியாளர்களுக்கு கிடைக்கும்!

இதோ வரப்போகிறது… மற்றொரு லிபியா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக