ஜனவரி 11, 2012

ஹிஸ்புல்லா இயக்கம், தனது ஆயுதங்களில் முக்கியமானவற்றை எங்கே மறைத்து வைத்திருக்கிறது? - சிரியா நாட்டு ராணுவத்தின் ராணுவக் கிடங்குகள்தான்


ஹிஸ்புல்லா இயக்கம், தனது ஆயுதங்களில் முக்கியமானவற்றை எங்கே மறைத்து வைத்திருக்கிறது? இந்தக் கேள்விக்கான பதில், யாருக்குத் தெரிகின்றதோ இல்லையோ,  இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்குத் தெரியும்.
ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரானால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் அவை. அவற்றை லெபனானுக்குள் கொண்டுவந்தால், இஸ்ரேலிய போர் விமானங்கள் சொல்லிச் சொல்லித் தாக்கும் என்பது ஹிஸ்புல்லாவுக்குத் தெரியும். இதனால் அவற்றைப் பாதுகாப்பாக மறைத்து வைக்க ஒரு இடம் தேவைப்பட்டது.

ஹிஸ்புல்லா அவற்றை மறைத்து வைத்த இடம், சிரியா நாட்டு ராணுவத்தின் ராணுவக் கிடங்குகள்தான்!
ஈரானியத் தயாரிப்பாக ஃபாட்டா-110 ஏவுகணைகள், SA-8 ஏயார் பட்டரிகள் (18 வார்ஹெட்கள் பொருத்தக்கூடிய ரகம்) தொடக்கம், தரையிலிருந்து வானுக்கு ஏவப்படக்கூடிய ஏவுகணைகள் வரை, சிரிய ராணுவ ஸ்டோரேஜில் இருக்கும் ஹிஸ்புல்லாவின் ஆயுத லிஸ்ட் பெரியது.
இப்போது திடீரென சிரியாவின் ராணுவக் கிடங்குகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆயுதங்களை வெளியேற்றத் தொடங்கியிருக்கின்றது ஹிஸ்புல்லா என்கிறது மொசாத்.

சிரிய ஜனாதிபதியின் சமீபகால அரசியல் நடவடிக்கைகளும், அவரது ஆட்சி தள்ளாடுவதுமே ஆயுதங்களை இடமாற்றுவதற்கான காரணம் என ஊகிக்கப்படலாம். காரணம், இப்போது அந்தப் பகுதியிலுள்ள வேறு நாடுகளில் நடைபெறுவதுபோல சிரியாவிலும் ஒரு மக்கள் கிளர்ச்சி தொடங்கினால், இந்த ஆயுதங்களின் கதி அதோகதியாகி விடலாம்.

இந்த ஆயுத இடமாற்றத்தை மிக ரகசியமாகச் செய்வதாக ஹிஸ்புல்லா நினைத்துக்கொண்டு இருந்தாலும், மொசாத் வட்டாரங்களில் ஆயுத இடமாற்றம் பற்றி விலாவாரியாகச் செய்திகள் வெளியாகின்றன.
ஆயுதங்கள் சிரியாவின் எல்லைக்குள் இருக்கும்வரை இஸ்ரேல் ஏதும் செய்யாது. ஆனால், அவை லெபனானின் எல்லைக்குள் வரத் தொடங்கும்போதுதான், இஸ்ரேல் அதிரடியாக ஏதாவது செய்யப் பார்க்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக