மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை?
நீண்ட காலமாக இதோ வருகிறது என்று ஈரானைப் பயமுறுத்திக் கொண்டிருந்த பூதம் வந்தே விட்டது. ஈரானின் எண்ணை இறக்குமதிக்கு தடை விதிப்பது என்று முடிவு எடுத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் ஈரானிடமிருந்து
எண்ணை வாங்குவதை நிறுத்திக் கொள்ளப் போகின்றன. ஈரானிய அணு ஆயுதத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தடை இது.
வெளிப்படையாகப் பார்த்தால், இது ஈரான் என்ற ஒரு நாட்டுக்கு
ஏற்பட்டுள்ள சிக்கல் என்பதுபோல தெரியலாம். ஆனால், இதன்
விளைவுகள் பயங்கரமாக இருக்கப் போகின்றன.
தமது நாட்டின்மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால், ஹோமுஸ் கடல் பாதையை மூடிவிடப் போவதாக ஈரான் ஏற்கனவே பயமுறுத்தி
உள்ளது. இந்தப் பாதை வழியாகவே மேற்கே செல்லும் பெரும்பாலான
கப்பல் போக்குவரத்துகள் நடைபெறுகின்றன. முக்கியமாக மற்றைய
எண்ணை நாடுகளில் இருந்து எண்ணைக் கப்பல்கள் மேற்கு நாடுகளுக்கு செல்வது இந்த கடல்வழி ஊடாகத்தான்.
பாதை மூடப்பட்டால், அது மிகப்பெரிய அவலத்தை மேற்கு நாடுகளில் ஏற்படுத்தும்.
அதை தவிர்ப்பதற்காக, ஈரானின் எச்சரிக்கையையும் மீறி கப்பல்களை
இந்தப் பாதையால் அனுப்பினால், கப்பல்களை தாக்கி மூழ்கடிக்கும்
ராணுவப் பலம் ஈரானிடம் உள்ளது. குறுகலான இந்தப் பாதையில்
மூன்று கப்பல்கள் மூழ்கினாலே, பாதை அடைபட்டுவிடும். காரணம்
கடலின் அடியில் அந்தக் கப்பல்கள் இருக்கும்வரை (கடல் ஆழம்
குறைவு) வேறு கப்பல்கள் அந்தப் பாதையால் செல்வது ஆபத்தானது.
அதை தவிர்ப்பதற்காக யுத்தம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டால், நிலைமை இன்னமும் மோசமாகும்!
இதிலுள்ள அடுத்த சிக்கல், ஈரான்தான் எண்ணை உற்பத்தி செய்யும்
ஒபெக் நாடுகளின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர். (முதலாவது,
சவுதி அரேபியா) ஈரானில் உற்பத்தியாகும் எண்ணையின் 20 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றது. அந்த எண்ணையை வாங்குவ
தில்லை என்று தீர்மானித்தால், அதேயளவு எண்ணையை வேறு
ஏதாவது நாடு உற்பத்தி செய்து தர வேண்டும். இல்லாவிட்டால், சப்ளையைவிட டிமான்ட் அதிகமாகும். எண்ணை விலை எகிறும்!
இவ்வளவு விவகாரங்களும், ஈரான் என்ற ஒற்றை நாட்டின்மீது
பொருளாதாரத் தடை விதிப்பதன் பின்னணியில் உள்ளன. சவுதி
அரேபியாவும், மற்றைய எண்ணை உற்பத்தி நாடுகளும் தேலதிக
எண்ணை சப்ளை செய்ய முன்வந்தாலும், போக்குவரத்துப் பிரச்சி
னையில் யாராலும் உதவ முடியாது. சுற்றுப் பாதை வழியாக கப்பல்
களை செலுத்திச் சென்றால், மேலதிக போக்குவரத்து செலவு
காரணமாக எண்ணை விலை 40 சதவீதம் அதிகமாகும்.
ஈரான்மீது பொருளாதாரத் தடை விதிப்பது என்று இன்று ஐரோப்பிய
ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஈரானுடன் புதிய
வர்த்தக ஒப்பந்தங்களை செய்து கொள்வதில்லை என்றும், ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் இன்னமும் 6 மாதங்களோடு முறிததுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் முடிவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக