பிலிப்பைன்ஸ் நிலச்சரிவில் மிண்டானோ முஸ்லிம்கள்.
Abu Maslama
பிலிப்பைன்ஸின் மிண்டாணோ மாகாணம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசம். மொத்த பிலிப்பைன்சிலும் 30 விகிதமான மக்கள் வாழும் இடம். தமது பிரதேச சுயாட்சிக்காக பல குழுக்கள் அரசியல் ரீதியாகவும் இராணவரீதியாகவும் போராடுகின்றன. தனது பெரிய கடற்படைத் தளத்தை தற்காப்தற்காக முஸ்லிம்களின் போராட்டத்தை பயங்கரவா பிரிவினை கோரும் போராட்டமாக அமெரிக்கா பிரகடனப்படுத்தியது. பிலிப்பைன்ஸ் அரசிற்கு வலிகோலியாக ஊடக யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது இந்த தேசம்.
தனது பங்கிற்கு பிரித்தானியா லண்டன் பீ.பீ.சி.யின் கிளையை மனிலாவில் ஆரம்பித்து ரேடியோ மனிலா எனும் பெயரில் மிண்டானோ விடுதலை போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக தினமும் சங்கூதியது. இன விடுதலைக்கு எதிரான போரை கத்தோலிக்க யுத்தமாக மாற்றியது இந்த இரண்டு தேசங்களே. அல் காயிதாவிற்கு முன்பு அமெரிக்க பிரித்தானிய சக்திகள் சரடு விட்டது அபூ ஸய்யாப் விடுதலை இயக்கம் ஒரு இஸ்லாமிய சர்வதேச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தாய் அமைப்பு என.
பிலிப்பைன்ஸ் இராணுவம் செய்த மனித படுகொலைகள், சித்திரவதைகள், கற்பழிப்புக்கள், சூறையாடல்கள் எல்லாம் சர்வதேச முற்றத்தில் உடனடியாகவே துப்பரவு செய்யப்பட்டன. ஏன் இன்றும் கூட இது தான் உண்மை. இது பிலிப்பைன்ஸில் மட்டுமல்ல, தாய்லாந்திலும் இதே நிகழ்வே நடக்கிறது. சரி இப்போது...
இன்றைய தினம் அதிகாலை மிண்டானோ மாகாணத்தின் பன்டுகான் நகரிற்கு அருகிலான ஒரு மலைப்புற கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 35 இற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 180 இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். சுமார் 130 குடும்பங்கள் வசித்து வந்த பிரதேசமே நிலச்சரிவினுல் மாட்டுப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம், புயல் போன்றவற்றால் நாட்டின் தென்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில ஆயிரம் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. பல்லாயிரம் பேர் அகதிகளாகி உள்ளனர். தென்பகுதி முழுவதுமே இயற்கை அனர்த்தத்தினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இராணுவ பாதுகாப்புடன் சுரங்க அகழ்விழ் ஈடபட்ட வெளிநாட்டு கம்பனிகளின் கட்டுப்பாடற்ற அகழ்வே இதற்கான அடிப்படையாகும். கடந்த ஏப்ரல் மாதமும் இவ்வாறான ஒரு நிலச்சரிவு ஏற்படப் பார்த்து அது நடைபெறவில்லை. அதையும் மீறி பிலிப்பைன்ஸ் அரசும், மிண்டானோ மாநில கவர்னரும், பாதுகாப்பு படையினரும் சார்பாக இருக்கவே மேற்படி சுரங்கம் தோண்டப்பட்டது.
அரசு இராணுவத்தின் படுகொலைகள் ஒருபுரம், அதே அரசின் சுரண்டல் ஏகாதிபத்திய வர்த்தக முதலைகள் மறுபுரம் என இன்று ஒரு கிராமம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ளது. மரணித்தது முஸ்லிம்கள் என்றபடியால் இது ஒரு விடயமேயல்ல. இதுதான் இன்றைய பிலிபைன்ஸ்.
இந்த முஸ்லிம்களிற்காகவும் எம் கரங்கள் இறைவனிடம் உயர்தல் வேண்டும். எவருக்கெல்லாமோ ஜனாஸா தொழும் நாங்கள் இந்த முஸ்லிம்களிற்காகவும் தொழு மாட்டோமா என்ன?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக