ஜேர்மனிய உளவாளிகளை பாகிஸ்தான் வழியனுப்பிய மர்மம்?
மூன்று ஜேர்மன் உளவாளிகள்
பாகிஸ்தானில் நடமாடியதாக கூறப்பட்ட விவகாரம், நினைத்ததைவிட
சிக்கல் மற்றும் மர்மம் வாய்ந்ததாக உள்ளது. ஜேர்மனி மறுத்தாலும்,
உளவு வட்டாரங்களில் எமக்கு கிடைத்த தகவல்கள், இவர்கள் ஜேர்மனியின்
நாம் விசாரித்தவரை இந்த மூவரும், ஜேர்மனியின் பி.என்.டி.
(BND – Federal Intelligence Service) ஏஜென்ட்கள். இவர்கள் உளவாளிகள்
என்பதை மறுத்த ஜேர்மனி, பாகிஸ்தானுக்கு ராஜதந்திர அழுத்தங்கள்கொடு
த்ததில், மூவரையும் நாடுகடத்தியதுடன் பைலை மூடிக்கொண்டுள்ளது
பாகிஸ்தான். ஏற்கனவே தலைக்கு மேல் சிக்கல் உள்ள நிலையில், புதிதாக
சிக்கல் ஏதும் வேண்டாம் என்று அவர்கள் முடிவு எடுத்திருக்கலாம்.
இந்த மூவரில் இருவர் ஆண்கள், ஒருவர் பெண். இவர்கள் மேற்கு பாகிஸ்
தானின் பெஷாவர் நகரில் நடமாடியபோது போலீஸ் கைது செய்தது.
அங்கிருந்து பலத்த காவலுடன் இஸ்லாமபாத் அழைத்து வந்து, விசாரித்தது.
இவர்களை விசாரணை செய்தது பாகிஸ்தான் போலீஸா அல்லது,
உளவுத்துறையா என்பதில் குழப்பமான தகவல்கள் உள்ளன.
பாகிஸ்தான் போலீஸ், இவர்களை பெஷாவர் நகரில் பிடித்தபோது,
முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கினார்கள் என்கிறது.
“முதலில் இவர்கள் தாம் அபிவிருத்தி வேலை செய்யும் ஜேர்மன் நிறுவனம்
ஒன்றின் ஊழியர்கள் என்றார்கள். அதன்பின் அதை மாற்றி, அபிவிருந்தி
நிறுவனம் செய்யும் பணிகளை மேற்பார்வை செய்ய பாகிஸ்தானில்
உள்ள ஜேர்மன் தூதரகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஆட்கள் என்றார்கள்.
இவர்களுடைய இரண்டு கூற்றையும் நிரூபிக்க அவர்களிடம் எந்தவித
ஆவணமும் கிடையாது” என்று கூறுகிறது பெஷாவர் நகர போலீஸ்.
இஸ்லாமபாத் அழைத்துவரப்பட்ட இவர்களின் உடமைகளை சோதனையிட்ட
போது, GIZ (German Agency for International Cooperation) நிறுவனத்தின்
விசிட்டிங் கார்டுகள் கிடைத்தன. இவர்கள் பயணம் செய்த வாகனம் தொடர்பான ஆவணங்களைப் பார்த்தபோது, அதுவும் அதே நிறுவனத்தின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிறுவனம், பாகிஸ்தானில் அபிவிருத்திப் பணிகளை செய்துகொடுக்க அரசு அனுமதி பெற்ற சேவை நிறுவனம்.
பெயர் குறிப்பிடாத பாகிஸ்தானி உளவுத்துறை அதிகாரி ஒருவர், “இவர்கள்
சேவை நிறுவனத்தின் போர்வையில் பாகிஸ்தானில் நடமாடிய BND உளவு
த்துறை ஏஜென்ட்கள்தான். இந்த மூவரையும் நாம் சும்மா கைது
செய்யவில்லை. சுமார் இரண்டு வாரங்களாக ரகசியமாக பின்தொடர்ந்து கண்காணித்ததில், இவர்கள் உளவு பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து
கொண்டே கைது செய்தோம்” என்று கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகை
தி அப்சேவர் தெரிவித்துள்ளது.
இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட உடனே,
இஸ்லாமபாத்தில் உள்ள ஜேர்மன் தூதரகம் பாகிஸ்தான் வெளியுறவு
அமைச்சிடம் விபரம் கேட்டது. அதையடுத்து, விஷயம் பேர்லின் வரை
சென்றது. அங்கு ஜேர்மன் வெளியுறவு அமைச்சு, பாகிஸ்தான் தூதரை
அழைத்து விளக்கம் கேட்டது. ராஜதந்திர அழுத்தம் ஏற்படத் தொடங்கியது.
ஜேர்மன் வெளியுறவு அமைச்சு, இந்த மூவரும் யார் என்பதற்கு டிப்ளமட்டிக் வார்த்தைகளில் ஆன விளக்கம் ஒன்றை கொடுத்தது. ‘இஸ்லாமபாத்தில்
உள்ள ஜேர்மன் தூதரகத்தில் ராஜதந்திர ரீதியாக பதிவு செய்யப்பட்ட
ஊழியர்கள்’ என்பதே அந்த விளக்கம். இந்த டிஸ்கிரிப்ஷனை வைத்து
இவர்களது நிஜ ஐடென்டிட்டியை யாரும் ஊகிக்க முடியாது!
உளவுத்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தவரை, மேற்கு பாகிஸ்தானின்
பெஷாவர் நகரில் ஜேர்மன் உளவுத்துறை BND ஒரு ஒன்-மேன் ஆபரேஷனை
நீண்ட காலமாக வைத்திருந்தது. அந்த நபர் வர்த்தக நிறுவனம் ஒன்றின்
பெயரில் அலுவலகம் வைத்து செயற்பட்டுக் கொண்டிருந்தார். ஐ.எஸ்.ஐ.-
யும் அந்த நபரைப் பற்றி தெரிந்தே வைத்திருந்தது.
இந்த மூவரும் வேறு ஏதாவது குறுகிய கால ஆபரேஷனுக்காக அங்கே அனுப்பப்படிருக்கலாம். இங்குள்ள பெரிய வேடிக்கை என்னவென்றால்,
பாகிஸ்தானில் இயங்கும் GIZ ஜேர்மன் சேவை நிறுவன அதிகாரிகளுக்கு,
தமது நிறுவனத்தின் பெயரை ஜேர்மன் உளவுத்துறை கவராக பயன்படுத்தும்
விஷயம் தெரியாது.
தமது நிறுவனத்தின் பெயரில் ரிஜிட்ரேஷன் செய்யப்பட்ட வாகனம் ஒன்று
உளவுத்துறை ஆட்களிடம் இருப்பதும் அவர்களுக்கு புதிய தகவலாக உள்ளது.
“எம்மிடம் உள்ள வாகனங்கள் எதையும் நாம் யாருக்கும் இரவல் கொடுக்க
வில்லை” என்கிறார்கள் அவர்கள். இஸ்லாமபாத்தில் உள்ள ஜேர்மன்
தூதரகம், “ராஜதந்திர ரீதியாக பதிவு செய்யப்பட்ட ஊழியர்கள்” என்று
வர்ணிக்கப்பட்ட இந்த மூவரும், GIZ நிறுவனத்தின் பெயரிலா, அல்லது வேறு நிறுவனத்தின் பெயரிலா பதிவு செய்யப்பட்டவர்கள் என்று சொல்ல மறுக்கிறது.
பாகிஸ்தான் தரப்பு இறுக்கமாக நின்றிருந்தால், ஜேர்மன் அரசு மகா சங்கடத்தில் மாட்டியிருக்கக்கூடிய ஸ்கான்டல் இது. ஆனால், ஜேர்மனியின் ஆரம்ப அழுத்தங்களிலேயே பணிந்துபோன பாகிஸ்தான், இந்த மூவரையும்
இஸ்லாமபாத் கொண்டுவந்து 24 மணி நேரத்துக்குள் நாடுகடத்தி,
பாகிஸ்தானுக்கு வெளியே விமானம் ஏற்றி விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக