ஸ்தம்பித்தது பிரிட்டன், ஸ்தம்பிக்கட்டும் இந்தியா!
பிரிட்டனில் கடந்த டிசம்பர் 1ம்தேதி 20லட்சத்திற்கும் அதிகமான பொதுத்துறை தொழிலாளர்கள்நாடு தழுவிய 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள்.இது வரலாறு காணாதது. பிரிட்டனின் வர லாற்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகஇப்படிப்பட்ட ஒரு மிகப்பெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்ததில்லை. 37 தொழிற்சங்கங்கள்ஒன்றிணைந்து நடத் திய இந்த மாபெரும் கிளர்ச்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சுகாதாரஊழியர்கள், உள்ளாட்சி மன்றங்களின் தொழிலாளர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும்எழுச்சியோடு பங்கேற்றார்கள். ஆண்டாண்டு காலமாக போராடிப் பெற்ற ஓய்வூதியப் பலன்கள்என்ற உழைக்கும் வர்க்கத்தின் உரிமையைப் பறிக்காதே என்பதே இப்போராட்டத்தின் பிரதானமுழக்கம்.
அமெரிக்காவில் மையம் கொண்டு, ஐரோப் பிய நாடுகள் எங்கும் தனது ஆக்டோபஸ் கரங் களைஅகல விரித்திருந்த உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி, பிரிட்டனையும் கடுமை யாகதாக்கியிருக்கிறது. இதர ஆளும் வர்க்க அரசுகளைப் போலவே பிரிட்டனின் பழமை வாத கட்சி -லிபரல் ஜனநாயகக் கட்சி கூட் டணி அரசும் பெரும் முதலாளிகளின் நலன் களை பாதுகாக்கவும்,கார்ப்பரேட் நிறுவனங் களை கைதூக்கிவிடவும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க தொழிலாளர்கள் -அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் நலன்களில் கை வைக்கிறது; அவர்களது தொழிற்சங்கஉரிமையைப் பறிக் கிறது; போராடிப் பெற்ற ஓய் வூதியப் பலன்களை முடக்குகிறது; சமூகநலத்திட்டங்களை ஒழித்துக்கட்டுகிறது.
இதை எதிர்த்து, அமெரிக்காவின் வால்ஸ் ட்ரீட்டில் எழுந்துள்ள போராட்டத்தைப் போலவே,ஐரோப்பிய நாடுகளில் லட்சக்கணக்கில் மக் கள் அணிதிரளும் மாபெரும் போராட்டங் களைப்போலவே பிரிட்டனிலும் மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமே 20லட்சம் பேர்பங்கேற்ற இந்த வேலை நிறுத்தம்.
பிரிட்டனிலும், இதர பல நாடுகளிலும் நடக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் இத்தகைய எழுச்சி,இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கும் உத்வேகமூட்டுகிறது; உரமூட்டுகிறது.
ஏற்கெனவே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நாசகரபொருளாதாரக் கொள்கைகளை கைவிட வலி யுறுத்தி, வரலாறு காணாத அளவில் அனைத்துமத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து, ஆளுங்கட்சி தொழிற்சங்கம் உட்பட, கோடிக் கணக்கானதொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் போராட்டங்களை இந்தியத் தொழி லாளர்கள் கடந்தசெப்டம்பரில் நடத்தியிருக்கிறார்கள்.
எனினும் தொழிலாளர்களின் குரலுக்கு செவி சாய்க்க பிடிவாதமாக மறுக்கிறது மன்மோகன் சிங்அரசு.
உலகமயமாகும் முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சியும்உலகமயமாகும் என்பதற்கிணங்க, இந்தியத் தொழிலாளர் வர்க்கமும் மீண்டும் ஒரு மகத்தானபோராட்டக்களத்திற்கு தயாராகிறது. அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து 2012-பிப்ரவரி 28ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்த தயாராகின்றன.

(தீக்கதிர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக