டிசம்பர் 06, 2011

யாழ் முஸ்லிம்கள் பற்றிய தமிழ் தேசியத்தின் புரிதல்கள்

ஸ்டாலின்கிராட். நாஸிகளால் நாசம் செய்யப்பட்ட நகரம். இன்று அங்கு செல்வோரை வியப்புடன் அன்னாந்து பார்க்க வைக்கிறது. அதன் நகர கட்டமைப்பை ஒரு முறை பார்த்தால் ஆயிரம் முறை எண்ணி பார்க்கலாம். இரண்டாம் உலக போரில் சிதைந்துபோன நகர். அந்த அழிவே அவர்களை இயங்க வைத்தது. ரஷ்யர்களை இன்றளவும்.

ஹிரோஷிமா. நாகசாகி. அமெரிக்கா பேர்ள் ஹார்ப்பரில் அடைந்த தோல்விக்கு வஞ்சம் தீர்க்கப்ட்ட நகரங்கள். அமெரிக்க இரத்தக்காட்டேரிகளின் குரூர தாக்குதலில் பலியான ஜப்பானியர் பல இலட்சம். ஆனால் இன்றைய ஹிரோஷிமா நியூயோர்க்கை விடவும் அழகாக வர்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. அனுகுண்டு ஜப்பானியரை வெற்றியில் உச்சிக்கே அழைத்துச் சென்றது.

ஹேர்ஸிகோவினா. பொஸ்னியாவின் அழகிய நகர். சேர்பிய சிலுவை வீரர்களால் சிதைக்கப்பட்ட நகரம். எடுப்பதற்கோ பார்ப்பதற்கோ ஒன்றுமே இல்லை எனும் அளவிற்கு தகர்க்கப்பட்ட நகரம். ஐரோப்பாவின் இதய தேசத்தின் இதயமது. அழகு என்றால் ஹேர்ஸிகோவினாவை பாருங்கள். அழிவு என்றாலும் ஹேர்ஸிகோவினாவை பாருங்கள் என ஒரு கவிஞன் பாடினான். அப்படி ஒரு நகர். 20 வருட முயற்சியில் உலகின் அழகிய நகரங்களில் 17ம் இடம். முயன்றார்கள். பொஸ்னிய முஸ்லிம்களின் சாட்சியங்களவை.

யாழ்ப்பாணம். யாழ்ப்பாணம் சோனக தெரு. விடுதலை என்ற கற்பனை போரில் பாசி்ஸ மனித மிருகங்களான தமிழீழ விடுதலை புலிகளால் கபளீகரம் செய்யப்பட்ட பிரதேசம். கற்பனைவாத ஈழ போராட்டத்தில் அவர்கள் அடைந்தது தான் என்ன? மண்டையோடுகள், எலும்புகூடுகள், மயானங்கள், விதவைகள், முடங்கள், அநாதைகள். இவை தான் இவர்களது அறுவடை. இந்த இனவெறி மிருகங்களான மறத்தமிழினத்திற்கு சொந்தம் கொண்டாடிய புலிகளால் நாசமாக்கப்பட்ட சமூகம் தான் யாழ்ப்பாண முஸ்லிம்கள்.

இப்போது யாழ்ப்பாணத்தில் போர் முடிந்து விட்டது. முற்றவெளியில் காலை குயிலின் ஓசை 30 வருடம் கழித்து அதே பழைய சத்தத்தடனும் சந்தத்துடனும் கேட்கிறது. சமாதானம் என்ற பெயரில் எதுவெல்லாமோ நடந்து கொண்டிருக்கிறது. மறத்தமிழர் மீண்டும் எழுந்து விட்டனர். யூதர்கள் போல இயங்குவோம் என்கின்றனர். கிழக்கு திமோர் வழியில் செல்வோம் என்கின்றனர். தென்சூடான் எங்கள் போராட்டத்தின் மொடல் என்கின்றனர். புலிகளின் அழிவின் ஓலங்கள் பல அலைவரிசைகளில் இவ்வாரெல்லாம் கேட்கிறது. கூடவே புலம்பெயர் புலிப்பினாமிகள் முகாரி ராகம் இசைப்பதும் தொலைவில் கேட்கிறது.

டெல்லியில் இன்றும் கூட “டாக்ஸி” ட்ரைவர்கள் முஸ்லிம்கள். பம்பாயில் இன்றும் கூட “பீடா” விற்பவர்கள் முஸ்லிம்கள். பீகாரில் “மூட்டை” சுமப்பவர்கள் முஸ்லிம்கள். இந்து பயங்கரவாதத்தின் இனவெறி பெற்ற குழந்தைகள் இவர்கள். இந்த வரிசையில் “இரும்பு வியாபாரிகள்” எனும் மக்கள் கூட்டம் யாழ்ப்பாண முஸ்லிம்கள்.

இந்த நிலைக்கு இவர்களை கொண்டு வந்து விட்டவர்கள் பாசிஸ புலிகள். தமிழ் சாதித்துவம் பெற்றெடுத்த இன வெறி கூட்டம் புலிகள் மட்டுமல்ல, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் என செவன் டெலா என பல. இந்த முஸ்லிம்களின் இரத்தம் குடித்த இனவாத பேய்களின் போராட்டத்தில் இறுதியில் அனைவரையும் கருவறுத்து, கழுத்தறுத்து வெற்றி பெற்றவர்கள் புலிகள்.

முஸ்லிம்களை சுற்றி வளைத்து, சூறையாடி, அகதிகளாக பலாத்கார ஆயுத பிரயோகம் மூலம் வெளியேற்றிய புனித விடுதலை போராட்டத்தின் சொந்தக்காரர்கள் புலிகள். புலிகளை ஆதரித்தவர்கள். புலிகளிற்கு துணை நின்றவர்கள். புலிகளிற்கு சித்தாந்தம் சொல்லிக் கொடுத்தவர்கள். புலிகளிற்கு தங்கள் சொல்லாலும், எழுத்தாலும், செயலாலும் சாறு பகன்றவர்கள். இவர்கள் அனைவருமே இந்த முஸ்லிம்களின் அவலங்களிற்கு சொந்தக்காரர்கள்.

புத்தள உப்புவெளிகளிலும், புதர்வெளிகளிலும் தங்கள் வாழ்வின் இருப்பை தக்கவைக்க ஒவ்வொரு நாளும் செத்துப்பிழைத்தவர்கள். 1991 களில் இவர்கள் சிந்திய கண்ணீரால் புத்தள உப்பிற்கு முழு இலங்கையிலுமே கிராக்கி அதிகம்.
அவ்வளவிற்கு இவர்கள் அன்று கஷ்டப்பட்டார்கள். வயிற்றுப் பசியும், மானத்தை மறைத்தலும் இவர்களிற்கு இருந்த இரு பெரும் சவால்கள். இந்த இரண்டையும் பேண அவர்கள் தங்கள் கல்வியை, தங்கள் அந்தஸ்தை, தங்கள் பாரம்பரியத்தை வீசியெறிந்து விட்டு உழைத்தார்கள்.

ஒரு வீட்டில் தந்தை அவரது முழு ஆண் பிள்ளைகள் என அனைவருமே உழைத்தார்கள். மாடாக அல்ல எருமையாகவும் உழைத்தார்கள். இருப்பையும் இருத்தலையும் பேண. பேணினார்கள். கல்வீட்டில் அரைவாசி பேர் வாழும் அளவிற்கு முன்னேறினார்கள். இதற்கு அவர்களிற்கு 20 வருட காலம் எடுத்தது.
அகதி வாழ்கையினதும் முகாம் வாழ்க்கையினதும் அறுவடைகளாக உருவான இளைய தலைமுறையிடம் கலாச்சாரம் மிஞ்சியிருக்கவில்லை. கல்வி எஞ்சி இருக்கவில்லை.  மார்க்கம் மீதமிருக்கவில்லை.

புத்தள முஸ்லிம்களின் பிரதேசவாத நெருக்கடிகளுக்குள் நசுங்கி வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் சொந்த மண்ணில், தாயக மண்ணில் வாழும் சுதந்திரமிக்க மனிதர்களாக வாழ யாழ்ப்பாணம் சென்றனர். சொந்த வீடில்லை. சொத்துக்கள் இல்லை. தினக்கூலிகளாக வாழும் நிலை. கூலித்தொழில் செய்ய எதை செய்வது எனும் நிலை. அவர்களிற்கு இருந்த ஒரே வாய்ப்பு “பழைய இரும்புகளை சேகரித்து விற்கும் வியாபாரம்”.

இதைத்தான் செய்தார்கள். கடுமையாக உழைத்தார்கள். பட்டி தொட்டியெல்லாம் சென்று இரும்பை வாங்கி விற்றார்கள். இப்போது என்னவென்றால் தமிழ் பேரினவாதமும், தமிழ் குறுந்தேசியவாதமும் முஸ்லிம்களை குறிவைக்கின்றன. அரச உயர் பொறுப்பிலிருப்பவர் முதல் ஊடகங்கள் வரை ஒத்து ஊதுகின்றன. வசை பாடுகின்றன. பொய்யான வதந்திகளை இன உணர்வு கலந்து குழைத்து வழங்குகின்றன.

“உதயன்”. யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகை. அண்மைகாலமாக முஸ்லிம்கள் பற்றி அதிகமாக அலட்டிக்கொள்கிறது. யாழ்ப்பாண முஸ்லிம்களை கள்வர்களாக, சுரண்டல் வர்த்தகர்களாக, கொள்ளையர்களாக, சிங்கள இனவாதத்தின் மறைகரங்களாக என பல ரூபங்களில் முஸ்லிம்களை பற்றி கதைக்கிறது.

யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்க இறாலை ஏற்றமதி செய்யும் போதும் கணவாயை ஏற்றுமதி செய்யும் போதும், டைகர் இறாலை ஏற்றுமதி செய்யும் போதும் கடல் வளம் பற்றி கதைக்காத தமிழ் பேரினவாதம் இரும்பை ஏற்றுமதி செய்யும் போது கூக்குரலிடுகிறது. திராட்சை பழத்தை ஏற்றுமதி செய்யும் போதும் கருத்தகொழும்பான் மாம்பழத்தை கொழும்பிற்கு ஏற்றும் போதும் மொளனிக்கும் இவர்கள் சுண்ணைாம்பை ஏற்றுமதி செய்யும் போது தேசிய வளம் பற்றி பேசாத இவர்கள் “இரும்பு என்றும் ஆடு என்றும் ” முதலை கண்ணீர் வடிக்கின்றனர்.

பாசிஸ புலிகள் மட்டுமே அழிக்கப்பட்டனர். அவர்களின் எச்சங்கள் மீண்டும் புலிச்சட்டயை கழற்றிவிட்டு வேறு யூனிபோர்ம் அணிந்தவர்களாக தமிழர்களின் பாரம்பரிய இனவாத கோலம் பூண்டு ஆரோகரிக்கின்றனர். தமிழ் குறுந்தேசியவாதம் மீண்டுமொரு இன ஒடுக்கலை முஸ்லிம்கள் மீது ஜனநாயக போர்வையில் மேற்கொள்ள முனையவிருப்பதன் முதல் வியூகமே இன்றைய உதயன் பத்திரிகை செய்திகள்.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் தான் அன்று யாழ் நகரின் இரும்பு வர்த்தகர்கள். அவர்கள் தான் இந்த மண்ணிற்கு பல பொருட்களையும் கொண்டு வந்து சேர்த்தவர்கள். இந்த மக்களை பஞ்ச பரதேசிகளாக மாற்றியவர்கள் புலிகள். அந்த பாசிஸ்ட்களை ஆதரித்தவர்கள். அவர்களிற்காக அணி திரண்டவர்கள்.  இன்றைய யாழ்ப்பாணத்தின் அசிங்கமான வியாபாரமாக பார்க்கப்படும் இரும்பு வியாபாரத்தை பழைய போத்தல் பித்தளைகாரர்கள், பரணகோட்காரர்கள் போல் சமனிலைபடுத்தப்பார்க்கிறது உதயன் பத்திரிகை.

யாழ்ப்பாண முஸ்லிம்களை அரசியல் அநாதைகளாக்கி, பொருளதார பிச்சைக்காரர்களாக்கி, இப்போது கலாச்சார பொறுக்கிகளாக நிர்வாணப்படுத்தியது தமிழர் போராட்டமும் அதற்கு சொந்தக்காரர்களும், அதற்கு வடம் இழுத்தவர்களும் தான்.

இதையெல்லாம் உணராமல் தங்கள் வாழ்க்கைக்காக தங்கள் தாயக மண்ணில் உழைத்து உண்ணும் பாட்டாளி வர்க்கமாகவே யாழ் முஸ்லிம்கள் மண்ணில் வாழ்கிறார்கள். லண்டனிலும், ஸ்விசிலும், கனடாவிலும் பிள்ளைகளை அனுப்பி விட்டு இவர்கள் இரும்பு பொறுக்கவில்லை. ஆடு பிடிக்கவில்லை. மாறாக தங்கள் குழந்தைகளை பள்ளிகூடம் அனுப்பவே இரும்பு பொருக்குகின்றனர்.

ஒன்று மட்டும் புரியவில்லை. புலிப்பயங்கரவாதிகள் அழிந்ததாலும் தமிழ் பயங்கரவாதம் உயிர் வாழ்கின்றதா? என்பதேஅது.
ABU MASLAMA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக