டிசம்பர் 05, 2011

சாத்தன்களின் இருப்பிடம்
அமெரிக்காவில் நிலவும் வேலை யின்மை குறித்து அந்நாட்டின் தொழி லாளர் துறை அமைச்சகமும்உண்மை களை ஒப்புக்கொள்கிறது. ஏற்கெனவே நீண்ட காலமாக வேலை வாய்ப்புகிடைக்கப்பெறாமல் கொந்தளிக்கும் பட்டாளத்தோடு, கடந்த 6 மாத காலமாக எவ்விதவேலைவாய்ப்பும், சிறு வரு மானமும் கூட இன்றி 57 லட்சம் தொழி லாளர்கள் வறுமையின்கோரப்பிடியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது, தொழிலாளர் துறையின் அறிக்கையில் இருந்துதெரியவந்திருக்கிறது. இந்த அறிக்கையின்படி நவம்பர் மாத இறுதியில் வேலையில்லாதவர் களின்எண்ணிக்கை மொத்தம் 133 லட்சம் ஆகும். இவர்களில் பகுதி நேரம் மட்டுமே வேலைகிடைத்தவர்கள், 2 மணிநேரம் மட்டுமே வேலை கிடைத்த வர்கள், வாரத்தில் 1 நாள் அல்லது 2 நாள்மட்டுமே வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கை அடங்காது. இவர்க ளையும்சேர்த்துக்கொண்டால், அமெ ரிக்காவில் இன்றைய நிலையில் முழு நேர வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறாதவர்களின் எண்ணிக்கை 244 லட்சம் ஆகும்.

இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த உழைப்புச்சக்தியில் 15.6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கத்தொழிலாளர் துறையே இந்த தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும், நாள்தோறும்வேலைவாய்ப் புகளை உருவாக்கிக் கொண்டிருப்பதாக கதையளக்கும் ஜனாதிபதி ஒபாமா, கடந்தஒரு மாத காலத்தில் தனது அரசு உருவாக்கியிருப்பதாகக் கூறும் ஒரு லட்சத்து 20 ஆயிரம்வேலைவாய்ப்பு களும் தனியார் நிறுவனங்கள் அளித்த சிறு சிறு வேலைகளே; வெறும் அத்தக் கூலிவேலைகளே.

பொதுத்துறையில் பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பு எதுவும் உருவாக்கப் படவில்லை. மாறாக,மாநகர சமூக சேவைத்திட்டங்கள், சுகாதாரத்துறை, கல்வித்துறை, நூலகங்கள், தீயணைப்புத் துறைஉள்ளிட்ட பல துறைகளிலிருந்து கடந்த ஓராண்டில் 2,78,000 ஊழியர்கள் வேலை பறிக்கப்பட்டுவெளியில் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

வேலைவாய்ப்புகள் வெகு வேகமாக வீழ்ச்சியடைந்து கொண்டி ருப்பது மட்டுமல்ல; ஏற்கெனவேவேலையில் இருப்பவர்களின் கூலியும் தொடர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்குகிடைக்க வேண்டிய பணப்பலன்கள், சலுகைகள் சரமாரியாக பறிக் கப்பட்டு வருகின்றன. வேலைநேரமும் வீழ்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் அமெரிக்கத் தொழிலாளர்கள் பெறுகிறவாராந்திர கூலியில் 69 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் கடந்தஓராண்டு காலத்தில் சராசரியாக கூலி உயர்வு என்பது வெறும் 1.8 சதவீதம் அளவிற்கேஅதிகரித்துள்ளது. மாறாக, உணவுப்பொருட்களின் விலைகளும் இதர பொருட்களின் விலை களும்மிகக்கடுமையாக அதிகரித்திருப்பதால் ஒட்டுமொத்த பண வீக்கம் 3.6 சதவீதம் அளவிற்குஅதிகரித்துள்ளது. விலைவாசி அதிக ரித்துள்ளது; கூலி குறைந்துள்ளது; மொத்தத்தில் அமெரிக்கஉழைப் பாளி மக்களின் உழைப்பு மிகக்கடுமையான முறையில் சுரண்டப் பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக ஒபாமாவின் வெள்ளை மாளிகை நாள்தோறும் புதிய, புதிய அறிக்கைகளைவெளியிட்டுக் கொண்டிருக்கும் நேரத் தில், வாஷிங்டனை மையமாகக் கொண்டு செயல்படும்பொருளா தாரக் கொள்கை கல்வி நிறுவனம் ஒபாமா நிர்வாகத்திற்கு அபாயச் சங்கினைஊதியிருக்கிறது. இன்றைக்குள்ள இதே நிலைமை தொடரு மானால், பொருளாதார நெருக்கடிக்குமுந்தைய நிலையை மீண்டும் எட்டுவதற்கு இன்னும் 20 ஆண்டுகாலம் அமெரிக்கா காத்திருக்கநேரிடும் என்றும், அது வரையில் அமெரிக்க மக்கள் மிகமிகக் கடு மையான நெருக்கடியைஅனுபவிக்க நேரிடும் என்றும் இந்நிறு வனத்தின் அறிக்கை எச்சரிக்கிறது.

2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கப் பொருளாதார நெருக் கடி துவங்கிய காலகட்டம் முதல்இன்றுவரையில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப சுமார் 110 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகளை உடனடியாக உருவாக்கியாக வேண்டும்; அதன் பின்னர் ஒவ் வொரு மாதமும் 2 லட்சத்து 75ஆயிரம் வேலைவாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கியாக வேண்டும் என்றும் அந்த அறிக்கைகூறுகிறது.

ஆனால் இதற்கான நடவடிக்கைகள் எதையும் ஒபாமா அரசு மேற்கொள்வதாக தெரியவில்லை.மறுபுறத்தில் தனியார் பெரு முதலாளிகளின் கம்பெனிகளுக்கு அரசுப்பணத்திலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை தொடர்ந்து வாரி வழங்குகிறது இந்த அரசு. இதனால் தவிர்க்கவேமுடியாதபடி, மீண்டும் கொந்தளித்து எழுகிறது அமெரிக்க தொழிலாளி வர்க்கம்.

பொருளாதார நெருக்கடியின் அடிஆழத்தை நோக்கி வேகமாக பயணித்துக்கொண்டிருக்கும்அமெரிக்க முதலாளித்துவம் மீண்டு எழுகிற வாய்ப்பு கண்ணுக்கு எட்டாத தூரத்திலேயேஇருக்கிறது. அந்நாட்டில் பொருளாதார சுழற்சியை சரி செய்ய வேண்டுமானால் லட்சக்கணக்கானவேலைவாய்ப்புகளை உருவாக்கியே தீரவேண்டு மென்பது விதி. ஆனால் அது நடக்கவில்லைஎன்பதை, டிசம்பர் மாத துவக்கத்தில் வெளியிடப்பட்ட நவம்பர் மாத வேலையின்மை அறிக்கைபளிச்செனக் காட்டுகிறது. 

வேலைவாய்ப்பை பெருக்கி வருவதாக ஜனாதிபதி ஒபாமா திருப்தி தெரிவித்தாலும் உண்மைநிலைமை மேலும் மேலும் மோசமடைந்து கொண்டே செல்கிறது என்பதை அமெரிக்கமுதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

கடந்த மாதத்தில் நாடு முழுவதிலும் மொத்தம் 1 லட்சத்து 20 ஆயி ரம் வேலைவாய்ப்புகள்உருவாக்கப்பட்டதாக அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை, முந்தைய செப்டம்பர்,அக் டோபர் மாதங்களில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண் ணிக்கையைவிட மிகமிகக்குறைவு என்பதையும் அது ஒப்புக் கொண்டிருக்கிறது. 

வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டவர்களும், ஏற்கெனவே வேலை யிலிருந்துதூக்கியெறியப்பட்டவர்களும் பல மாத காலமாக வேலை தேடித்தேடிச் சோர்ந்துபோய்போராட்டக்களத்தில் குதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்யாத இளைஞர்களின் எண்ணிக்கை 66 லட்சத்தை தாண்டும் என்ற புதிய மதிப்பீடும் வெளியாகியுள்ளது.மொத்தத்தில் அமெரிக்காவில் கடந்த வாரம் வரையில் சுமார் 140 லட்சம் பேர் வேலைவாய்ப்புஏதும் இல்லாத வர்களாக இருக்கிறார்கள். இது கடந்த ஆண்டைவிட 7 லட்சம் அதிகம் என்பதுகுறிப்பிடத்தக்கது. 

ஆக, மாதந்தோறும் லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டிருப்பதாக ஒபாமாஅரசு திருப்திப்பட்டுக் கொண்டாலும் உண்மையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மட்டுமின்றிஏற்கெனவே வேலையில் இருந்து நெருக்கடியின் காரணமாக வெளியேற்றப்பட்ட லட்சக்கணக்கானமக்களுக்கும் எந்த ஒரு வேலைவாய்ப்பையும் உருவாக்குகிற நிலையில் இந்த அரசு இல்லைஎன்பதே உண்மை. 

இந்த உண்மை, அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் தீவிரப்படுத்தி யுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக