ருமேனியாவில் சிஐஏவின் ரகசியச்சிறை! அம்பலமானது அமெரிக்காவின் மோசடிவேலை
தங்களுக்கு வேண்டாதவர்களை சித்ரவதை செய்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளில்அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ ரகசியச் சிறைகளை அமைத்திருக்கிறது என்ற செய்திஏற்கெனவே வெளியானது.இந்நிலையில் ருமேனியாவில் ஒரு கட்டிடத்தில் இந்த சிறை இயங்கிவந்தது என்று அம்பலமாகியிருக்கிறது. ஊடக நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் மற்றும்ஜெர்மன் தொலைக்காட்சி ஆகிய இரண்டும் இணைந்து நடத்திய கூட்டு புலனாய்வில்தான் இதுதெரிய வந்தது. இந்தச் சிறையில்தான் காலித் ஷேக் முகம்மது உள்ளிட்ட பலரும் அடைக்கப்பட்டுசித்ரவதை செய்யப்பட்டனர். சிஐஏவின் முன்னாள் அதிகாரிகள் சிலரின் உதவியால் இந்த சிறைஇயங்கி வந்த கட்டிடத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
ருமேனியாவின் தலைநகர் புகாரெஸ்டுக்கு சற்று வெளியே அமைந்துள்ள இந்தக்கட்டிடம் ஓர்னிஸ்என்ற நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ அமைப்புகளின்ரகசியத் தகவல்களை பாதுகாக்கும் வேலையை இந்த நிறுவனம் செய்து வருகிறது. ருமேனியாவில்இத்தகைய ரகசியச் சிறை இருப்பதாக செய்தி வெளியாகி வந்தாலும், எந்த இடத்தில் உள்ளதுஎன்பது வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்தது.
தாய்லாந்து, லிதுவேனியாமற்றும் போலந்து ஆகிய நாடுகளிலும் இதுபோன்ற ரகசியச்சிறைகளைஅமைத்திருந்தது ஏற்கெனவே அம்பலமாகியுள்ளன. 2003 ஆம் ஆண்டில் ருமேனியாவில் உள்ளசிறை அமைக்கப்பட்டது. இதன்பிறகு, போலந்தில் இருந்த ரகசியச்சிறை இழுத்து மூடப்பட்டதாகமுன்னாள் சிஐஏ அதிகாரியொருவர் ஜெர்மனி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக