டிசம்பர் 04, 2011

சுற்றுச்சூழல்

சுற்று சூழல்  மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் 
கூறும் வழி என்ன ?
பதில்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
சுற்று சூழல் என்றால் என்ன?
மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு 5 வகையான ஏற்பாடுகளை இறைவன் வகுத்துள்ளான். அவைகளாவன:

1)      நிலம்
2)      நீர்
3)      காற்று
4)      ஆகாயம்
5)      நெருப்பு

இறைவன் வகுத்து வைத்துள்ள இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுதான் வளம் வர இயலுமே தவிர இந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் நாசத்தைத்தான் அதிகம் அடையும்.
படைப்பால் நீங்கள் மிகக் கடினமா(னவர்களா?) அல்லது வானமா?அதனை அவன் படைத்தான்-அ(வ்வானத்)தினுடைய முகட்டை அவன் உயர்த்தினான்; பின்னர் அதனை ஒழுங்குபடுத்தினான். அதனுடைய இரவை அவன் இருளாக்கினான். அதனுடைய பகலையும் (சூரியவெளிச்சத்தைக் கொண்டு) வெளியாக்கினான்; பூமியை அதற்கு பின் அவன் விரித்தான். அதிலிருந்து அதன் தண்ணிரையும் அதன் (புற்பூண்டு,தானியங்கள் முதலிய) மேய்ச்சல் பொருளையும் வெளிப்படுத்தினான். மலைகளையும் அவன் நிலைநாட்டினான். உங்களுக்கும், உங்களுடைய கால்நடைகளுக்கும் சுகமளிக்கும் பொருளாக (இவற்றைஅமைத்தான்).  (அல்குர்ஆன்: 79:27:33)

மேற்கண்ட இந்த அரிய செய்திகளை எடுத்துரைக்கும் இறைவனாகிய அல்லாஹ் இந்த புவியின் நிலப்பரப்பில் நிகழும் அரிய செய்திகளை அழகாக வர்ணிக்கிறான் அதையும் சற்று அலசுவோம்.

அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்;அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்;. அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம். பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக – ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.
(அல்குர்ஆன் 06:99)

சுற்றுச் சுழல் மாசுபாடு என்றால் என்ன?
  • தொழிற்சாலை கழிவுகள்
  • ரசாயண திரவம் மற்றும் கதிரியக்க கசிவுகள்
  • வாகனங்களின் இறைச்சல்
  • வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை
  • மனிதன் புகைக்கும் பீடி, சிகரேட், கஞ்சா
  • பிளாஷ்டிக் மற்றம் பாலித்தீன் பயன்பாடுகள்
  • மலைகளையும், காடுகளையும் அழித்து மரம் வெட்டுதல்
  • மனித கழிவுகளை நேராக பருகும் நீர்நிலைகளில் விடுதல்
  • இரசாயண உரம், புச்சிக்கொள்ளி மருந்துகளின் பயன்பாடு

நிலம் மாசுபடுததல்
தொழிற்சாலை கழிவுகளும், ரசாயண திரவங்களும் அசுத்தமுள்ள நிலையிலும் விஷத்தன்மை கொண்ட நிலையிலும் மண்ணில் செலுத்தப்படுவதால் மண்ணின் மகத்துவம் கெட்டுவிடுகிறது. மேலும் பிளாஷ்டிக் பொருட்களும் பாலித்தீன் பைகளும் மண்ணில் புதையுண்டு போவதால் விளைநிலங்கள் மாசுபட்டு வீரியமிக்க கனிகளையும், செடி கொடிகளையும் தாவரங்களையும் வளரவிடமால் தடுக்கிறது.

நீர் மாசுபடுதல்
மனிதனின் அத்தியாவசிய நீர் தேவையை கிணறுகளும், ஏரி, குளம், குட்டைகளும் தற்போது போரிங் பைப்புகளும் நிவர்த்தி செய்கின்றன. ஆனால் இந்த அரிய பொக்கிஷத்தை கூட தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் அதிகமான அளவில் நீர்நிலைகளில் நேரடியாக கலப்பதால் நீர் மாசுபடுபவதுடன் அந்த நீரை பருகுவதால் குடல் நோய்களும் மனித பயன்பாட்டிற்கு உபயோகிப்பதால் தோல் நோய்களும் ஏற்படுகிறது. இவை மனிதனுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

காற்று மாசுபடுதல்
சுவாசிக்கும் காற்றில் மனிதன் ரசாயன கதிரியக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியும், தொழிற்சாலைகளின் கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது. இதுமட்டுமல்லாமல் மனிதன்  பீடி, சிகரெட், கஞ்சா போன்ற கொடிய தற்கொலைக்கு ஈடான விஷத்தை உள்ளே இழுத்து அதை வெளியிடுவதால் அருகில் இருப்பவர்களுக்க மூச்சுத்திணரல், சுவாச உறுப்புக்களில் கோளாறுகள் மற்றும் கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கிக்கொள்கிறான்.

ஆகாயம் மாசுபடுதல்
இன்றைய நவீன யுகத்தில் சாட்டிலைட்டுகள், வின் கேமிராக்கள் என்று அதிக அளவிலான சமிங்கை தரும் பொருட்கள் அவ்வப்போது ஏவப்படுகிறது இவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் செயலிழந்துவிடுகின்றன மேலும் இந்த வின்கலங்கள் வானவெளியில் அப்படியே அநாதைகயாக மிதந்து வருவதால் புதிய செயற்கை கோள்களுக்கு இடையுறு ஏற்படுத்துவதுடன் வான் மண்டலத்தில் குப்பைகளாக சேர்ந்து சுற்ற ஆரம்பிக்கின்றன. இந்த வின்வெளி குப்பைகள் புவியின் ஈர்ப்பு மையத்தை தொடும்போது அவை நிலத்தை நோக்கி ரசாயண குண்டுகள் போல வேகமாக வந்து வெடிக்கின்றன. இவைகளின் வெடிப்புகளால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அங்கு கதிரியக்கம் வெளிப்பட்டு மக்களின் உடலில் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகின்றன.

நெருப்பு மாசுபடுதல் (உலக வெப்பமயமாதல்)
நெருப்பு மாசுபடுதலை இங்கு நாம் தட்ப வெப்ப நிலை மாசுபடுதலை மையமாக வைத்து கூற இயலும் அதாவது புவி நிலப்பரப்பில் நிலம், நீர், காற்று ஆகியன மாசுபடுவதால் இந்த புவியின் தட்பவெப்ப சீதோஸ்ணத்தில் குளருபடியை ஏற்படுத்தி அண்டார்டிகா போன்ற பனிப்பிரதேசங்களை உருகச் செய்கிறது இதனால் கடல் சீற்றங்கள் எற்படுவது மட்டுமின்றி சிறிய குட்டித் தீவுகள் கடலில் மூழ்கிவிடுகின்றன. மேலும் உலக வெப்ப மயமாதல் போன்ற பேரழிவுகளுக்கு இந்த நெருப்பு மாசுபடுதலும் ஒருவகையில் காரணமாக அமைந்துவிடுகிறது.

சுற்று சூழல்  மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன ?

இன்னும் அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும் அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும் (இதுவரையில்) நீங்கள் மித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசாக ஆக்கிவிட்டான், மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் (அல்குர்ஆன் 33:27)

இந்த வசனத்தை சற்று உண்ணிப்பாக ஆராய்ந்து பாருங்கள் அல்லாஹ் தன் படைப்புகளை நமக்கு அணுபவிக்க வலியுறுத் துவதோடு நிற்காமல் அவைகள் நமக்கு வாரிசுகள் என்றும் கூறுகிறான்.

சிந்தித்துப்பாருங்கள் நம்முடைய பெற்றோருக்கு நாம் வாரிசுகளாக இருக்கும் பட்சத்தில் நம் பெற்றோரை நாமே அழிக்க முற்படுவோமா அப்படித்தானே அல்லாஹ்வின் படைப்புகளான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு மற்றும் இன்னபிற படைப்புகளுக்கு நாம் வாரிசுகாளக நியமிக்கப்பட்டிருக்கிறோம் இப்படிப்பட்ட அரிய பொக்கிஷங்களை நாமே முன்வந்து அழிக்கிறோம்.

வாருங்கள் நபிமொழிகளை அலசுவோம்
சாபத்திற்குரிய இரு காரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, ஸஹாபாக்கள் “அவ்விரண்டும் எவை?” என வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) மனிதர்கள் (நடமாடும்) பாதையில் மலம் கழிப்பதும், மனிதர்களுக்கு நிழல் தரும் இடங்களில் மலம் கழிப்பதுமாகும்.” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபுஹுரைரா(ரழி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபுதாவூது

உங்களில் எவரும் தேங்கிக் கிடக்கும் நீரில் சிறுநீர் கழித்து விட்டுப் பிறகு அதில் குளிக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி­)   நூல்: முஸ்லி­ம் 475

இந்த நபிமொழியில் மனிதர்கள் நடமாடும் பாதையிலும், நிழல் தரும் இடங்களில் மலஜலம் கழிப்பதையும் பற்றி எடுத்துரைக்கப்பட்டு வண்மையாக எச்சரிக்கை விடப்பட்டள்ளது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் மற்றும் மலஜலங் களுக்கே இந்த அளவுக்கு எச்சரிக்கை இருக்கும்போது தொழிற் சாலைக்கழிவுகளுக்கும் இன்ன பிற கழிவுகளுக்கும் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை இந்த மனிதவர்க்கம் சிந்திக்க வேண்டும்.

…………..நாமே கல்வியை கற்றும் கொடுத்தோம். அல் குர்ஆன் (அல்குர்ஆன் 18: 65)
ஒரு மனிதனுக்கு கல்வியை கொடுப்பதும் அல்லாஹ்வின் அதிகாரமாகும். கல்வியறிவு பெற்ற மனிதன் தொழிற்சாலைகளை உருவாக்க கற்றுக்கொள்கிறான் ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி சிந்திக்க முற்படுவதில்லை. ஒருவேளை மனிதன் இந்த கல்வியைக் கொண்டு சிந்தித்தால் அவன் வெற்றி பெறுவது எளிது மாறாக கற்ற கல்வியால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை சிந்திக்காமல் இருப்பானாகில் நம்முடைய சந்ததிகளுக்குத்தான் அது கேடாக அமைந்துவிடும்! நம்முடைய சந்ததியினரின் எதிர்கால கனவுகள் நம் கைகளில்தான் உள்ளது எனவே நாம்தான் சிந்தித்து செயல்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக