டிசம்பர் 07, 2011

நாடாளுமன்றத்தை மீட்போம்  அலுவலகக் கட்டிடங்களை ஆக்கிரமித்தனர் மக்கள்
கைப்பற்றுவோம் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தை முதலாளித்துவத்தின்பிடியிலிருந்து மீட்போம் என்ற அறைகூவலுடன் வாஷிங்டனில் உள்ள பல்வேறு நாடாளுமன்றஅலுவலகக் கட்டிடங்களை மக்கள் முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க சிகாகோ,பாஸ்டன், செயின்ட் லூயிஸ், புளோரிடா, கன்சாஸ், விஸ்கோன்சின் மற்றும் பல்வேறுநகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் போராட்டக்காரர்கள் வாஷிங்டன் வந்திருந்தனர்.நாடாளுமன்றக் கட்டிடங்கள் பலவற்றில் இவர்கள் புகுந்து உள்ளே அமர்ந்து முழக்கங்களைஎழுப்பத் துவங்கினர். பெரும் நிறுவனங்களுக்காக வேலை செய்வதை விட்டுவிட்டு மக்களுக்காகநாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியபோராட்டக்காரர்கள், எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவே நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்.உங்கள் வேலையைப் பாருங்கள் என்று முழக்கமிட்டனர். முதலாளித்துவக் கொள்கைகள் நாட்டின்பெரும்பான்மையான மக்களைத் துயரத்திலேயே தள்ளுகிறது என்ற கருத்தைபோராட்டக்காரர்களை வாழ்த்திப் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.

ஓஹியோ மாகாணத்திலிருந்து
62 வயதுக்காரர் ஒருவர் இப்போராட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.
 அவரது தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர் ஜான் போனெர் என்பவராவார். இவர் குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவர்.வேலைகளை உருவாக்கும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்ற வேண்டும்.நாட்டின் பெரும் பணக்காரர்கள் மீதான வரிகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.தனது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரைச் சந்தித்து இதை வலியுறுத்தவே வந்ததாகவும் அவர்கூறினார். இத்தகைய போராட்டங்கள் மாகாண நிர்வாக அலுவலகங்களிலும் விரைவில்நடைபெறும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக