டிசம்பர் 04, 2011

இஸ்ரேல் மீது மரியாதை செலுத்தாமைக்கான 10 காரணங்கள்.

 


அமெரிக்க அரசியல் அரங்கங்களில் இஸ்ரேலின் மீது அனுதாப அலைகள் வீசினாலும் பெரும்பாலான அமெரிக்க மக்களிடையே இஸ்ரேளின் மீதும் அதன் கொலைகார செயற்பாடுகள் மீதும் வெறுப்பே காணப்படுகிறது.அதற்கான  பல ஆயிரம் காரணங்களில் முக்கியமான பத்து காரணங்கள்.

1.லிபர்ட்டி போர் கப்பல் தாக்கப்பட்டமை.
  •  1967 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அமெரிக்காவின் "லிபர்ட்டி" போர் கப்பலுக்கு இஸ்ரேலின் விமான மற்றும் கடட் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.இந்த எதிர்பாராத கோரமான தாக்குதலில் அமெரிக்காவின் 34 படையினர் கொல்லப்பட்டதுடன் 174 பேர் காயமடைந்தனர்.  
தாக்குதலில் சேதமடைந்த லிபர்ட்டி

தாக்குதல் பட்டப் பகலிலேயே இடம்பெற்றது,அதுவும் சர்வதேச கடற்பரப்பிலே நண்பகல் 2 மணிக்கு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கபட புத்தியுள்ள இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு காரணம் அமெரிக்காவையும் எகிப்தையும் மூட்டி விடுவதேயாகும்.ஏனெனில் அப்போது அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்தம் நடந்து கொண்டிந்தது.

2.ரேச்சல் கோரி படுகொலை.
  •  2003 மார்ச் 16 திகதி இடம்பெற்ற முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இஸ்ரேலின் படுகொலை.அமெரிக்காவின் சமாதான செயற்பாட்டாளர் சகோதரி ரேச்சல் கோரி (Rachel Corrie) இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக செயலில் போராடியவர்.அவர் காஸா பகுதியில் இஸ்ரேலின் பாதுகாப்பு படையினர் பலஸ்தீன மக்களின் வீடுகளை தரைமட்டமாக்கும் போது BULLDOZER முன் வந்து எதிர்ப்பை தெரிவித்த சந்தர்ப்பத்தில் கொடிய மனம் கொண்ட அந்த BULLDOZER சாரதி எந்த விதமான ஈவுஇரக்கமும் இன்றி அவரின் உடம்புக்கு மேலால் BULLDOZER ஐ ஏற்றிச் சென்று படுகொலை செய்தான்.

  
IDF இனால் கொல்லப்பட்ட அவரின் உடல்.

3.புர்கான் டோர்கன் படுகொலை.
  •  2010 மே மாதம் துருக்கியின் மாவிமர்மாரா உதவிக் கப்பலின் மீது இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் பல நாட்டைச் சென்ற சமாதான செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்,அதில் அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது சமாதான செயற்பாட்டாளர் புர்கான் டோர்கன்(FURKAN DORGAN) கொல்லப்பட்டமை.
புர்கான் டோர்கன் 

 4.காங்கிரஸ் பெண் சின்தியா மக்கினி கடத்தல்.

  • 2009 இல் முன்னால் காங்கிரஸ் பெண் சின்தியா மக்கினி இஸ்ரேலிய  பாதுகாப்பு படையினரால் (IDF) கடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவருடன் சேர்த்து 20 க்கும் மேற்பட்ட சமாதான செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.1500 க்கும் மேட்பட்டவர்களுக்கு மரணத்தையும் 10000 க்கும் மேட்பட்டவர்களுக்கு காயத்தையும் ஏற்படுத்திய இஸ்ரேலின் காஸா மீதான 2008 டிசம்பர் தாக்குதலில் சின்னாபின்னமாகிப்போன காஸா மக்களுக்கு தேவையானா மருந்துகள்,சீமெந்து,ஒலிவ் மரங்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் என்பவற்றை கப்பலில் காஸாவுக்கு கொண்டு போகும் போதே அவர் கைது செய்யப்பட்டார்.இஸ்ரேலின் இந்த தாக்குதலில் 50000 வீடுகள்,800 தொழிற்சாலைகள்,200 பாடசாலைகள்,39 பள்ளிவாசல்கள் மற்றும் இரண்டு தேவாலயங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.

சின்தியா மக்கீனி 
5. ஐ.நா.வில் ஆகக் கூடிய எதிர்ப்பு ஆனால்...

  • ஐக்கிய நாடுகள் சபை 1945 இல் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த பின் பொதுச் சபையில் கொண்டு வந்த 700 பொதுச் சபை தீர்மானங்களில் 450 தீர்மானங்கள் இஸ்ரேலுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து நிறைவேற்றப்பட்டவையே ஆகும்.இது வரை ஐ.நா.வில் ஒரு முஸ்லிம்  நாட்டுக்கு எதிராக பொதுச் சபையில் தீர்மானகள் நிறைவேற்றப்பட்டு இல்லை.

6. அமெரிக்காவின் கோரிக்கைக்கு எதிர்ப்பு.

  • மேற்குக் கரையில் இஸ்ரேல் சட்டவிரோத குடிய்ற்றங்களை நிறுத்தவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

7.ஓரினச்சேர்க்கையாளர்களின் சொர்க்க பூமி.

  • மத்திய கிழக்கில் ஓரினச்சேர்க்கை குற்றமாக கருதப்படாமல் ஊக்குவிக்கப்பட்டு வருடாவருடம் பகிரங்கமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் ஒரே ஒரு நாடு இஸ்ரேலாகும்.உலகில் இஸ்ரேலிலே ஒரு விலைமாதுக்கு தனி நபர் நுகர்வு அதிகம்.மேலும் இதன் காரணமாக பாலுறவு சம்பந்தப்பட்ட நோய்கள்,கருக்கலைப்பு என்பன இஸ்ரேலில் உச்சத்தை தொட்டுள்ளன.ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை முறை தவறிப் பிறந்தவர் என்றும் மர்யம்(அலை) அவர்களை விபச்சாரி என்றும் இஸ்ரேலிய மீடியாக்கள் சித்தரிக்கின்றன(அஸ்தஹ்பிருல்லாஹ்).இங்கு வருடா வருடம் இடம்பெறும் ஓரினச்சேர்க்கையாளர்களின் ஒன்று கூடலில் பகிரங்கமாக அனைத்து விதமான அனாச்சாரங்களும் இடம்பெறுகின்றன.இஸ்ரேலுக்கு உலகம் முழுதும் ஆதரவு திரட்டி திரியும் அமெரிக்காவின் CHRISTIAN UNITED FOR ISRAEL என்ற அமைப்புக்கு ஏன் இவை புலப்படுவதில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
2009 இல் இடம்பெற்ற GAY PRIDE PARADE ஊர்வலத்தில்

8.அமெரிக்காவின் இராணுவ ரகசியங்கள் விற்கப்பட்டமை.

  • அமெரிக்காவும் இஸ்ரேலும் நீண்ட நாள் நண்பர்களாக இருந்தாலும் இஸ்ரேல் முழு உலகை எப்படி எந்நேரமும் கவனித்துக் கொண்டு இருக்குமோ அதுபோல் அமெரிக்காவையும் கண்காணித்துக் கொண்டே இருக்கும்.இப்படி கண்காணிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட பல தகவல்களை இஸ்ரேல் அமெரிக்காவின்  எதிரிகளான ரஷ்யா மற்றும் சீனாவுக்கு வழங்கிய சம்பவம் அமெரிக்க மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த நம்பிக்கை துரோகத்தை செய்தவன்  நம்பிக்கை துரோகத்திலே உருவான நாட்டின் குடிமகனான ஜோனதன் போலார்ட் என்பவனாவான்.
ஜோனதன் போலார்ட்

9.பலஸ்தீன மக்கள் மீதான அடக்குமுறை.

  • இஸ்ரேலானது பலஸ்தீன மக்கள் மீது பாரிய அளவில் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து அவர்களை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அடக்கி வருகிறது.இந்த அடக்கு முறை மூலம் ஆட்கடத்தல்,முற்றுகை,நாடு இரவில் வீடுகளை சோதனை செய்தல் ,எந்தவிதமான காரணமும் இன்றி கைது செத்தல் என்பன அடங்கும்.சட்விரோத குடியேற்றவாசிகள் தொடந்தும் பலஸ்தீன மக்களின் ஒலிவ் மர தோட்டங்களுக்கு செய்யும் அநியாயம்  தொடர்ந்து கொண்டே செல்கிறது.



10.உடல் உருப்பு திருட்டு.


  • இந்த விடயம் உலக  மீடியாக்களில் பரவலாக பேசப்பட்ட ஒரு மிகமுக்கியமான விடயமாகும்.இஸ்ரேலில் சோதனைச் சாவடிகளிலும் நாடு இரவு வீச்ச சோதனைகளிலும் கைது செய்யப்படும் பல பேரின் உடல் உறுப்புக்கள்  திருடப்பட்டு வருகின்றது.

இந்த ஆக்கத்தை வாசித்தமைக்கு நன்றி.தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்  திருத்திக்கொள்கிறேன்.
ஜசாகல்லாஹு ஹேர்.

உங்கள் நண்பன்
எம்.ஹிமாஸ் நிலார்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக