விமான தளத்தை காலி செய்கிறது அமெரிக்கா
நேட்டோ படையினர் நடத்திய தாக் குதலில் பாகி ஸ்தான் இராணு வத்தினர் 24 பேர் பலியா னார்கள். இதனையடுத்து தங்களுக்கு சொந்தமான ஷம்சி விமான தளத்தை 15 நாளில் காலி செய்ய அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதியாக கூறியது. மேலும், விமான தளத்திற்கு செல்லும் அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அடைத்தது. இதனை தொடர்ந்து அமெரிக்கா ஷம்சி விமான தளத்தை காலி செய்ய ஆரம்பித்துள்ளது. இதற்காக அமெரிக்காவுக்கு சொந்தமான விமானம் ஒன்று பாகிஸ்தான் வந்துள்ளது. விமான தளத்தில் பணிபுரிந்த அமெரிக்கர்கள் பாதுகாப்புடன் விமானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். எப்.ஐ.ஏ. அதிகாரிகளும் விமான தளத்தில் இருந்தனர். விமான தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக