அமெரிக்க சிறப்பு படையினர் சிரிய எல்லையில் தரையிறக்கம்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாய்களான சிறப்பு படையினர் (US Special Forces ) சிரிய தேசத்தின் எல்லையில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஈராக்கில் இருந்து அவசரமாக கொண்டுவரப்பட்டு ஜோர்தான் மற்றும் சிரிய எல்லையில் இவர்கள் தரையைிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்படி செய்தியை FBI யின் முன்னாள் மொழி பெயர்ப்பாளர் சிபல் எட்மன்ட்ஸ் (Sibel Edmonds) தெரிவித்துள்ளார். இதனை இஸ்ரேலிய உளவுத்தரப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜோர்தானிய எல்லைப்புர கிராமமான அல் மஹ்ராக்கிற்கு அருகில் அமெரிக்க துருப்பினர் திரண்டுள்ளனர். அல் மஹ்ராப்பில் உள்ள உள்நாட்டு விமானத்தளத்தை (King Hussein Air Base of al-Mafraq) தனது கட்டுப்பாட்டில் ஜோர்தானிய அரச அநுமதியுடன் அமெரிக்கா கைவசப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய உளவமைப்பான (DebkaFile) தமது இரகசிய செய்தியில் மேற்படி அமெரிக்க படையினரின் ஒன்று குவிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இப்படையினர் ஈராக்கின் Ain al-Assad air base படைத்தளத்தில் இருந்து அமெரிக்க பாரிய ஹேர்கூலிஸ் விமானங்கள் மூலமாக ஜோர்தானில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிரிய எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஜோர்தானிய எல்லை கிராமங்களான Albaej, Zubaydiah and al-Nahdah போன்றவற்றிலும் குழுக்களாக அமெரிக்க படையினர் நிழல் போல் குவிக்கப்பட்டுள்ளனர். நேட்டோவின் மனிதாபிமான தலையீடு (“humanitarian intervention”) எனும் போலி பெயரில் மீண்டும் சிரியாவில் உள்நுழைய அமெரிக்கா முயல்கிறது.
5000 இற்கும் மேற்பட்ட சிரிய பொது மக்களின் இழப்பை காரணம் காட்டி சிரியாவினுள் உள் நுழைய முற்பட்டுள்ள சிலுவை தேசங்களும் அமெரிக்காவும் “லிபிய புரட்சி படையினர்” அல்லது “லிபிய சுதந்திர போராளிகள்” எனப்படும் அமெரிக்காவின் கூலிப்படையினரை ஆயிரக்கணக்கில் சிரிய எல்லையினுள் ஏற்கனவே ஊடுருவ வைத்துள்ள நிலையில் அமெரிக்கா சிரியா மீது கைவைக்க.
அமெரிக்காவின் 3 சண்டை கப்பல்கள் மத்தியதரைக் கடல் ஊடாக சிரிய கடற் பரப்பின் அண்மையில் சர்வதேச கடல் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களிற்கு முன்பு தான் ரஷ்யா தனது போர் கப்பலை சிரிய எல்லையினுள் செலுத்தியிருந்தது. இஸ்ரேலுடன் யுத்தம் புரிந்த ஒவ்வொரு நாடாக அமெரிக்கா கபளீகரம் செய்து வரும் வரிசையில் சிரியாவுடனாண போர் ஒரு முக்கிய விடயமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக