எல்லை மீறியது அமெரிக்கக் கப்பல்தான்! சாவேஸ் உறுதி
கடந்த மாதத்தில் வெனிசுலா கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது அமெரிக்கப்போர்க்கப்பல்தான் என்று வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.நவம்பர் 6 ஆம் தேதியன்று வெனிசுலாவின் கடற்பகுதிக்குள் நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று நுழைந்தது.அது எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதை அப்போது உறுதிப்படுத்த முடியவில்லை. அந்நிலையில்,வெனிசுலாவின் கடற்படையினர் அக்கப்பலைத் தங்கள் எல்லையிலிருந்து விரட்டியடித்தனர்.இதுபோன்ற சமயங்களில் எப்போதும் அறிக்கை வெளியிடும் அமெரிக்கா இம்முறை எதுவும்பேசவில்லை. அத்துமீறல் பற்றி சம்பவம் நடந்தபோது பேசிய வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோசாவேஸ், பேரரசுகள் அத்துமீறலை மேற்கொள்கின்றன. செயற்கைக்கோள்கள் மூலமாகவும் உளவுபார்த்து இப்பகுதியில் மூக்கை நுழைக்கின்றன என்று எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல்குற்றம் சாட்டினார். அதன்பிறகு விரிவான விசாரணையை வெனிசுலா கடற்படை மேற்கொண்டது.
அந்த விசாரணையின் அடிப்படையில் வெனிசுலாவின் கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாகப்புகுந்தது அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பல்தான் என்று சாவேஸ் குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்துடிசம்பர் 7 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பல்தான் அத்துமீறிஎங்கள் எல்லைக்குள் புகுந்தது என்பதை நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம். சொல்லப்போனால்,அந்தக் கப்பல் யார் தலைமையில் இயக்கப்பட்டது என்பது கூட எங்களுக்குத் தெரியும் என்றுகுறிப்பிட்டார். சாவேசின் அரசியல் எதிரிகளைக் கொண்டு வெனிசுலாவில் குழப்பம் விளைவிக்கஅமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. ஆனால் முதன்முறையாக கடல்வழி அத்துமீறல் என்பதுதற்போது நடந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக