டிசம்பர் 14, 2011

இத்தாலி தொழிலாளர் எழுச்சிக் கோலம்  ேலை நிறுத்தத்துக்கு தயாராகிறார்கள்
இத்தாலி அரசின் மக் கள் விரோதக் கொள்கை களைக் கண்டித்து லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மற் றும் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி ஆகியவற் றிற்குதிட்டமிட்டுள்ளார்கள்.போர்ச்சுக்கல், கிரீஸ், அயர்லாந்து என்று நெருக் கடியில் சிக்கிய ஐரோப்பியநாடுகளின் பட்டியலில் இத் தாலியும் சிக்கி வருகிறது. மற்ற நாடுகளைப் போலவே ஐ.எம்.எப்.மற்றும் ஐரோப் பிய யூனியன் ஆகியவற் றின் பரிந்துரைகளைக் கேட்டு 
நெருக்கடியிலிருந்து மீளமக்கள் மீது சுமையை ஏற்றும் கொள்கைகளை வலதுசாரி அரசு நடை முறைப்படுத்தி வருகிறது.இத்தகைய நடவடிக்கைக ளில் அந்நாட்டின் தொழிலா ளர்கள்தான் அதிகமாகப்பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானவர்களின் வேலை பறிக்கப்பட்டுள் ளது. ஊதியங்களில் கடுமையான வெட்டு செய்யப்பட் டிருக்கிறது. இவ்வளவு செய்த பிறகும், நாடு கடுமையான நிதிநெருக்கடியில் உள்ளது என்று அரசு கூறி வருகிறது. இது மேலும் சுமையை ஏற் றவே என்றதொழிற்சங்கத் தினர் கூறுகின்றனர்.

இத்தாலியின் மூன்று பெரிய தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்து பல போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளன. முதல் கட்டமாக திங்களன்று மூன்று மணி நேரம் வேலை நிறுத்தம்நடந்திருக்கிறது. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற் றுள்ளனர். ஆயிரக்கணக் கானதொழிலாளர்கள் நாட் டின் பல நகரங்களில் பேர ணிகளை நடத்தியிருக்கிறார் கள்.போராட்டங்களில் ஈடு பட வேண்டாம் என்று தொழிற்சங்கத் தலைவர் களை சந்தித்தபோது பிரதமர் மரியோ மான்டி கேட் டுக் கொண்டதை தலைவர் கள் நிராகரித்து விட்டனர். தங்கள்போராட்டம் பற்றிக் கூறிய தொழிற்சங்கத் தலைவர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் தொழிலாளர்கள்மீது கடுமையான சுமையை ஏற்றும் அரசு, பணம் படைத் தவர்களைக் கண்டு கொள்வ தில்லை.ஓய்வூதியத்தில் வெட்டு, ஓய்வூதியம் பெறு வதற்கான வயதை உயர்த் துதல், சம்பளக் குறைப்புபோன்றவற்றிற்கு எதிரா கவே தொழிலாளர்கள் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். தனதுபோக்கை அரசு மாற்றிக் கொள்ளும் வரையில் போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக