டிசம்பர் 12, 2011

ஈராக்கை நோக்கி நகரவிருக்கும் ஸியோனிஸ்ட்கள்



தேசிய பாதுகாப்பு கவுன்சில். இது தான் இஸ்ரேலின் ஒட்டுமொத் இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் இடம். டெல் அவிவில் அமைந்துள்ளது. அதன் இராணுவமாகட்டும், உளவமைப்புக்கள் ஆகட்டும், அரசாங்கமாகட்டும் இதன் முடிவுகளின் அடிப்படையிலேயே இஸ்ரேலில் செயற்படுகின்றன. அது இப்போது தனது வெப்தளத்தில் இஸ்ரேலிய மற்றும் உலகலாவிய யூதர்களிற்கு ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது. ”ஈராக்கில் வர்த்தகத்தில் ஈடுபடுமாறு அது கோரியுள்ளது. மேலும் ஈராக்கில் சுற்றுலா செல்வதற்கான உல்லாச பயணிகளிற்கான ஒழுங்கு ஏற்பாடுகள் பற்றியும் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் பிரகாரம் விண்ணப்பம் செய்த யூதர்களில் இஸ்ரேலில் குடியேற ஆர்வமுடைய யூதர்கள் மட்டும் தெரிவு செய்யப்பட்டு ஈராக் உல்லாச பயணிகள் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். அதே போல் இஸ்ரேலில் முதலீடு செய்த யூதர்களிற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. முழு ஆயுத பயிற்ச்சி பெற்றவர்களிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன், டெல் நிறுவனத்தின் மடிக்கனணிகள் போன்ற பல்வேறு பொருட்களிற்கான திறந்த சந்தை என்ற மகுடத்தில் இந்த யூத வர்த்தக குழுவினர் பக்தாத்தில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு விண்ணப்பித்தவர்களுடனான நேர்முக தேர்வில் இவர்களை எதிர்கொண்டவர்கள் இஸ்ரேலின் சின்பெட் எனும் இரகசிய அமைப்பின் முதுநிலை அதிகாரிகள் ஆவர். “ஈராக்கில் வர்த்தகம்” எனும் சொல்லிற்கு விளக்கம் அங்கு வட்டித்தொழிலில் ஈடுபடுதல் எனும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நலிந்து போன, வேலையற்ற ஈராக்கியர்களிற்கு அமெரிக்கன் இன்போர்மேசன் சென்டர் ஊடாக கடனுதவியளித்தல் எனும் ரீதியில் ஈராக்கில் தங்கி செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் உள்ள மேற்கத்தைய பித்து தலைக்கேறிய சமூகத்தினர் மற்றும் மதச்சார்பற்ற கருத்துடையவர்கள், சோஷலிச சித்தாந்தத்தில் ஈர்ப்புடையவர்கள், பேபர்கள் போன்றவர்களுடன் இலகுவாக நெருங்கி செயற்பட முடியும் எனவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

”வெளிநாடுகளிற்கு வேறு மொஸாட். வெளிநாடுகளில் நீங்கள் தான் மொஸாட்” எனும் கருத்தியலின் அடிப்படையில் ஸியோனிஸ்ட்களை தயார்படுத்துகின்றது யூத தேசம். ஈராக்கில் காணப்படும் “சினைப்பர்” தாக்குதல் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதன் பின்பு இந்த வர்த்தக மற்றும் சுற்றுலா குழுக்கள் ஈராக் நோக்கி பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து ஒரு விடயம் மட்டும் தெளிவாக விளங்கக் கூடியதாக உள்ளது. யூப்ரடீஸ் டைகிரிஸ் நதிக்கரை வரையிலான யூத சாம்ராஜ்யத்திற்கான முன்னோடி நடவடிக்கையா இது என எண்ண வைக்கும் விதமாகவே மேற்படி நடவடிக்கைகள் உள்ளன.                        
 - ABU MALAMA -   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக