புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார் – விக்கிலீக்ஸ் தகவல்
கடைசிக்கட்ட போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எப்படியாவது உயிருடன் கைது செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டிருந்ததாகவும், பிரபாகரன் எங்கும் தப்பித்து போகாமலிருக்க மே 16- 17 இல் இராணுவத்தினர் 24 மணித்தியாலமும் உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், இராணுவத்தினர் பிரபாகரன், பொட்டம்மன் போன்றோரை உயிருடன் பிடிப்பதற்கு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டதாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அதற்காக என்ன விலை கொடுக்கவும் இராணுவத்தினர் தயாராக இருந்துள்ளனர். அதன் காரணமாகவே யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் சரணடையும் பொதுமக்களின் பாதுகாப்பது குறித்து அரசாங்கமோ
பாதுகாப்புப் படைகளோ கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை என்றும் விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரபாகரன் ஒரு காலமும் சரணடைய மாட்டார், அவர் நடைபெற்ற சண்டையில் ஏற்கனவே இறந்திருப்பார் அல்லது வேறெங்காவது தப்பித்து போயிருப்பார் என இராணுவத்தினர் எண்ணிக்கொண்டிருக்கையில், எதிர்பாராத விதமாக பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடைந்ததையிட்டு களத்தில் நின்ற இராணுவத்தினர் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தாகவும் விக்கிலீக்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கடைசிக்கட்ட போரில் களத்தில் நின்ற இராணுவத்தினர், பிரபாகரன் சரணடைந்ததை கேள்வியுற்ற பின்னர், தொடச்சியாக சரணடைந்த விடுதலைப் புலிகளிகளையும், பொதுமக்களையும் கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றதாகவும் விக்கிலீக்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக