ஐ.நா. நிபுணர் குழு இலங்கையில் விசாரணை நடத்தவே முடியாது ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பாகீ மூன் நியமித்த நிபுணர் குழு போர்க் குற்றங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்கவென இலங்கையில் விசாரணை நடத்த ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று திட்டவட்டமாகத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் அவர்கள் வேண்டுமானால் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து செயற்படும் வெளிநாட்டுப் ஊடகவியலாளர்களை ஜனாதிபதி நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசியுள்ளார் அதன்போது . போர் குற்றங்கள் தொடர்பாக தனது ஆலோசனை வழங்கவென ஐ.நா. பொதுச் செயலாளர் நியமித்த மூவர் கொண்ட நிபுணர் குழு இலங்கை வந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விரிவாக ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முடியும் என்று கூறியுள்ளார் இது தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தில் “அவர்கள் இலங்கை வந்து நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியங்களை வழங்குவதை அரசு வரவேற்றிருக்கின்றது. ஆனால் அவர்கள் விசாரணைகள் எதனையும் நடத்த முடியாது. அது மிகத் தெளிவானனது. அத்தகைய எந்த முயற்சியும் நிராகரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்