மார்ச் 22, 2011

பிரதமர் பதவிப் போட்டியால் ஆளும்கட்சிக்குள் முரண்பாடு வரும்! – கொழும்புத் தகவல்கள் தெரிவிப்பு

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள பிரதமர் பதவி மாற்றம் காரணமாக ஆளும் கட்சி இரண்டாக உடைவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக கொழும்புத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி தேர்தலையடுத்து பிரதமர் மற்றும் அமைச்சரவைப் பொறுப்புகளில் மாற்றம் கொண்டுவர ஜனாதிபதி ஏற்கெனவே உத்தேசித்திருந்தார். அதன் போது பிரதமர் பதவி பெரும்பாலும் ராஜபக்­ பரம்பரையைச் சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைக்கப்படும் என்றே தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆயினும் பிரதமர் பதவிக்கான போட்டியில் கடந்த சில வருடங்களாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர்   மட்டுமின்றி   ஜோன் செனவிரத்ன போன்றோரும்  விருப்பம் தெரிவித்திருந்தனர்.
அவ்வாறான நிலையில் பிரதமர் பதவியை ராஜபக்ச குடும்பத்தில் ஒருவருக்கே வழங்க ஜனாதிபதி முடிபெடுத்தால் அதற் கெதிராகப் போர்க்கொடி தூக்க அவர்கள் தயாராகி வருகின்றனர். அதற்காக முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் தலைமையில் அவர்கள் பல கலந்து ரையாடல்களை நடத்தியுள்ளனர்.
ஆயினும் பிரதமர் பதவியை ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயினும் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்­வுக்கோ பிரதமர் பதவி வழங்கப்படமாட்டாது என்றும் அத்தகவல்களிலிருந்து மேலும் அறியக்கிடைத்துள்ளது.      எது எப்படியான போதிலும் ராஜபக்­ச பரம்பரையிலிருந்து ஒருவர் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படும் பட்சத்தில் ஆளும்கட்சிக்குள்  கிளர்ச்சியென்று வெடித்து இரண்டாக உடையும் அபாயம் இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக