மார்ச் 22, 2011

அன்புள்ள ‘எமது மகன்’பராக் ஹுசைன் ஒபாமாவுக்கு.. என விழித்து முஅம்மர் கடாபி கடிதம்!

லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஒபாமாவை ‘எமது மகனே’ என விழித்துள்ளதுடன் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான தனது தீர்மானத்தையும் நியாயப்படுத்தியுள்ளார்.
மேலும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன் மற்றும்
பிரிட்டிஷ் பிரான்ஸ் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ள கடாபி (வயது 68) பாதுகாப்புச் சபையின் தீர்மானம் பயனற்றதெனவும் ஐ.நா சாசனங்களை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் எந்தவொரு தலையீடும் கவலையை உருவாக்குமெனவும் எச்சரித்துள்ளார்.
அத்துடன் லிபியா உங்களுக்கானதல்ல.   அது லிபியர்களுக்கானதெனவும் கடாபி இக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடாபியின் கடிதங்கள் குறித்து விபரங்கள் திரிபோலியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நாட்டின் அரசாங்கப் பேச்சாளரால் வெளியிடப்பட்டது. கிளர்ச்சியாளர்களின் நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கான தீர்மானத்தை நியாயப்படுத்தி கடாபி ஒபாமாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்:
ஆயுதபலம் வாய்ந்த அல் ஹைடா அல்ஜீரியா, மொறிடான்யா மற்றும் மாலி     ஊடாக அமெரிக்க நகரங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது தெரிந்தால் என்னால் அந்த உதாரணத்தைப் பின்பற்ற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடிதத்தின் முகவுரையில் தனிப்பட்ட ரீதியில் ஒபாமாவைக் விளிக்கும் முகமாக எமது மகனான அதிமேதகு பராக் ஹுசைன் ஒபாமாவுக்கு எனக் கடிதத்தை ஆரம்பித்துள்ள கடாபி:
லிபியாவும் அமெரிக்காவும் போர் ஒன்றுக்குள் நுழைந்தாலும் (அது நிகழாமல் கடவுள் காப்பாற்ற வேண்டும்) எப்போதும் நீங்கள் எமது மகனே உமது விம்பம் மாறப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிகொலொஸ் சார்கோஸி, டேவிட் கமரூன் மற்றும் பான் கீ மூன் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் : லிபியா உங்களுக்கானதல்ல. அது லிபியர்களுக்கானது.  பாதுகாப்புச் சபையின் தீர்மானம் பயனற்றது.  ஏனெனில் இது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் சாசனத்துடன் இணங்கவில்லை.
உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.  எமது நாட்டில் நீங்கள் தலையிட்டால் வருத்தமடைய நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு: முகம்மர் கடாபியை ‘மகன் ஒபாமா’    காப்பாற்றுவார அல்லது   ஏவுகணைகள்   எறிந்து கொல்லுவாரா என்பது     இன்னும் கொஞ்ச நாட்களில்  தெரியவரும்.   பராக் ஹுசைன் ஒபாமாவுக்கு      ஒரு முஸ்லிம் என்ற ரீதியிலதான்   தன்னை காப்பாற்றுவார் என  கடாபி நினைக்கிறார் போலும்..,
ஒபாமா கடாபியை காப்பாற்ற முன்வந்தாலும் பிரான்ஸ் அதிபர் நிக்கொலாஸ் சார்கோஸி  (nicolas-sarkozy)  இவரை உயிருடன் விட்டுவைக்கமாட்டார்.

காரணம்..,    2007 ஆம் ஆண்டு பிரான்சிஸில்    நடைபெற்ற ஐனாதிபதி  தேர்தலில் சார்கோஸி  வெல்லுவதற்கு, தேர்தல் பிரச்சாரத்துக்கு கடாபிதான்  நிறைய காசுகளை அள்ளிக்கொடுத்தவர்.   இப்ப  கடாபிக்கும் – சர்கோசிக்கும்  பிரச்சனை வந்தவுடன்,   அந்த காசை திருப்பி தரும்படி கடாபியின் மகன்  சர்கோசியிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு பதிலுபகாரமாக  கடாபியும், மகனும் விகுவிரைவில் கொல்லப்படுவார் என்பது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக