மார்ச் 09, 2011

கிபீர் விமானங்களை வீழ்த்த ‘இக்லா’ ஏவுகணைகளை கோரிய பிரபாகரன்!

2007 ஆம் ஆண்டில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அமெரிக்காவில் செயற்பட்டுவந்த திருநாவுக்கரசு எனப்படும் அமெரிக்க ஆயுதக் கொள்வனவு முகவருக்கு அனுப்பிய தகவலில் கிபீர் விமானங்கள் மூலம்        தனது படையினருக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்,
அவர்களிடம் இருக்கும்    எஸ்.ஏ.14 ஏவுகணைகள் மூலம் கிபீர் விமானங்களைத் தாக்கியழிக்க முடியாதெனவும் எனவே உடனடியாக    இக்லா எஸ்.ஏ.16 ஏவுகணைகளை கொள்வனவு செய்து அனுப்பும்படி கட்டளையிட்டதாகவும் அமெரிக்க எஸ்.பி.ஐ. விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அண்மையில் அமைச்சராக எஸ்.பி.ஐ.புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்படி புலிகள் இயக்கத்தின் அமெரிக்க ஆயுதக் கொள்வனவு முகவராகச் செயற்பட்டு வந்த திருநாவுக்கரசு எனப்படும் புலிகள் இயக்க முக்கிய உறுப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு     பிரபாகரன் இக்லா ஏவுகணைகளைக் கொள்வனவு செய்து அனுப்பும்படி அவசரமாக மேற்படி திருநாவுக்கரசுக்கு கட்டளையிட்டது கிபீர் விமானத்தாக்குதலில் புலிகள் இயக்க அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனும் மற்றும் சசாக்களும் கொல்லப்பட்ட பின்னரே ஆகும்.     எவ்வாறாயினும் மேற்படி பிரபாகரனின் ஆயுத முகவர் திருநாவுக்கரசுக்கு இக்லா ஏவுகணைகளை இரகசியமாகக் கொள்வனவு செய்ய முடியவில்லை.
அத்துடன், இவ்வாறு சட்டவிரோத ஆயுதக்கொள்வனவு  மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக அமெரிக்க எஸ்.பி.ஐ. புலனாய்வு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் பிரபாகரனின் ஆயுத முகவர் திருநாவுக்கரசு மற்றும் சகாக்கள் தலைமறைவாக செயற்படவேண்டியிருந்ததால் பிரபாகரனின் கட்டளைப்படி இக்லா ஏவுகணைகனையோ வேறு இரகசிய ஆயுதக்கொள்வனவுகளையோ செய்யமுடியவில்லை.
இவ்வாறு பிரபாகரனுக்கு இக்லா ஏவுகணைகள் கிடைத்திருந்தால் விமானப்படையினரின் கிபீர் விமானத்தாக்குதல் நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம் எனப் பாதுகாப்பு விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அமெரிக்க எஸ்.பி.ஐ.பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரபாகரனின் அமெரிக்க ஆயுத முகவர் திருநாவுக்கரசும் சிறிது காலத்திற்குள்    எஸ்.பி.ஐ.பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.    அவரிடம் எஸ்.பி.ஐ.மேற்கொண்ட விசாரணைகளிலேயே அவர் இவ்வாறு பிரபாகரனின் இக்லா ஏவுகணைகளுக்கான அவசர கட்டளை பற்றி தெரிவித்தார்.
இதுபற்றிய பாதுகாப்பு விமர்சனங்களுக்கேற்ப புலிகளுடனான யுத்தத்தில் கிபீர் விமானங்களின் பங்களிப்பு மிகவும் பாரியதெனவும் இதனால் விமான சாகசங்களின் போது இரண்டு கிபீர் விமானங்களின் விபத்தும் வீரமிக்க விமானியின் இழப்பும் பெரும் கவலைக்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவயின

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக